Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 20:18 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 20 Deuteronomy 20:18

உபாகமம் 20:18
அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

Tamil Indian Revised Version
அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவம்செய்யாமலும் இருக்க இப்படிச் செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
ஏனென்றால் அவர்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களை எந்தவொரு பாவத்தையும் செய்யக் கற்றுக்கொடுக்க முடியாது. அவர்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொண்ட அந்த அருவருப்பான செயல்களில் எந்த ஒன்றையும் உங்களை செய்யுமாறு கற்றுக்கொடுக்க இயலாத வண்ணம் அவர்களை அழிக்கவேண்டும்.

Thiru Viviliam
அதனால், தங்கள் தெய்வங்களுக்காகச் செய்கின்ற அருவருக்கத்தக்கவற்றை உனக்குக் கற்றுக்கொடுத்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ய உன்னைத் தூண்டமாட்டார்கள்.

Deuteronomy 20:17Deuteronomy 20Deuteronomy 20:19

King James Version (KJV)
That they teach you not to do after all their abominations, which they have done unto their gods; so should ye sin against the LORD your God.

American Standard Version (ASV)
that they teach you not to do after all their abominations, which they have done unto their gods; so would ye sin against Jehovah your God.

Bible in Basic English (BBE)
So that you may not take them as your example and do all the disgusting things which they do in the worship of their gods, so sinning against the Lord your God.

Darby English Bible (DBY)
that they teach you not to do according to all their abominations, which they have done unto their gods, so that ye sin against Jehovah your God.

Webster’s Bible (WBT)
That they may not teach you to do after all their abominations which they have done to their gods; so would ye sin against the LORD your God.

World English Bible (WEB)
that they not teach you to do after all their abominations, which they have done to their gods; so would you sin against Yahweh your God.

Young’s Literal Translation (YLT)
so that they teach you not to do according to all their abominations which they have done to their gods, and ye have sinned against Jehovah your God.

உபாகமம் Deuteronomy 20:18
அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.
That they teach you not to do after all their abominations, which they have done unto their gods; so should ye sin against the LORD your God.

לְמַ֗עַןlĕmaʿanleh-MA-an
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
יְלַמְּד֤וּyĕlammĕdûyeh-la-meh-DOO
אֶתְכֶם֙ʾetkemet-HEM
לַֽעֲשׂ֔וֹתlaʿăśôtla-uh-SOTE
כְּכֹל֙kĕkōlkeh-HOLE
תּֽוֹעֲבֹתָ֔םtôʿăbōtāmtoh-uh-voh-TAHM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עָשׂ֖וּʿāśûah-SOO
לֵֽאלֹהֵיהֶ֑םlēʾlōhêhemlay-loh-hay-HEM
וַֽחֲטָאתֶ֖םwaḥăṭāʾtemva-huh-ta-TEM
לַֽיהוָ֥הlayhwâlai-VA
אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM

Cross Reference

உபாகமம் 12:30
அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்தபடி நானும் சேவிப்பேன் என்று சொல்லி அவர்களுடைய தேவர்களைக் குறித்துக் கேட்டு விசாரியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

யாத்திராகமம் 23:33
அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.

சங்கீதம் 106:34
கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 18:3
அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.

2 தீமோத்தேயு 2:17
அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

1 தீமோத்தேயு 6:5
கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

2 தெசலோனிக்கேயர் 3:14
மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.

எபேசியர் 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

2 கொரிந்தியர் 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 கொரிந்தியர் 15:33
மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.

நியாயாதிபதிகள் 2:3
ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.

யோசுவா 23:13
உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.

உபாகமம் 18:19
என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

உபாகமம் 7:4
என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.

யாத்திராகமம் 34:16
அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.


Tags அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்
Deuteronomy 20:18 in Tamil Concordance Deuteronomy 20:18 in Tamil Interlinear Deuteronomy 20:18 in Tamil Image