நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் – அல்லேலூயா
1. காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா
2. வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக – ஐயா
3. ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம்தான் உண்டு – ஐயா
4. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே
Natanamaati Sthoeththarippaen PowerPoint
Natanamaati Sthoeththarippaen - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் Lyrics
Natanamaati Sthoeththarippaen PPT
Download Natanamaati Sthoeththarippaen Tamil PPT