Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 5:17 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 5 Jeremiah 5:17

எரேமியா 5:17
அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும் உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் உன் மகன்களும் உன் மகள்களும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சைப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய பாதுகாப்பான பட்டணங்களைப் பட்டயத்தால் வெறுமையாக்குவார்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் சேகரித்து வைத்த விளைச்சலை எல்லாம் அந்தப் படைவீரர்கள் உண்பார்கள். உங்கள் உணவு முழுவதையும் அவர்கள் உண்பார்கள். அவர்கள் உங்களது மகன்களையும் மகள்களையும் உண்பார்கள் (அழிப்பார்கள்). அவர்கள் உங்கள் ஆடுகளையும் உங்கள் மாடுகளையும் உண்பார்கள். அவர்கள் உங்கள் திராட்சைப் பழங்களையும், அத்திப் பழங்களையும் உண்பார்கள். அவர்கள் தமது வாள்களால் உங்களது பலமான நகரங்களை அழிப்பார்கள். நீங்கள் நம்பிக்கை வைத்த உங்களது பலமான நகரங்களை அவர்கள் அழிப்பார்கள்!” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Thiru Viviliam
⁽அவர்கள் உன் விளைச்சலையும்␢ உணவையும் விழுங்கிவிடுவார்கள்;␢ புதல்வர், புதல்வியரை␢ விழுங்கிவிடுவார்கள்;␢ உன் ஆடு மாடுகளை␢ விழுங்கிவிடுவார்கள்;␢ உன் திராட்சைக் கொடிகளையும்␢ அத்தி மரங்களையும்␢ விழுங்கிவிடுவார்கள்;␢ நீ நம்பியிருக்கும்␢ உன் அரண்சூழ் நகர்களை␢ வாளால் அழிப்பார்கள்.⁾⒫

Jeremiah 5:16Jeremiah 5Jeremiah 5:18

King James Version (KJV)
And they shall eat up thine harvest, and thy bread, which thy sons and thy daughters should eat: they shall eat up thy flocks and thine herds: they shall eat up thy vines and thy fig trees: they shall impoverish thy fenced cities, wherein thou trustedst, with the sword.

American Standard Version (ASV)
And they shall eat up thy harvest, and thy bread, `which’ thy sons and thy daughters should eat; they shall eat up thy flocks and thy herds; they shall eat up thy vines and thy fig-trees; they shall beat down thy fortified cities, wherein thou trustest, with the sword.

Bible in Basic English (BBE)
They will take all the produce of your fields, which would have been food for your sons and your daughters: they will take your flocks and your herds: they will take all your vines and your fig-trees: and with the sword they will make waste your walled towns in which you put your faith.

Darby English Bible (DBY)
And they shall eat up thy harvest and thy bread, they shall eat up thy sons and thy daughters, they shall eat up thy flocks and thy herds, they shall eat up thy vines and thy fig-trees; they shall destroy with the sword thy strong cities, wherein thou trustedst.

World English Bible (WEB)
They shall eat up your harvest, and your bread, [which] your sons and your daughters should eat; they shall eat up your flocks and your herds; they shall eat up your vines and your fig trees; they shall beat down your fortified cities, in which you trust, with the sword.

Young’s Literal Translation (YLT)
And it hath consumed thy harvest and thy bread, They consume thy sons, and thy daughters, It consumeth thy flock, and thy herd, It consumeth thy vine, and thy fig-tree, It maketh poor thy fenced cities, In which thou art trusting — by the sword.

எரேமியா Jeremiah 5:17
அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும் உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்.
And they shall eat up thine harvest, and thy bread, which thy sons and thy daughters should eat: they shall eat up thy flocks and thine herds: they shall eat up thy vines and thy fig trees: they shall impoverish thy fenced cities, wherein thou trustedst, with the sword.

וְאָכַ֨לwĕʾākalveh-ah-HAHL
קְצִֽירְךָ֜qĕṣîrĕkākeh-tsee-reh-HA
וְלַחְמֶ֗ךָwĕlaḥmekāveh-lahk-MEH-ha
יֹאכְלוּ֙yōʾkĕlûyoh-heh-LOO
בָּנֶ֣יךָbānêkāba-NAY-ha
וּבְנוֹתֶ֔יךָûbĕnôtêkāoo-veh-noh-TAY-ha
יֹאכַ֤לyōʾkalyoh-HAHL
צֹאנְךָ֙ṣōʾnĕkātsoh-neh-HA
וּבְקָרֶ֔ךָûbĕqārekāoo-veh-ka-REH-ha
יֹאכַ֥לyōʾkalyoh-HAHL
גַּפְנְךָ֖gapnĕkāɡahf-neh-HA
וּתְאֵנָתֶ֑ךָûtĕʾēnātekāoo-teh-ay-na-TEH-ha
יְרֹשֵׁ֞שׁyĕrōšēšyeh-roh-SHAYSH
עָרֵ֣יʿārêah-RAY
מִבְצָרֶ֗יךָmibṣārêkāmeev-tsa-RAY-ha
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אַתָּ֛הʾattâah-TA
בֹּטֵ֥חַbōṭēaḥboh-TAY-ak
בָּהֵ֖נָּהbāhēnnâba-HAY-na
בֶּחָֽרֶב׃beḥārebbeh-HA-rev

Cross Reference

உபாகமம் 28:33
உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகலநாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.

லேவியராகமம் 26:16
நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.

செப்பனியா 3:6
ஜாதிகளைச் சங்கரித்தேன்; அவர்கள் துருகங்கள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனுஷரில்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின.

ஆபகூக் 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,

ஓசியா 8:14
இஸ்ரவேல் உன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.

எசேக்கியேல் 36:4
இஸ்ரவேல் மலைகளே நீங்கள் கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும் ஆடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட அவாந்தர இடங்களுக்கும் வெறுமையாய் விடப்பட்ட பட்டணங்களுக்கும் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான புறஜாதிகளுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாய்ப் போனபடியினால்,

புலம்பல் 2:2
ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.

எரேமியா 50:17
இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

எரேமியா 50:7
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள் மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.

எரேமியா 8:16
தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.

எரேமியா 4:26
பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.

எரேமியா 4:7
உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.

எரேமியா 1:15
இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன் தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.

ஏசாயா 65:22
அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

ஏசாயா 62:9
அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்.

நியாயாதிபதிகள் 6:3
இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;

உபாகமம் 28:30
பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.


Tags அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும் உன் அப்பத்தையும் சாப்பிட்டு உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்
Jeremiah 5:17 in Tamil Concordance Jeremiah 5:17 in Tamil Interlinear Jeremiah 5:17 in Tamil Image