யோவான் 5:17
இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.
Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: என் பிதா இதுவரைக்கும் செயல்களைச் செய்துவருகிறார், நானும் செயல்களைச் செய்துவருகிறேன் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் இயேசுவோ யூதர்களிடம், “எனது பிதா (தேவன்) வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நானும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.
Thiru Viviliam
இயேசு அவர்களிடம், “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்” என்றார்.
King James Version (KJV)
But Jesus answered them, My Father worketh hitherto, and I work.
American Standard Version (ASV)
But Jesus answered them, My Father worketh even until now, and I work.
Bible in Basic English (BBE)
But his answer was: My Father is still working even now, and so I am working.
Darby English Bible (DBY)
But Jesus answered them, My Father worketh hitherto and I work.
World English Bible (WEB)
But Jesus answered them, “My Father is still working, so I am working, too.”
Young’s Literal Translation (YLT)
And Jesus answered them, `My Father till now doth work, and I work;’
யோவான் John 5:17
இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.
But Jesus answered them, My Father worketh hitherto, and I work.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| ἀπεκρίνατο | apekrinato | ah-pay-KREE-na-toh | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| Ὁ | ho | oh | |
| πατήρ | patēr | pa-TARE | |
| μου | mou | moo | |
| ἕως | heōs | AY-ose | |
| ἄρτι | arti | AR-tee | |
| ἐργάζεται | ergazetai | are-GA-zay-tay | |
| κἀγὼ | kagō | ka-GOH | |
| ἐργάζομαι | ergazomai | are-GA-zoh-may |
Cross Reference
யோவான் 14:10
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
யோவான் 9:4
பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.
எபிரெயர் 1:3
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
கொலோசெயர் 1:16
ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
1 கொரிந்தியர் 12:6
கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:28
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.
மத்தேயு 10:29
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
ஏசாயா 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
சங்கீதம் 65:6
வல்லமையை இடைகட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி,
ஆதியாகமம் 2:1
இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
Tags இயேசு அவர்களை நோக்கி என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார் நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்
John 5:17 in Tamil Concordance John 5:17 in Tamil Interlinear John 5:17 in Tamil Image