பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருக ஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல் நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.
யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
but no Ye | לֹֽא | lōʾ | loh |
shall | תַעֲשׂ֥וּ | taʿăśû | ta-uh-SOO |
do | עָ֙וֶל֙ | ʿāwel | AH-VEL |
unrighteousness in | בַּמִּשְׁפָּ֔ט | bammišpāṭ | ba-meesh-PAHT |
judgment: not shalt | לֹֽא | lōʾ | loh |
thou | תִשָּׂ֣א | tiśśāʾ | tee-SA |
respect the | פְנֵי | pĕnê | feh-NAY |
person poor, the | דָ֔ל | dāl | dahl |
of | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
nor | תֶהְדַּ֖ר | tehdar | teh-DAHR |
honour the | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
person of the | גָד֑וֹל | gādôl | ɡa-DOLE |
mighty: righteousness in | בְּצֶ֖דֶק | bĕṣedeq | beh-TSEH-dek |
shalt thou judge | תִּשְׁפֹּ֥ט | tišpōṭ | teesh-POTE |
thy neighbour. | עֲמִיתֶֽךָ׃ | ʿămîtekā | uh-mee-TEH-ha |