Genesis 41:6
பின்பு, சாவியானதும் கீழ்க்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
Genesis 41:27அவைகளின் பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம்.
Ezekiel 19:12ஆனாலும் அது சீக்கிரமாய்ப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் கனி காய்ந்துபோயிற்று; அதின் பலத்த கொப்புகள் முறிந்து, பட்டுப்போயின; அக்கினி அவைகளைப் பட்சித்தது.
Exodus 14:21மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
Psalm 48:7கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
Genesis 41:23பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது.