Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un Pukazhai Paatuvathu - உன் புகழைப் பாடுவது என்

உன் புகழைப் பாடுவது – என்
வாழ்வின் இன்பமய்யா
உன்னருளைப் போற்றுவது – என்
வாழ்வின் செல்வமய்யா

1. துன்பத்திலும் இன்பத்திலும் – நல்
தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் – நல்
அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல் – நீ
என்றும் அணைத்திருப்பாய்

2. பல்லுயிரைப் படைத்திருப்பாய் – நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் – நீ
என்னையும் ஏன் அழைத்தாய்
அன்பினுக்கு அடைக்குந்தாழ் ஒன்று
இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல் நான்
என்றும் வாழ்ந்திருப்பேன்

Un Pukazhai Paatuvathu Lyrics in English

un pukalaip paaduvathu – en
vaalvin inpamayyaa
unnarulaip pottuvathu – en
vaalvin selvamayyaa

1. thunpaththilum inpaththilum – nal
thanthaiyaay neeyiruppaay
kannnayarak kaaththirukkum – nal
annaiyaay arukiruppaay
anpu enum amuthaththinai naan
arunthida enakkalippaay
unnintu piriyaamal – nee
entum annaiththiruppaay

2. palluyiraip pataiththiruppaay – nee
ennaiyum aen pataiththaay
paavaththilae vaalnthirunthum – nee
ennaiyum aen alaiththaay
anpinukku ataikkunthaal ontu
illai entunarnthaen
un anpai maravaamal naan
entum vaalnthiruppaen

PowerPoint Presentation Slides for the song Un Pukazhai Paatuvathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Pukazhai Paatuvathu – உன் புகழைப் பாடுவது என் PPT
Un Pukazhai Paatuvathu PPT

தமிழ்