1 Corinthians 11:15
ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
Amos 8:5நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒருஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும்,
Matthew 5:15விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
Haggai 2:16அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.