Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kallum Allave Kayam - கல்லும் அல்லவே காயம் வல்லும் அல்லவே இது

கல்லும் அல்லவே காயம் – வல்லும் அல்லவே – இது

வெள்ளி பொன் விலைமதியா மேரும் அல்லவே

வல்லமை பேசாதே நாளை வருவதறியாய் – அதால்
நல்ல வழி தேடி தேவ நாமத்தைத் தியானி

சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ – சாலமோன்
பார் அறியச் சொன்னதை நீ பார்த்தறியாயோ

காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே – இங்கே
போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே

வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே – மாய
தேக நரர் நாட்களும் சீக்கிரம் கழியுமே

இராப்பகல் இருள் வெளிச்சம் மாறும் வண்ணமே – ஐயோ
நராட்களின் மகிழ்ச்சிக்கு மா மாறுதல் உண்டே

பூவதும் உதிரும் பசும்புல்லும் வதங்கும் – அது
போலவே நரர் உருவம் மாறிவதங்கும்

மேலது கீழ் கீழதுமேல் ஆம் உருளைபோல் – நரர்
மேன்மையும் வாழ்வும் கீழது மேலும் ஆகுமே

நுண்ணிமை ஞானி என்றாலும் கீர்த்திபெற்றாலும் – ஐயோ
அன்னவன் மலையும் நேரம் யாவும் கலையும்

ஆசனம் துரைத்தனம் தத்துவங்கள் ஒழியும் – அர
சாண்ட மன்னாரும் ஒரு நாள் மாண்டொழிவாரே

யாவும் ஓட்டமாகப் பாயும் யாவும் அழியும் – மெய்த்
தேவபக்தி யே கெலிக்கும் ஜீவன் நிலைக்கும்

Kallum Allave Kayam Lyrics in English

Kallum allavae kaayam – vallum allavae – ithuvelli pon vilaimathiyaa maerum allavaevallamai paesaathae naalai varuvathariyaay – athaal nalla vali thaeti thaeva naamaththaith thiyaanisooriyan geelk kanndathellaam maayai allavo – saalamon paar ariyach sonnathai nee paarththariyaayokaattatiththa maekam pukaikkoppathaakavae – ingae pottiya manudar jeevan poy oliyumaevaekamaay vatiyum aattaுk koppathaakavae – maaya thaeka narar naatkalum seekkiram kaliyumaeiraappakal irul velichcham maaraுm vannnamae – aiyo naraatkalin makilchchikku maa maaraுthal unntaepoovathum uthirum pasumpullum vathangum – athu polavae narar uruvam maarivathangummaelathu geel geelathumael aam urulaipol – narar maenmaiyum vaalvum geelathu maelum aakumaenunnnnimai njaani entalum geerththipettaாlum – aiyo annavan malaiyum naeram yaavum kalaiyumaasanam thuraiththanam thaththuvangal oliyum – ara saannda mannaarum oru naal maanntolivaaraeyaavum ottamaakap paayum yaavum aliyum – meyth thaevapakthi yae kelikkum jeevan nilaikkum

PowerPoint Presentation Slides for the song Kallum Allave Kayam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kallum Allave Kayam – கல்லும் அல்லவே காயம் வல்லும் அல்லவே இது PPT
Kallum Allave Kayam PPT

நரர் அல்லவே ஜீவன் ஐயோ யாவும் கல்லும் காயம் வல்லும் இதுவெள்ளி பொன் விலைமதியா மேரும் அல்லவேவல்லமை பேசாதே நாளை வருவதறியாய் அதால் நல்ல வழி தமிழ்