1பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.And I saw a new heaven and a new earth: for the first heaven and the first earth were passed away; and there was no more sea.
2யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.And I John saw the holy city, new Jerusalem, coming down from God out of heaven, prepared as a bride adorned for her husband.
3மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.And I heard a great voice out of heaven saying, Behold, the tabernacle of God is with men, and he will dwell with them, and they shall be his people, and God himself shall be with them, and be their God.
4அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.And God shall wipe away all tears from their eyes; and there shall be no more death, neither sorrow, nor crying, neither shall there be any more pain: for the former things are passed away.
5சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.And he that sat upon the throne said, Behold, I make all things new. And he said unto me, Write: for these words are true and faithful.
6அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.And he said unto me, It is done. I am Alpha and Omega, the beginning and the end. I will give unto him that is athirst of the fountain of the water of life freely.
7ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.He that overcometh shall inherit all things; and I will be his God, and he shall be my son.
8பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.But the fearful, and unbelieving, and the abominable, and murderers, and whoremongers, and sorcerers, and idolaters, and all liars, shall have their part in the lake which burneth with fire and brimstone: which is the second death.
9பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,And there came unto me one of the seven angels which had the seven vials full of the seven last plagues, and talked with me, saying, Come hither, I will shew thee the bride, the Lamb's wife.
10பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.And he carried me away in the spirit to a great and high mountain, and shewed me that great city, the holy Jerusalem, descending out of heaven from God,
11அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.Having the glory of God: and her light was like unto a stone most precious, even like a jasper stone, clear as crystal;
12அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.And had a wall great and high, and had twelve gates, and at the gates twelve angels, and names written thereon, which are the names of the twelve tribes of the children of Israel:
13வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.On the east three gates; on the north three gates; on the south three gates; and on the west three gates.
14நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.And the wall of the city had twelve foundations, and in them the names of the twelve apostles of the Lamb.
15என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.And he that talked with me had a golden reed to measure the city, and the gates thereof, and the wall thereof.
16அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.And the city lieth foursquare, and the length is as large as the breadth: and he measured the city with the reed, twelve thousand furlongs. The length and the breadth and the height of it are equal.
17அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.And he measured the wall thereof, an hundred and forty and four cubits, according to the measure of a man, that is, of the angel.
18அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.And the building of the wall of it was of jasper: and the city was pure gold, like unto clear glass.
19நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,And the foundations of the wall of the city were garnished with all manner of precious stones. The first foundation was jasper; the second, sapphire; the third, a chalcedony; the fourth, an emerald;
20ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.The fifth, sardonyx; the sixth, sardius; the seventh, chrysolyte; the eighth, beryl; the ninth, a topaz; the tenth, a chrysoprasus; the eleventh, a jacinth; the twelfth, an amethyst.
21பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.And the twelve gates were twelve pearls: every several gate was of one pearl: and the street of the city was pure gold, as it were transparent glass.
22அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.And I saw no temple therein: for the Lord God Almighty and the Lamb are the temple of it.
23நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.And the city had no need of the sun, neither of the moon, to shine in it: for the glory of God did lighten it, and the Lamb is the light thereof.
24இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்And the nations of them which are saved shall walk in the light of it: and the kings of the earth do bring their glory and honour into it.
25அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.And the gates of it shall not be shut at all by day: for there shall be no night there.
26உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.And they shall bring the glory and honour of the nations into it.
27தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.And there shall in no wise enter into it any thing that defileth, neither whatsoever worketh abomination, or maketh a lie: but they which are written in the Lamb's book of life.
1Pinpu, naan puthiya vaanaththaiyum puthiya poomiyaiyum kanntaen; munthina vaanamum munthina poomiyum olinthupoyina; samuththiramum illaamarpoyittaு.And I saw a new heaven and a new earth: for the first heaven and the first earth were passed away; and there was no more sea.
2Yovaanaakiya naan, puthiya erusalaemaakiya Parisuththa nakaraththai thaevanidaththinintu paralokaththaivittu irangivarakkanntaen; athu than purushanukkaaka alangarikkappatta manavaattiyaippola aayaththamaakkappattirunthathu.And I John saw the holy city, new Jerusalem, coming down from God out of heaven, prepared as a bride adorned for her husband.
3Maelum, paralokaththilirunthu unndaana oru perunjaththaththaik kaettaேn; athu: itho, manusharkalidaththilae thaevanutaiya vaasasthalamirukkirathu, avarkalidaththilae avar vaasamaayiruppaar; avarkalum avarutaiya janangalaayiruppaarkal, Dhevanthaamae avarkalotaekooda irunthu avarkalutaiya thaevanaayiruppaar.And I heard a great voice out of heaven saying, Behold, the tabernacle of God is with men, and he will dwell with them, and they shall be his people, and God himself shall be with them, and be their God.
4Avarkalutaiya kannnneer yaavaiyum Dhevan thutaippaar; ini maranamumillai, thukkamumillai, alaraுthalumillai, varuththamumillai; munthinavaikal olinthupoyina entu vilampinathu.And God shall wipe away all tears from their eyes; and there shall be no more death, neither sorrow, nor crying, neither shall there be any more pain: for the former things are passed away.
5Singaasanaththinmael veettirunthavar: itho, naan sakalaththaiyum puthithaakkukiraேn entar. Pinnum, avar: intha vasanangal saththiyamum unnmaiyumaanavaikal, ivaikalai eluthu entar.And he that sat upon the throne said, Behold, I make all things new. And he said unto me, Write: for these words are true and faithful.
6Antiyum, avar ennai Nnokki: aayittaு, naan alpaavum omekaavum, aathiyum anthamumaayirukkiraேn. Thaakamaayirukkiravanukku naan jeevaththannnneeroottil ilavasamaayk koduppaen.And he said unto me, It is done. I am Alpha and Omega, the beginning and the end. I will give unto him that is athirst of the fountain of the water of life freely.
7Jeyangaொllukiravan ellaavattaைyum suthanthariththukkolluvaan; naan avan thaevanaayiruppaen, avan en kumaaranaayiruppaan.He that overcometh shall inherit all things; and I will be his God, and he shall be my son.
8Payappadukiravarkalum, avisuvaasikalum, aruvaruppaanavarkalum, kolaipaathakarum, vipasaarakkaararum, sooniyakkaararum, vikkirakaaraathanaikkaararum, poyyar anaivarum iranndaam maranamaakiya akkiniyum kanthakamum erikira kadalilae pangataivaarkal entar.But the fearful, and unbelieving, and the abominable, and murderers, and whoremongers, and sorcerers, and idolaters, and all liars, shall have their part in the lake which burneth with fire and brimstone: which is the second death.
9Pinpu, kataisiyaana aelu vaathaikalaal niraintha aelu kalasangalaiyutaiya antha aelu thootharil oruvan ennidaththil vanthu: nee ingae vaa, aattukkuttiyaanavarutaiya manaiviyaakiya manavaattiyai unakkuk kaannpikkiraேn entu solli,And there came unto me one of the seven angels which had the seven vials full of the seven last plagues, and talked with me, saying, Come hither, I will shew thee the bride, the Lamb's wife.
10Perithum uyaramumaana oru parvathaththinmael ennai aaviyil konndupoy, thaevanutaiya makimaiyai ataintha erusalaemaakiya Parisuththanakaram paralokaththaivittu thaevanidaththilirunthu irangivarukirathai enakkuk kaannpiththaan.And he carried me away in the spirit to a great and high mountain, and shewed me that great city, the holy Jerusalem, descending out of heaven from God,
11Athin pirakaasam mikavum vilaiyuyarntha iraththinakkallaippolavum, palinginoliyulla vachchirakkallaippolavum irunthathu.Having the glory of God: and her light was like unto a stone most precious, even like a jasper stone, clear as crystal;
12Atharkup perithum uyaramumaana mathilum, kilakkae moontu vaasalkal, vadakkae moontu vaasalkal, therkae moontu vaasalkal, maerkae moontu vaasalkal aakap panniranndu vaasalkalum irunthana.And had a wall great and high, and had twelve gates, and at the gates twelve angels, and names written thereon, which are the names of the twelve tribes of the children of Israel:
13Vaasalkalin arukae panniranndu thootharkalirunthaarkal; antha vaasalkalinmael Israel santhathiyaaraakiya panniranndu koththiraththaarutaiya naamangalum eluthappattirunthana.On the east three gates; on the north three gates; on the south three gates; and on the west three gates.
14Nakaraththin mathilukkup panniranndu asthipaarak karkalirunthana; avaikalmael aattukkuttiyaanavarutaiya panniranndu apposthalarin panniranndu naamangalum pathinthirunthana.And the wall of the city had twelve foundations, and in them the names of the twelve apostles of the Lamb.
15Ennudanae paesinavan, nakaraththaiyum athin vaasalkalaiyum athin mathilaiyum alakkiratharku oru porkolaip pitiththirunthaan.And he that talked with me had a golden reed to measure the city, and the gates thereof, and the wall thereof.
16Antha nakaram sathuramaayirunthathu, athin akalamum neelamum samamaayirunthathu. Avan anthak kolinaal nakaraththai alanthaan; athu panneeraayiram sthaathi alavaayirunthathu; athin neelamum akalamum uyaramum samamaayirunthathu.And the city lieth foursquare, and the length is as large as the breadth: and he measured the city with the reed, twelve thousand furlongs. The length and the breadth and the height of it are equal.
17Avan athin mathilai alanthapothu, athu thoothanutaiya alavaakiya manusha alavinpatiyae noottaுnaarpaththunaanku mulamaayirunthathu.And he measured the wall thereof, an hundred and forty and four cubits, according to the measure of a man, that is, of the angel.
18Athin mathil vachchirakkallaal kattappattirunthathu; nakaram thelinthapalingukku oppaana suththapponnaayirunthathu.And the building of the wall of it was of jasper: and the city was pure gold, like unto clear glass.
19Nakaraththu mathilkalin asthipaarangal sakalavitha iraththinangalinaalum alangarikkappattirunthana; muthalaam asthipaaram vachchirakkal, iranndaavathu inthiraneelam, moontavathu santhirakaantham, naankaavathu marakatham,And the foundations of the wall of the city were garnished with all manner of precious stones. The first foundation was jasper; the second, sapphire; the third, a chalcedony; the fourth, an emerald;
20Ainthaavathu komaethakam, aaraavathu pathumaraakam, aelaavathu suvarnaraththinam, ettavathu patikappachchaை, onpathaavathu pushparaakam, paththaavathu vaitooriyam, pathinoraavathu suneeram, panniranndaavathu sukanthi ivaikalae.The fifth, sardonyx; the sixth, sardius; the seventh, chrysolyte; the eighth, beryl; the ninth, a topaz; the tenth, a chrysoprasus; the eleventh, a jacinth; the twelfth, an amethyst.
21Panniranndu vaasalkalum panniranndu muththukkalaayirunthana; ovvoru vaasalum ovvoru muththaayirunthathu. Nakaraththin veethi thelivulla palingupolach suththapponnaayirunthathu.And the twelve gates were twelve pearls: every several gate was of one pearl: and the street of the city was pure gold, as it were transparent glass.
22Athilae thaevaalayaththai naan kaanavillai; sarvavallamaiyulla thaevanaakiya karththarum aattukkuttiyaanavarumae atharku aalayam.And I saw no temple therein: for the Lord God Almighty and the Lamb are the temple of it.
23Nakaraththirku velichchangaொdukkach sooriyanum santhiranum atharku vaennduvathillai; thaevanutaiya makimaiyae athaip pirakaasippiththathu, aattukkuttiyaanavarae atharku vilakku.And the city had no need of the sun, neither of the moon, to shine in it: for the glory of God did lighten it, and the Lamb is the light thereof.
24Iratchikkappadukira janangal athin velichchaththilae nadappaarkal poomiyin raajaakkal thangal makimaiyaiyum kanaththaiyum atharkullae konnduvaruvaarkalAnd the nations of them which are saved shall walk in the light of it: and the kings of the earth do bring their glory and honour into it.
25Angae iraakkaalam illaathapatiyaal, athin vaasalkal pakalil ataikkappaduvathae illai.And the gates of it shall not be shut at all by day: for there shall be no night there.
26Ulakaththaarutaiya makimaiyaiyum kanaththaiyum atharkullae konnduvaruvaarkal.And they shall bring the glory and honour of the nations into it.
27Theettullathum aruvaruppaiyum poyyaiyum nadappikkirathumaakiya ontum athil piravaesippathillai; aattukkuttiyaanavarin jeevapusthakaththil eluthappattavarkal maaththiram athil piravaesippaarkal.And there shall in no wise enter into it any thing that defileth, neither whatsoever worketh abomination, or maketh a lie: but they which are written in the Lamb's book of life.