தமிழ்

Sinthai Seiyyum Enil - சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்

சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்
சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர்

தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும்
விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர்

பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின் நேய
சீலனாம் கிறிஸ்தியேசுக்கும்
சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ
கோலம் என்றன் பங்கதாயிற்று
தந்தைதாயார் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க
வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர்

திரியேகதேவனே என்றே அவரைவிட்டுப்
பிரியேன் என் பிராணன் போனாலும்
அரிய அவரின்தயையே எனக்கு என்றும்
உரிய ஒன்றான பொருளே
பொய் லோகம் மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும்
ஓய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனகென்றும்

பக்தியுள்ள ஜீவியம் செய்து பகலின் சேயாய்
எத்திசையினும் விளங்கிடச்
சுத்தமனம் செய்கையைத்தாரும் எனைநான் என்றும்
தத்தம் செய்யக் கற்பித்தருளும்
உன்னதத்தில் வாழ் தந்தைக்கும் உயர்சுதன் ஆவியர்க்கும்
என்னகத்தினின்றும் துதிஏறுவதாக ஆமேன்

Sinthai Seiyyum Enil Lyrics in English

sinthai seyyum enil nirampuveer thaevaavi umaich
sinthai seyyum enil nirappuveer

thanthaip paranaarinintum mainthanaar kiristhinintum
vinthaiyaayp purappattaekum viththakaththin aaviyaeneer

paalanaayp paramathanthaikkum avarin naeya
seelanaam kiristhiyaesukkum
saalavae entennaich serththittir aththaalae thaeva
kolam entan pangathaayittu
thanthaithaayaar thantha vaakkaich sonthavaayaal naan kodukka
vanthirukkum vaelaithanil thanthaisuthan aaviyae neer

thiriyaekathaevanae ente avaraivittup
piriyaen en piraanan ponaalum
ariya avarinthayaiyae enakku entum
uriya ontana porulae
poy lokam maamsam ennaip pitiththiluththaalum
oy parisuththa aavi uthavuveer enakentum

pakthiyulla jeeviyam seythu pakalin seyaay
eththisaiyinum vilangidach
suththamanam seykaiyaiththaarum enainaan entum
thaththam seyyak karpiththarulum
unnathaththil vaal thanthaikkum uyarsuthan aaviyarkkum
ennakaththinintum thuthiaeruvathaaka aamaen

PowerPoint Presentation Slides for the song Sinthai Seiyyum Enil

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites