Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 12:50 in Tamil

Home Bible John John 12 John 12:50

யோவான் 12:50
அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

Tamil Indian Revised Version
அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

Tamil Easy Reading Version
என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார்.

Thiru Viviliam
அவருடைய கட்டளை நிலை வாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்”.

John 12:49John 12

King James Version (KJV)
And I know that his commandment is life everlasting: whatsoever I speak therefore, even as the Father said unto me, so I speak.

American Standard Version (ASV)
And I know that his commandment is life eternal: the things therefore which I speak, even as the Father hath said unto me, so I speak.

Bible in Basic English (BBE)
And I have knowledge that his order is eternal life: so that the things which I say, I say them even as the Father says them to me.

Darby English Bible (DBY)
and I know that his commandment is life eternal. What therefore I speak, as the Father has said to me, so I speak.

World English Bible (WEB)
I know that his commandment is eternal life. The things therefore which I speak, even as the Father has said to me, so I speak.”

Young’s Literal Translation (YLT)
and I have known that His command is life age-during; what, therefore, I speak, according as the Father hath said to me, so I speak.’

யோவான் John 12:50
அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
And I know that his commandment is life everlasting: whatsoever I speak therefore, even as the Father said unto me, so I speak.

καὶkaikay
οἶδαoidaOO-tha
ὅτιhotiOH-tee
ay
ἐντολὴentolēane-toh-LAY
αὐτοῦautouaf-TOO
ζωὴzōēzoh-A
αἰώνιόςaiōniosay-OH-nee-OSE
ἐστινestinay-steen
haa
οὖνounoon
λαλῶlalōla-LOH
ἐγὼegōay-GOH
καθὼςkathōska-THOSE
εἴρηκένeirēkenEE-ray-KANE
μοιmoimoo
hooh
πατήρpatērpa-TARE
οὕτωςhoutōsOO-tose
λαλῶlalōla-LOH

Cross Reference

யோவான் 6:68
சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.

யோவான் 17:3
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

யோவான் 6:63
ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

யோவான் 20:31
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

1 தீமோத்தேயு 1:16
அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.

1 யோவான் 2:25
நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.

1 யோவான் 3:23
நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.

1 யோவான் 5:11
தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம்.

1 யோவான் 5:20
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.


Tags அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன் ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்
John 12:50 in Tamil Concordance John 12:50 in Tamil Interlinear John 12:50 in Tamil Image