Isaiah 49 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽தீவு நாட்டினரே, எனக்குச்␢ செவிகொடுங்கள்;␢ தொலைவாழ் மக்களினங்களே,␢ கவனியுங்கள்;␢ கருப்பையில் இருக்கும்போதே␢ ஆண்டவர் என்னை அழைத்தார்;␢ என் தாய் வயிற்றில் உருவாகும் போதே␢ என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.⁾2 ⁽என் வாயைக்␢ கூரான வாள்போன்று ஆக்கினார்;␢ தம் கையின் நிழலால்␢ என்னைப் பாதுகாத்தார்;␢ என்னைப் பளபளக்கும்␢ அம்பு ஆக்கினார்;␢ தம் அம்பறாத் துணியில்␢ என்னை மறைத்துக் கொண்டார்.⁾3 ⁽அவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன்,␢ இஸ்ரயேலே! உன் வழியாய்␢ நான் மாட்சியுறுவேன்’ என்றார்.⁾4 ⁽நானோ, ‘வீணாக நான் உழைத்தேன்:␢ வெறுமையாகவும் பயனின்றியும்␢ என் ஆற்றலைச் செலவழித்தேன்:␢ ஆயினும் எனக்குரிய நீதி␢ ஆண்டவரிடம் உள்ளது;␢ என் பணிக்கான பரிசு␢ என் கடவுளிடம் இருக்கின்றது’ என்றேன்.⁾5 ⁽யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும்,␢ சிதறுண்ட இஸ்ரயேலை␢ ஒன்று திரட்டவும்␢ கருப்பையிலிருந்தே ஆண்டவர்␢ என்னைத் தம் ஊழியனாக␢ உருவாக்கினார்;␢ ஆண்டவர் பார்வையில்␢ நான் மதிப்புப்பெற்றவன்;␢ என் கடவுளே என் ஆற்றல்;␢ அவர் இப்பொழுது உரைக்கிறார்:⁾6 ⁽அவர் கூறுவது:␢ யாக்கோபின் குலங்களை␢ நிலைநிறுத்துவதற்கும்␢ இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத்␢ திருப்பிக் கொணர்வதற்கும்␢ நீ என் ஊழியனாக இருப்பது␢ எளிதன்றோ?␢ உலகம் முழுவதும்␢ என் மீட்பை அடைவதற்கு␢ நான் உன்னைப் பிற இனத்தாருக்கு␢ ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.⁾7 ⁽மனிதரிடையே பெரிதும் இகழப் பட்டவரும்␢ நாடுகளிடையே␢ வெறுத்தொதுக்கப்பட்டவரும்␢ ஆட்சியாளர்களின்␢ பணியாளருமானவருக்கு␢ இஸ்ரயேலின் மீட்பரும் தூயவருமான␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “உண்மையுள்ள␢ ஆண்டவரை முன்னிட்டும்␢ உம்மைத் தேர்ந்துகொண்ட␢ இஸ்ரயேலின் தூயவர் பொருட்டும்␢ அரசர்கள் உம்மைக் கண்டு␢ எழுந்து நிற்பர்;␢ தலைவர்கள் உம்முன்␢ தலை வணங்குவர்.”⁾8 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ தகுந்த வேளையில்␢ நான் உமக்குப் பதிலளித்தேன்;␢ விடுதலை நாளில்␢ உமக்குத் துணையாய் இருந்தேன்;␢ நாட்டை மீண்டும் நிலைநாட்டவும்␢ பாழடைந்து கிடக்கும்␢ உரிமைச் சொத்துகளை␢ உடைமையாக்கவும்␢ நான் உம்மைப் பாதுகாத்து␢ மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக␢ ஏற்படுத்தினேன்.⁾9 ⁽சிறைப்பட்டோரிடம்,␢ ‘புறப்படுங்கள்’ என்றும்␢ இருளில் இருப்போரிடம்␢ ‘வெளிப்படுங்கள்’ என்றும் சொல்வீர்கள்.␢ பாதையில் அவர்களுக்கு␢ மேய்ச்சல் கிடைக்கும்;␢ வறண்ட குன்றுகள் அனைத்திலும்␢ பசும் புல்வெளிகளைக் காண்பர்.⁾10 ⁽அவர்கள் பசியடையார்; தாகமுறார்;␢ வெப்பக் காற்றோ, வெயிலோ␢ அவர்களை வாட்டுவதில்லை.␢ ஏனெனில்,␢ அவர்கள்மேல் கருணை காட்டுபவர்␢ அவர்களை நடத்திச் செல்வார்;␢ அவர் அவர்களை␢ நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார்.⁾11 ⁽என் மலைகள் அனைத்தையும்␢ வழியாக அமைப்பேன்;␢ என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.⁾12 ⁽இதோ, இவர்கள்␢ தொலையிலிருந்து வருவார்கள்;␢ சிலர் வடக்கிலிருந்தும்␢ சிலர் மேற்கிலிருந்தும்␢ சிலர் சீனிம் நாட்டிலிருந்தும்␢ வருவார்கள்.⁾13 ⁽வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்;␢ மண்ணுலகே, களிகூரு;␢ மலைகளே, அக்களித்து␢ ஆர்ப்பரியுங்கள்;␢ ஆண்டவர் தம் மக்களுக்கு␢ ஆறுதல் அளித்துள்ளார்;␢ சிறுமையுற்ற தம் மக்கள்மீது␢ இரக்கம் காட்டியுள்ளார்.⁾14 ⁽சீயோனோ, ‘ஆண்டவர்␢ என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்;␢ என் தலைவர் என்னை␢ மறந்து விட்டார்’ என்கிறாள்.⁾15 ⁽பால்குடிக்கும் தன் மகவைத்␢ தாய் மறப்பாளோ?␢ கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது␢ இரக்கம் காட்டாதிருப்பாளோ?␢ இவர்கள் மறந்திடினும்,␢ நான் உன்னை மறக்கவே மாட்டேன்.⁾16 ⁽இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை␢ நான் பொறித்து வைத்துள்ளேன்.␢ உன் சுவர்கள் எப்பொழுதும்␢ என் கண்முன் நிற்கின்றன.⁾17 ⁽உன் பிள்ளைகள் விரைந்து வருவர்;␢ உன்னை அழித்துப் பாழாக்கியோரும்␢ உன்னை விட்டுப் போய்விடுவர்.⁾18 ⁽உன் கண்களை உயர்த்திச்␢ சுற்றிலும் பார்;␢ அவர்கள் அனைவரும் உன்னிடம்␢ ஒருங்கே வருகின்றனர்;␢ என் உயிர்மேல் ஆணை!␢ நீ அவர்கள் அனைவரையும்␢ அணிகலன்போல் அணிந்துகொள்வாய்;␢ மணப்பெண் அணிவதுபோல்␢ அணிந்துகொள்வாய், என்கிறார்␢ ஆண்டவர்.⁾19 ⁽பாழடைந்து, அழிந்து, மண் மேடாய்ப் போன␢ உன் நாட்டின் பகுதிகள்␢ இப்பொழுது மக்கள் குடியிருப்பதற்கு␢ மிகவும் குறுகியதாயிருக்கும்;␢ முன்பு உன்னை விழுங்கியவர்␢ உன்னைவிட்டு␢ வெகு தொலைவுக்குச் செல்வர்.⁾20 ⁽உன் துக்க காலத்தில் பிறந்த␢ உன் பிள்ளைகள் உன் செவிகளில்␢ ‘இந்த இடம் எங்களுக்கு மிகவும்␢ நெருக்கடியாய் இருக்கிறது;␢ நாங்கள் குடியிருக்கப்␢ போதிய இடம் தாரும்’ என்பர்.⁾21 ⁽அப்போது நீ, ‘இவர்களை␢ எனக்கெனப் பெற்றெடுத்தவர் யார்?␢ நான் பிரிவுத் துயரால் வாடினேன்!␢ மலடியாய் இருந்தேன்!␢ நாடு கடத்தப்பட்டுத் துரத்தப்பட்டேன்!␢ அப்படியிருக்க␢ இவர்களை ஆளாக்கிவிட்டவர் யார்?␢ நான் தன்னந்தனியளாய்␢ விடப்பட்டிருக்க,␢ எங்கிருந்து, இவர்கள் வந்தார்கள்?’␢ என்று உன் உள்ளத்தில்␢ சொல்லிக் கொள்வாய்.⁾22 ⁽என் தலைவராகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே:␢ வேற்றினத்தாருக்கு நேராக␢ என் கையை உயர்த்துவேன்;␢ மக்களினங்களை நோக்கி␢ என் அடையாளக் கொடியை ஏற்றுவேன்;␢ அவர்கள் உன் புதல்வரை␢ மார்பில் ஏந்திக் கொண்டுவருவர்;␢ உன் புதல்வியரைத் தம்␢ தோள்மேல் வைத்துத் தூக்கி வருவர்.⁾23 ⁽அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர் ஆவர்;␢ அவர்கள் அரசியர்␢ உங்கள் செவிலித்தாயர் ஆவர்;␢ முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து␢ அவர்கள் உன்னை வணங்குவர்;␢ உன் காலடிப் புழுதியை நக்குவர்;␢ நானே ஆண்டவர் என்பதையும்,␢ எனக்காகக் காத்திருப்போர்␢ வெட்கமடையார் என்பதையும்␢ அப்பொழுது நீ அறிந்து கொள்வாய்.⁾24 ⁽வலியோனின் கையினின்று,␢ கொள்ளைப் பொருளைப் பறிக்கக் கூடுமா?␢ வெற்றி வீரனிடமிருந்து,␢ சிறைப்பட்டோர் தப்ப இயலுமா?⁾25 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ சிறைப்பட்டோர் வலியோனிடம் இருந்து␢ விடுவிக்கப்படுவர்; கொள்ளைப்பொருள்␢ கொடியவன் கையினின்று மீட்கப்படும்;␢ உன்னை எதிர்த்துப் போராடுபவருடன்␢ நானும் போராடுவேன்;␢ உன் பிள்ளைகளை விடுவிப்பேன்.⁾26 ⁽உன்னை ஒடுக்குவோர்␢ தங்கள் சதையை உண்ணச்செய்வேன்;␢ அவ்வாறு தங்கள் இரத்தத்தை␢ இனிய இரசம்போல் குடித்து வெறிப்பர்;␢ அப்பொழுது மானிடர் யாவரும்,␢ நானே ஆண்டவர், உன் விடுதலையாளர்,␢ உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர்’␢ என்று அறிந்து கொள்வர்.⁾