தமிழ்

Semmariyin Virunthukku Alaikkapetror - செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்

செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர் 

அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க – 2

இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன 

உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன – 2 

உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் – 2 

உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய்

வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே 

வளமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே – 2 

எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே – 2 

உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே

உலகம் எல்லாம் இணைவது உன் உள்ளம் ஒன்றிலே 

இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே – 2 

மனித உள்ளம் மகிழ்வது உன் புனித உறவிலே – 2 

மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே 

Semmariyin Virunthukku Alaikkapetror Lyrics in English

semmariyin virunthukku alaikkappettaோr paerupettaோr 

avvirunthai unntida sentiduvom inpam ponga – 2

iraivan tharum virunthithu athai unnnath thataiyenna 

uraiya varum iraivanai naam aerkath thataiyenna – 2 

ullak kathavu thiranthathu athan ullae vaaluvaay – 2 

uvakai ennum oli konarnthu emmai aaluvaay

vaanam poliya poomi vilaiya valamum pongumae 

valamae varum oliyaal solai malarum engumae – 2 

enthan unavaay nee vanthaalae inpam thangumae – 2 

unthan arulai vithaiththaal intha ulakam uyyumae

ulakam ellaam innaivathu un ullam ontilae 

iyarkai niraivu kolvathu un seyalin pannpilae – 2 

manitha ullam makilvathu un punitha uravilae – 2 

maraiyum vaalvu malarvathu un makilvin pangilae 

PowerPoint Presentation Slides for the song Semmariyin Virunthukku Alaikkapetror

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites