Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 9:29 in Tamil

Home Bible Romans Romans 9 Romans 9:29

ரோமர் 9:29
அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.

Tamil Indian Revised Version
அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம்.

Tamil Easy Reading Version
“கர்த்தருக்கு அனைத்து வல்லமையும் உண்டு. எங்களுக்காக அவர் சிலரைக் காப்பாற்றினார். அவர் அதனைச் செய்திருக்காவிட்டால் இப்போது நாங்கள் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்தவராய் இருப்போம்” என்று ஏசாயா சொன்னார்.

Thiru Viviliam
⁽“படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்; கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம்”⁾ என்றும் எசாயா முன்னுரைத்துள்ளார்.

Romans 9:28Romans 9Romans 9:30

King James Version (KJV)
And as Esaias said before, Except the Lord of Sabaoth had left us a seed, we had been as Sodoma, and been made like unto Gomorrha.

American Standard Version (ASV)
And, as Isaiah hath said before, Except the Lord of Sabaoth had left us a seed, We had become as Sodom, and had been made like unto Gomorrah.

Bible in Basic English (BBE)
And, as Isaiah had said before, If the Lord of armies had not given us a seed, we would have been like Sodom and Gomorrah.

Darby English Bible (DBY)
And according as Esaias said before, Unless [the] Lord of hosts had left us a seed, we had been as Sodom, and made like even as Gomorrha.

World English Bible (WEB)
As Isaiah has said before, “Unless the Lord of Hosts{Greek: Sabaoth} had left us a seed, We would have become like Sodom, And would have been made like Gomorrah.”

Young’s Literal Translation (YLT)
and according as Isaiah saith before, `Except the Lord of Sabaoth did leave to us a seed, as Sodom we had become, and as Gomorrah we had been made like.’

ரோமர் Romans 9:29
அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
And as Esaias said before, Except the Lord of Sabaoth had left us a seed, we had been as Sodoma, and been made like unto Gomorrha.

καὶkaikay
καθὼςkathōska-THOSE
προείρηκενproeirēkenproh-EE-ray-kane
Ἠσαΐαςēsaiasay-sa-EE-as
Εἰeiee
μὴmay
κύριοςkyriosKYOO-ree-ose
Σαβαὼθsabaōthsa-va-OHTH
ἐγκατέλιπενenkatelipenayng-ka-TAY-lee-pane
ἡμῖνhēminay-MEEN
σπέρμαspermaSPARE-ma
ὡςhōsose
ΣόδομαsodomaSOH-thoh-ma
ἂνanan
ἐγενήθημενegenēthēmenay-gay-NAY-thay-mane
καὶkaikay
ὡςhōsose
ΓόμοῤῥαgomorrhaGOH-more-ra
ἂνanan
ὡμοιώθημενhōmoiōthēmenoh-moo-OH-thay-mane

Cross Reference

ஏசாயா 1:9
சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.

யாக்கோபு 5:4
இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.

எரேமியா 50:40
தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.

ஏசாயா 13:19
ராஜ்யங்களுக்குள் அலங்காரமும் கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.

ஆமோஸ் 4:11
சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 49:18
சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அங்கே ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை.

உபாகமம் 29:23
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,

யூதா 1:7
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

2 பேதுரு 2:6
அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு;

செப்பனியா 2:6
சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத்தோழங்களுமாகும்.

புலம்பல் 4:6
கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப் பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.

புலம்பல் 3:22
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

ஏசாயா 6:13
ஆகிலும் அதில் இன்னும் பத்திலொரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.

ஆதியாகமம் 19:24
அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,


Tags அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்
Romans 9:29 in Tamil Concordance Romans 9:29 in Tamil Interlinear Romans 9:29 in Tamil Image