நியாயாதிபதிகள் 11:27
நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறதினால் நீர் தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.
Tamil Indian Revised Version
நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் உங்களுக்கெதிராகப் பாவம் செய்யவில்லை. ஆனால் இஸ்ரவேலருக்கெதிராக நீங்கள் தீமை செய்கிறீர்கள். உண்மையான நீதிபதியாகிய கர்த்தரே இஸ்ரவேலர்கள், அம்மோனியர்கள் ஆகிய இருவரிடையே சரியானவர் யார் என்பதைத் தீர்மானிக்கட்டும்!” என்றனர்.
Thiru Viviliam
நான் உமக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால், நீர் எனக்கு எதிராகப் போர் தொடுத்துத் தீமை விளைவிக்கின்றீர். நீதி வழங்கும் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கும் அம்மோனிய மக்களுக்கும் இடையே இன்று நீதி வழங்கட்டும்”.
King James Version (KJV)
Wherefore I have not sinned against thee, but thou doest me wrong to war against me: the LORD the Judge be judge this day between the children of Israel and the children of Ammon.
American Standard Version (ASV)
I therefore have not sinned against thee, but thou doest me wrong to war against me: Jehovah, the Judge, be judge this day between the children of Israel and the children of Ammon.
Bible in Basic English (BBE)
So I have done no wrong against you, but you are doing wrong to me in fighting against me: may the Lord, who is Judge this day, be judge between the children of Israel and the children of Ammon.
Darby English Bible (DBY)
I therefore have not sinned against you, and you do me wrong by making war on me; the LORD, the Judge, decide this day between the people of Israel and the people of Ammon.”
Webster’s Bible (WBT)
Wherefore I have not sinned against thee, but thou doest me wrong to war against me: the LORD the Judge be judge this day between the children of Israel and the children of Ammon.
World English Bible (WEB)
I therefore have not sinned against you, but you do me wrong to war against me: Yahweh, the Judge, be judge this day between the children of Israel and the children of Ammon.
Young’s Literal Translation (YLT)
And I — I have not sinned against thee, and thou art doing with me evil — to fight against me. Jehovah, the Judge, doth judge to-day between the sons of Israel and the sons of Ammon.’
நியாயாதிபதிகள் Judges 11:27
நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறதினால் நீர் தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.
Wherefore I have not sinned against thee, but thou doest me wrong to war against me: the LORD the Judge be judge this day between the children of Israel and the children of Ammon.
| וְאָֽנֹכִי֙ | wĕʾānōkiy | veh-ah-noh-HEE | |
| לֹֽא | lōʾ | loh | |
| חָטָ֣אתִי | ḥāṭāʾtî | ha-TA-tee | |
| לָ֔ךְ | lāk | lahk | |
| וְאַתָּ֞ה | wĕʾattâ | veh-ah-TA | |
| עֹשֶׂ֥ה | ʿōśe | oh-SEH | |
| אִתִּ֛י | ʾittî | ee-TEE | |
| רָעָ֖ה | rāʿâ | ra-AH | |
| לְהִלָּ֣חֶם | lĕhillāḥem | leh-hee-LA-hem | |
| בִּ֑י | bî | bee | |
| יִשְׁפֹּ֨ט | yišpōṭ | yeesh-POTE | |
| יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA | |
| הַשֹּׁפֵט֙ | haššōpēṭ | ha-shoh-FATE | |
| הַיּ֔וֹם | hayyôm | HA-yome | |
| בֵּ֚ין | bên | bane | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וּבֵ֖ין | ûbên | oo-VANE | |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| עַמּֽוֹן׃ | ʿammôn | ah-mone |
Cross Reference
1 சாமுவேல் 24:15
கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
1 சாமுவேல் 24:12
கர்த்தர் எனக்கும் உமக்கும் நடு நின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.
ஆதியாகமம் 31:53
ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.
ஆதியாகமம் 18:25
துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத்தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
ஆதியாகமம் 16:5
அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.
ரோமர் 14:10
இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
2 கொரிந்தியர் 5:10
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
2 கொரிந்தியர் 11:11
இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார்.
2 தீமோத்தேயு 4:8
நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.
எபிரெயர் 12:23
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணமாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,
யோவான் 5:22
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
பிரசங்கி 12:14
ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
பிரசங்கி 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
யோபு 9:15
நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன்.
யோபு 23:7
அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக்கொள்வேன்.
சங்கீதம் 7:8
கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
சங்கீதம் 7:11
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
சங்கீதம் 50:6
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி.(சேலா.)
சங்கீதம் 75:7
தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
சங்கீதம் 82:8
தேவனே எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
சங்கீதம் 94:2
பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்.
சங்கீதம் 98:9
அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
1 சாமுவேல் 2:10
கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.
Tags நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை நீர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறதினால் நீர் தான் எனக்கு அநியாயம் செய்கிறீர் நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்
Judges 11:27 in Tamil Concordance Judges 11:27 in Tamil Interlinear Judges 11:27 in Tamil Image