Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Habakkuk 2:16 in Tamil

Home Bible Habakkuk Habakkuk 2 Habakkuk 2:16

ஆபகூக் 2:16
நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய்.

Tamil Indian Revised Version
நீ மகிமையினால் அல்ல, வெட்கத்தினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று காட்டிக்கொள்; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் வெட்கமான வாந்திபண்ணுவாய்.

Tamil Easy Reading Version
“ஆனால், அந்த மனிதன் கர்த்தருடைய கோபத்தை அறிவான். அக்கோபமானது கர்த்தருடைய வலதுகையில் உள்ள விஷம் நிறைந்த கிண்ணத்தைப் போன்றது. அம்மனிதன் அக்கோபத்தைச் சுவைப்பான். அவன் குடிக்காரனைப்போன்று கீழே தரையில் விழுவான். “தீமையான அரசனே, நீ அக்கிண்ணத்திலிருந்து குடிப்பாய். நீ மகிமையை அல்ல அவமானத்தைப் பெறுவாய்.

Thiru Viviliam
⁽நீ மேன்மை அடையாது␢ ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்;␢ நீயும் குடி,␢ குடித்துவிட்டுத் தள்ளாடு;␢ ஆண்டவரின் வலக்கையிலுள்ள␢ தண்டனைக்கலம்␢ உன்னிடம் திரும்பி வரும்;␢ அப்போது உன் மேன்மை␢ மானக்கேடாய் மாறும்.⁾

Habakkuk 2:15Habakkuk 2Habakkuk 2:17

King James Version (KJV)
Thou art filled with shame for glory: drink thou also, and let thy foreskin be uncovered: the cup of the LORD’s right hand shall be turned unto thee, and shameful spewing shall be on thy glory.

American Standard Version (ASV)
Thou art filled with shame, and not glory: drink thou also, and be as one uncircumcised; the cup of Jehovah’s right hand shall come round unto thee, and foul shame shall be upon thy glory.

Bible in Basic English (BBE)
You are full of shame in place of glory: take your part in the drinking, and let your shame be uncovered: the cup of the Lord’s right hand will come round to you and your glory will be covered with shame.

Darby English Bible (DBY)
Thou art filled with shame instead of glory; drink thou also, and let thy foreskin be uncovered: the cup of Jehovah’s right hand shall be turned unto thee, and a shameful spewing shall be on thy glory.

World English Bible (WEB)
You are filled with shame, and not glory. You will also drink, and be exposed! The cup of Yahweh’s right hand will come around to you, and disgrace will cover your glory.

Young’s Literal Translation (YLT)
Thou hast been filled — shame without honour, Drink thou also, and be uncircumcised, Turn round unto thee doth the cup of the right hand of Jehovah, And shameful spewing `is’ on thine honour.

ஆபகூக் Habakkuk 2:16
நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய்.
Thou art filled with shame for glory: drink thou also, and let thy foreskin be uncovered: the cup of the LORD's right hand shall be turned unto thee, and shameful spewing shall be on thy glory.

שָׂבַ֤עְתָּśābaʿtāsa-VA-ta
קָלוֹן֙qālônka-LONE
מִכָּב֔וֹדmikkābôdmee-ka-VODE
שְׁתֵ֥הšĕtēsheh-TAY
גַםgamɡahm
אַ֖תָּהʾattâAH-ta
וְהֵֽעָרֵ֑לwĕhēʿārēlveh-hay-ah-RALE
תִּסּ֣וֹבtissôbTEE-sove
עָלֶ֗יךָʿālêkāah-LAY-ha
כּ֚וֹסkôskose
יְמִ֣יןyĕmînyeh-MEEN
יְהוָ֔הyĕhwâyeh-VA
וְקִיקָל֖וֹןwĕqîqālônveh-kee-ka-LONE
עַלʿalal
כְּבוֹדֶֽךָ׃kĕbôdekākeh-voh-DEH-ha

Cross Reference

ஏசாயா 47:3
உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் இலச்சை காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:6
அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.

பிலிப்பியர் 3:19
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

நாகூம் 3:5
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,

ஓசியா 7:5
நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத் துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான்.

ஓசியா 4:7
அவர்கள் எவ்வளவாய்ப் பெருகினார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை இலச்சையாக மாறப்பண்ணுவேன்.

புலம்பல் 4:21
ஊத்ஸ்தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் தாண்டிவரும், அப்பொழுது நீ வெறித்து, மானபங்கமாய்க் கிடப்பாய்.

எரேமியா 51:57
அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.

எரேமியா 25:26
வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின்மீதிலுள்ள சகலதேசத்து ராஜாக்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான் என்றார்.

எரேமியா 25:15
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,

ஏசாயா 51:21
ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடியாமல் வெறிகொண்டவளே, நீ கேள்.

ஏசாயா 49:26
உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 28:7
ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய் நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்,

ஏசாயா 20:4
அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.

நீதிமொழிகள் 3:35
ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.

சங்கீதம் 75:8
கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.


Tags நீ மகிமையினால் அல்ல இலச்சையினால் நிரப்பப்படுவாய் நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும் உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய்
Habakkuk 2:16 in Tamil Concordance Habakkuk 2:16 in Tamil Interlinear Habakkuk 2:16 in Tamil Image