1பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கடவாய்.And thou, son of man, take thee a sharp knife, take thee a barber's razor, and cause it to pass upon thine head and upon thy beard: then take thee balances to weigh, and divide the hair.
2மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.Thou shalt burn with fire a third part in the midst of the city, when the days of the siege are fulfilled: and thou shalt take a third part, and smite about it with a knife: and a third part thou shalt scatter in the wind; and I will draw out a sword after them.
3அதில் கொஞ்சம்மாத்திரம் எடுத்து, அதை உன் வஸ்திரத்தோரங்களில் முடிந்துவைப்பாயாக.Thou shalt also take thereof a few in number, and bind them in thy skirts.
4பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பாயாக; அதிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் விரோதமாக அக்கினி புறப்படும்.Then take of them again, and cast them into the midst of the fire, and burn them in the fire; for thereof shall a fire come forth into all the house of Israel.
5கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.Thus saith the Lord GOD; This is Jerusalem: I have set it in the midst of the nations and countries that are round about her.
6அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும் தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற் போனார்கள்.And she hath changed my judgments into wickedness more than the nations, and my statutes more than the countries that are round about her: for they have refused my judgments and my statutes, they have not walked in them.
7ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,Therefore thus saith the Lord GOD; Because ye multiplied more than the nations that are round about you, and have not walked in my statutes, neither have kept my judgments, neither have done according to the judgments of the nations that are round about you;
8இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி,Therefore thus saith the Lord GOD; Behold, I, even I, am against thee, and will execute judgments in the midst of thee in the sight of the nations.
9நான் முன்பு செய்யாததும் இனிச்செய்யாதிருப்பதுமானவிதமாய் உனக்கு உன் எல்லா அருவருப்புகளினிமித்தமும் செய்வேன்.And I will do in thee that which I have not done, and whereunto I will not do any more the like, because of all thine abominations.
10ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.Therefore the fathers shall eat the sons in the midst of thee, and the sons shall eat their fathers; and I will execute judgments in thee, and the whole remnant of thee will I scatter into all the winds.
11ஆதலால், சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.Wherefore, as I live, saith the Lord GOD; Surely, because thou hast defiled my sanctuary with all thy detestable things, and with all thine abominations, therefore will I also diminish thee; neither shall mine eye spare, neither will I have any pity.
12உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.A third part of thee shall die with the pestilence, and with famine shall they be consumed in the midst of thee: and a third part shall fall by the sword round about thee; and I will scatter a third part into all the winds, and I will draw out a sword after them.
13இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.Thus shall mine anger be accomplished, and I will cause my fury to rest upon them, and I will be comforted: and they shall know that I the LORD have spoken it in my zeal, when I have accomplished my fury in them.
14கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன்.Moreover I will make thee waste, and a reproach among the nations that are round about thee, in the sight of all that pass by.
15நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாய் இருக்கும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.So it shall be a reproach and a taunt, an instruction and an astonishment unto the nations that are round about thee, when I shall execute judgments in thee in anger and in fury and in furious rebukes. I the LORD have spoken it.
16உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன்.When I shall send upon them the evil arrows of famine, which shall be for their destruction, and which I will send to destroy you: and I will increase the famine upon you, and will break your staff of bread:
17பஞ்சத்தையும், உன்னைப் பிள்ளையில்லாமற்போகப்பண்ணும் துஷ்டமிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; கொள்ளைநோயும் இரத்தஞ்சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும்; பட்டயத்தை நான் உன்மேல் வரப்பண்ணுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.So will I send upon you famine and evil beasts, and they shall bereave thee: and pestilence and blood shall pass through thee; and I will bring the sword upon thee. I the LORD have spoken it.
1Pinnum avar: manupuththiranae, savarakan kaththiyaakiya karukkaana kaththiyai vaangi, athinaal un thalaiyaiyum un thaatiyaiyum siraiththukkonndu, pinpu niraுkkum tharaasai eduththu, antha mayiraip pangidakkadavaay.And thou, son of man, take thee a sharp knife, take thee a barber's razor, and cause it to pass upon thine head and upon thy beard: then take thee balances to weigh, and divide the hair.
2Moontil oru pangai eduththu muttikkaipodum naatkal mutikirapothu nakaraththin naduvilae akkiniyaal sutteriththu, moontil oru pangai eduththu, athaich suttilum kaththiyaalae vetti, moontil oru pangai eduththuk kaattilae thoottakkadavaay; avaikalin pinnaaka naan pattayaththai uruvuvaen.Thou shalt burn with fire a third part in the midst of the city, when the days of the siege are fulfilled: and thou shalt take a third part, and smite about it with a knife: and a third part thou shalt scatter in the wind; and I will draw out a sword after them.
3Athil konjammaaththiram eduththu, athai un vasthiraththorangalil mutinthuvaippaayaaka.Thou shalt also take thereof a few in number, and bind them in thy skirts.
4Pinnum athil konjam eduththu, athaith theeyin naduvil erinthu, athai akkiniyaal sutterippaayaaka; athilirunthu Israel vamsaththaar anaivarukkum virothamaaka akkini purappadum.Then take of them again, and cast them into the midst of the fire, and burn them in the fire; for thereof shall a fire come forth into all the house of Israel.
5Karththaraakiya aanndavar sollukirathu ennavental, ithuvae Jerusalem, purajaathikalin naduvilae naan athai vaiththaen, athaich suttilum thaesangal irukkirathu.Thus saith the Lord GOD; This is Jerusalem: I have set it in the midst of the nations and countries that are round about her.
6Athu purajaathikalaippaarkkilum en niyaayangalaiyum thannaich suttilum irukkira thaesangalaippaarkkilum en kattalaikalaiyum akkiramamaaka maattippottathu; avarkal en niyaayangalai veraுththu, en kattalaikalil nadavaamar ponaarkal.And she hath changed my judgments into wickedness more than the nations, and my statutes more than the countries that are round about her: for they have refused my judgments and my statutes, they have not walked in them.
7Aakaiyaal karththaraakiya aanndavar sollukirathu ennavental, ungalaich suttilum irukkira purajaathikalutaiya neethiniyaayangalinpatiyaavathu nadavaamalum ponapatiyinaalae,Therefore thus saith the Lord GOD; Because ye multiplied more than the nations that are round about you, and have not walked in my statutes, neither have kept my judgments, neither have done according to the judgments of the nations that are round about you;
8Itho, naan, naanae unakku virothamaaka vanthu, purajaathikalutaiya kannkalukku munpaaka un naduvilae neethi seluththi,Therefore thus saith the Lord GOD; Behold, I, even I, am against thee, and will execute judgments in the midst of thee in the sight of the nations.
9Naan munpu seyyaathathum inichcheyyaathiruppathumaanavithamaay unakku un ellaa aruvaruppukalinimiththamum seyvaen.And I will do in thee that which I have not done, and whereunto I will not do any more the like, because of all thine abominations.
10Aathalaal un naduvilae pithaakkal pillaikalaith thinpaarkal; pillaikal pithaakkalaith thinpaarkal; naan unnil neethiseluththi unnil meethiyaayiruppavarkalaiyellaam sakala thisaikalilum sitharippokappannnuvaen entu karththaraakiya aanndavar sollukiraar.Therefore the fathers shall eat the sons in the midst of thee, and the sons shall eat their fathers; and I will execute judgments in thee, and the whole remnant of thee will I scatter into all the winds.
11Aathalaal, seeyentikalappadaththakkathum aruvarukkappadaththakkathumaana un kiriyaikalaal nee en Parisuththa sthalaththaith theettuppaduththinapatiyaal en kann unnaith thappavidaathu, naan unnaik kuraுkippokappannnuvaen, naan irangamaattaேn, ithai en jeevanaik konndu sollukiraேn entu karththaraakiya aanndavar uraikkiraar.Wherefore, as I live, saith the Lord GOD; Surely, because thou hast defiled my sanctuary with all thy detestable things, and with all thine abominations, therefore will I also diminish thee; neither shall mine eye spare, neither will I have any pity.
12Unnilae moontil oru pangu kollaiNnoyaal saavaarkal, panjaththaalum un naduvilae matinthupovaarkal; moontil oru pangu unnaich suttilum irukkira pattayaththaal vettunndu viluvaarkal; moontil oru pangai naan sakala thisaikalilum sitharippokappannnni, avarkal pinnae pattayaththai uruvuvaen.A third part of thee shall die with the pestilence, and with famine shall they be consumed in the midst of thee: and a third part shall fall by the sword round about thee; and I will scatter a third part into all the winds, and I will draw out a sword after them.
13Ippati en kopam niraivaeraுm; ippati naan en ukkiraththai avarkalmael thangappannnukirathinaal ennai aattikkolvaen; naan en ukkiraththai avarkalil niraivaettaுmpothu, karththaraakiya naan en vairaakkiyaththilae ithaip paesinaen entu arivaarkal.Thus shall mine anger be accomplished, and I will cause my fury to rest upon them, and I will be comforted: and they shall know that I the LORD have spoken it in my zeal, when I have accomplished my fury in them.
14Kadanthupokira yaavarutaiya kannkalukku munpaakavum un suttaுppuraththaaraakiya jaathikalukkullae naan unnaip paalum ninthaiyumaakkuvaen.Moreover I will make thee waste, and a reproach among the nations that are round about thee, in the sight of all that pass by.
15Naan kopaththaalum ukkiraththaalum kotiya thanndanaikalaalum, unnil neethiseluththumpothu, un suttaுppuraththaaraakiya jaathikalukku athu ninthaiyum thurkgeerththiyum echcharippum piramippumaay irukkum; karththaraakiya naan ithaich sonnaen.So it shall be a reproach and a taunt, an instruction and an astonishment unto the nations that are round about thee, when I shall execute judgments in thee in anger and in fury and in furious rebukes. I the LORD have spoken it.
16Ungalai alippatharku naan anuppum alivukkaethuvaana panjaththin kotiya ampukalai naan avarkalukkullae eyyumpothu, naan panjaththai ungalmael athikarikkappannnni, ungal appam ennum aatharavukolai muriththuppoduvaen.When I shall send upon them the evil arrows of famine, which shall be for their destruction, and which I will send to destroy you: and I will increase the famine upon you, and will break your staff of bread:
17Panjaththaiyum, unnaip pillaiyillaamarpokappannnum thushdamirukangalaiyum ungalukku virothamaaka anuppuvaen; kollaiNnoyum iraththanjinthuthalum unnil suttiththiriyum; pattayaththai naan unmael varappannnuvaen; karththaraakiya naan ithaich sonnaen entar.So will I send upon you famine and evil beasts, and they shall bereave thee: and pestilence and blood shall pass through thee; and I will bring the sword upon thee. I the LORD have spoken it.