Full Screen ?
 

Varuvai Tharunamithuve - வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

Varuvai Tharunamithuve

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை

அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களல் நீ குணமடைய

சத்திய வாக்கை நம்பியே வார்
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்

Varuvai Tharunamithuve Lyrics in English

Varuvai Tharunamithuvevaruvaay tharunamithuvae alaikkiraarae valla aanndavar Yesuvanntaivaal naalaiyellaam veenn naalaay varuththaththotae kalippathu aen vanthavar paatham saranatainthaal vaalviththu unnaich serththuk kolvaarkattina veedum nilam porulum kanndidum uttaாr uravinarum kooduveettu un aaviponaal kooda unodu varuvathillaialaku maayai nilaiththidaathae athai nampaathae mayakkidumae maranam ornaal santhikkumae maravaathae un aanndavaraivaanaththin geelae poomi maelae vaanavar Yesu naamamallaal iratchippataiya valiyillaiyae iratchakar Yesu vali avaraetheeraatha paavam viyaathiyaiyum maaraatha unthan pelaveenamum korakkurusil sumanthu theerththaar kaayangalal nee kunamataiyasaththiya vaakkai nampiyae vaar niththiya jeevan unakkalippaar un paerai jeeva pusthakaththil unnmaiyaay intu eluthiduvaar

PowerPoint Presentation Slides for the song Varuvai Tharunamithuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varuvai Tharunamithuve – வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே PPT
Varuvai Tharunamithuve PPT

Varuvai Tharunamithuve Song Meaning

Varuvai Tharunamithuve

Revenue calls immediately
Lord Jesus is mighty

Every day of life is wasted
Why spend with regret?
If the comer surrenders his feet
He will live and join you

Built house and land
A close relative who condemns
If the nest is your spirit
Not even coming with you

Don't be delusional about beauty
Don't believe it, it's bewitching
Death will meet one day
Do not forget your Lord

Below the sky above the earth
The angel is Jesus
There is no way to be saved
The savior is Jesus

Unrelieved sin and disease
Unchanged momentum and weakness
He carried it on a crutch
May you heal from wounds

Trust in the word of truth
He will give you eternal life
Your name is in the book of life
He will actually write today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு Varuvai Tharunamithuveவருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டைவாழ் நாளையெல்லாம் வீண் நாளாய் வருத்தத்தோடே கழிப்பது வந்தவர் பாதம் சரணடைந்தால் வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் தமிழ்