Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aatharavaai udanirunthu athisayam kaana seitheer - ஆதரவாய் உடனிருந்து அதிசயம் காண செய்தீர்

ஆதரவாய் உடனிருந்து அதிசயம் காண செய்தீர்
ஆறுதலாய் உடனிருந்து அற்புதம் நடக்க செய்தீர் – (2)
எண்ணி முடியாத அதிசயம் செய்தீரே
எண்ணி முடியாத அற்புதம் செய்தீரே – (2)

காரிருளில் நான் நடந்த போதெல்லாம்
கர்த்தாவே உம் கரம் தாங்கினதே
கண்ணீரின் பாதையில் நடந்த போதெல்லாம்
கரம் பிடித்தென்னை தூக்கினீரே – (2)
நான் நடக்க முடியாத பாதையிலும்
அதிசயமாய் என்னை நடத்தினீரே – (2)

நம்பின மனிதர்கள் மாறினாலும்
யாக்கோபின் தேவன் என் அரணானீர்
நட்டாற்றில் நான் தவித்த போதும்
நல்ல மேய்ப்பன் என் கூட வந்தீர் – (2)
அறியாத வழியில் என்னை நடத்தி
அதிசயமாய் நடக்க வைத்தீர் – (2)

அக்கினி சூளையில் நடந்த போதும்
சேதமின்றி என்னை பாதுகாத்தீர்
ஆபத்து என்னை சூழ்ந்த போதும்
ஆவியானவர் கூட நின்றீர் – (2)
என் வாழ்நாளெல்லாம் நான் மகிழும்படி
உம் கிருபை என்னில் காண செய்தீர் – (2)

Aadharavaai Udanirundhu Lyrics in English

aatharavaay udanirunthu athisayam kaana seytheer
aaruthalaay udanirunthu arputham nadakka seytheer - (2)
ennnni mutiyaatha athisayam seytheerae
ennnni mutiyaatha arputham seytheerae - (2)

kaarirulil naan nadantha pothellaam
karththaavae um karam thaanginathae
kannnneerin paathaiyil nadantha pothellaam
karam pitiththennai thookkineerae - (2)
naan nadakka mutiyaatha paathaiyilum
athisayamaay ennai nadaththineerae - (2)

nampina manitharkal maarinaalum
yaakkopin thaevan en arannaaneer
nattattil naan thaviththa pothum
nalla maeyppan en kooda vantheer - (2)
ariyaatha valiyil ennai nadaththi
athisayamaay nadakka vaiththeer - (2)

akkini soolaiyil nadantha pothum
sethaminti ennai paathukaaththeer
aapaththu ennai soolntha pothum
aaviyaanavar kooda ninteer - (2)
en vaalnaalellaam naan makilumpati
um kirupai ennil kaana seytheer - (2)

என்னை செய்தீர் நடக்க முடியாத நடந்த போதும் உடனிருந்து அதிசயம் காண அற்புதம் எண்ணி செய்தீரே போதெல்லாம் உம் கரம் அதிசயமாய் கூட ஆதரவாய் தமிழ்