2 கொரிந்தியர் 4:14
கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம்.
Tamil Easy Reading Version
தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். அதோடு இயேசுவுடன் தேவன் எங்களையும் எழுப்புவார் என்று அறிவோம். தேவன் உங்களோடு எங்களையும் ஒன்று சேர்ப்பார். நாம் அவருக்கு முன் நிற்போம்.
Thiru Viviliam
ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும்.
King James Version (KJV)
Knowing that he which raised up the Lord Jesus shall raise up us also by Jesus, and shall present us with you.
American Standard Version (ASV)
knowing that he that raised up the Lord Jesus shall raise up us also with Jesus, and shall present us with you.
Bible in Basic English (BBE)
Because we are certain that he who made the Lord Jesus come back from the dead, will do the same for us, and will give us a place in his glory with you.
Darby English Bible (DBY)
knowing that he who has raised the Lord Jesus shall raise us also with Jesus, and shall present [us] with you.
World English Bible (WEB)
knowing that he who raised the Lord Jesus will raise us also with Jesus, and will present us with you.
Young’s Literal Translation (YLT)
knowing that He who did raise up the Lord Jesus, us also through Jesus shall raise up, and shall present with you,
2 கொரிந்தியர் 2 Corinthians 4:14
கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
Knowing that he which raised up the Lord Jesus shall raise up us also by Jesus, and shall present us with you.
| εἰδότες | eidotes | ee-THOH-tase | |
| ὅτι | hoti | OH-tee | |
| ὁ | ho | oh | |
| ἐγείρας | egeiras | ay-GEE-rahs | |
| τὸν | ton | tone | |
| κύριον | kyrion | KYOO-ree-one | |
| Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON | |
| καὶ | kai | kay | |
| ἡμᾶς | hēmas | ay-MAHS | |
| διὰ | dia | thee-AH | |
| Ἰησοῦ | iēsou | ee-ay-SOO | |
| ἐγερεῖ | egerei | ay-gay-REE | |
| καὶ | kai | kay | |
| παραστήσει | parastēsei | pa-ra-STAY-see | |
| σὺν | syn | syoon | |
| ὑμῖν | hymin | yoo-MEEN |
Cross Reference
1 தெசலோனிக்கேயர் 4:14
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
யூதா 1:24
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
எபேசியர் 5:27
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
கொலோசெயர் 1:22
நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
ரோமர் 8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
கொலோசெயர் 1:28
எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
2 கொரிந்தியர் 11:2
நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
2 கொரிந்தியர் 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
1 கொரிந்தியர் 15:20
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
1 கொரிந்தியர் 6:14
தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:24
தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
யோவான் 11:25
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
ஏசாயா 26:19
மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும்.
Tags கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்
2 Corinthians 4:14 in Tamil Concordance 2 Corinthians 4:14 in Tamil Interlinear 2 Corinthians 4:14 in Tamil Image