Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 31:14 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 31 Deuteronomy 31:14

உபாகமம் 31:14
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளைகொடுக்கும்படி, அவனை அழைத்துக்கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரணமடையும்காலம் நெருங்கியிருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி, அவனை அழைத்துக் கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயிடம், “இப்பொழுது நீ மரணமடைவதற்குரிய நேரம் நெருங்கியுள்ளது. பரிசுத்தக் கூடாரத்திற்குள் வரும்படி யோசுவாவிடம் சொல். அவன் செய்ய வேண்டியவற்றை நான் யோசுவாவிடம் கூறுவேன்” என்றார். எனவே மோசேயும் யோசுவாவும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சென்றார்கள்.

Thiru Viviliam
பின்னர், ஆண்டவர் மோசேயிடம், “நீ இறக்கும் நாள் நெருங்கிவிட்டது. யோசுவாவைக் கூப்பிடு. இருவரும் சந்திப்புக் கூடாரத்துக்கு வாருங்கள். நான் அவனுக்குப் பணிப் பொறுப்புத் தரவேண்டும்” என்றார். அவ்வாறே மோசேயும் யோசுவாவும் போய்ச் சந்திப்புக் கூடாரத்தில் நின்றனர்.

Title
கர்த்தர் மோசேயையும் யோசுவாவையும் அழைக்கிறார்

Other Title
மோசேக்கு ஆண்டவர் இட்ட இறுதிக்கட்டளை

Deuteronomy 31:13Deuteronomy 31Deuteronomy 31:15

King James Version (KJV)
And the LORD said unto Moses, Behold, thy days approach that thou must die: call Joshua, and present yourselves in the tabernacle of the congregation, that I may give him a charge. And Moses and Joshua went, and presented themselves in the tabernacle of the congregation.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Behold, thy days approach that thou must die: call Joshua, and present yourselves in the tent of meeting, that I may give him a charge. And Moses and Joshua went, and presented themselves in the tent of meeting.

Bible in Basic English (BBE)
At that time the Lord said to Moses, The day of your death is near: send for Joshua, and come to the Tent of meeting so that I may give him his orders. So Moses and Joshua went to the Tent of meeting.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Lo, the days are near for thee to die; call Joshua, and present yourselves at the tent of meeting, that I may give him a charge. And Moses and Joshua went and presented themselves at the tent of meeting.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Behold, thy days approach that thou must die: call Joshua, and present yourselves in the tabernacle of the congregation, that I may give him a charge. And Moses and Joshua went and presented themselves in the tabernacle of the congregation.

World English Bible (WEB)
Yahweh said to Moses, Behold, your days approach that you must die: call Joshua, and present yourselves in the tent of meeting, that I may give him a charge. Moses and Joshua went, and presented themselves in the tent of meeting.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Lo, thy days have drawn near to die; call Joshua, and station yourselves in the tent of meeting, and I charge him;’ and Moses goeth — Joshua also — and they station themselves in the tent of meeting,

உபாகமம் Deuteronomy 31:14
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளைகொடுக்கும்படி, அவனை அழைத்துக்கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.
And the LORD said unto Moses, Behold, thy days approach that thou must die: call Joshua, and present yourselves in the tabernacle of the congregation, that I may give him a charge. And Moses and Joshua went, and presented themselves in the tabernacle of the congregation.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוָ֜הyĕhwâyeh-VA
אֶלʾelel
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
הֵ֣ןhēnhane
קָֽרְב֣וּqārĕbûka-reh-VOO
יָמֶיךָ֮yāmêkāya-may-HA
לָמוּת֒lāmûtla-MOOT
קְרָ֣אqĕrāʾkeh-RA
אֶתʾetet
יְהוֹשֻׁ֗עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
וְהִֽתְיַצְּב֛וּwĕhitĕyaṣṣĕbûveh-hee-teh-ya-tseh-VOO
בְּאֹ֥הֶלbĕʾōhelbeh-OH-hel
מוֹעֵ֖דmôʿēdmoh-ADE
וַֽאֲצַוֶּ֑נּוּwaʾăṣawwennûva-uh-tsa-WEH-noo
וַיֵּ֤לֶךְwayyēlekva-YAY-lek
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
וִֽיהוֹשֻׁ֔עַwîhôšuaʿvee-hoh-SHOO-ah
וַיִּֽתְיַצְּב֖וּwayyitĕyaṣṣĕbûva-yee-teh-ya-tseh-VOO
בְּאֹ֥הֶלbĕʾōhelbeh-OH-hel
מוֹעֵֽד׃môʿēdmoh-ADE

Cross Reference

எண்ணாகமம் 27:13
நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;

உபாகமம் 34:5
அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.

உபாகமம் 31:23
அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.

யூதா 1:24
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,

2 தீமோத்தேயு 4:1
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

ரோமர் 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28
ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

ஏசாயா 38:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

பிரசங்கி 9:5
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.

யோபு 2:1
பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.

யோபு 1:6
ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.

2 இராஜாக்கள் 1:4
இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.

1 சாமுவேல் 10:19
நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள்; என்றான்.

யோசுவா 24:1
பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.

யோசுவா 23:14
இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை.

உபாகமம் 32:50
நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,

உபாகமம் 31:2
இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக் கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார்.

எண்ணாகமம் 27:19
அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்கு கட்டளைகொடுத்து,

யாத்திராகமம் 34:2
விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.


Tags பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி இதோ நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது நான் யோசுவாவுக்குக் கட்டளைகொடுக்கும்படி அவனை அழைத்துக்கொண்டு ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார் அப்படியே மோசேயும் யோசுவாவும் போய் ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்
Deuteronomy 31:14 in Tamil Concordance Deuteronomy 31:14 in Tamil Interlinear Deuteronomy 31:14 in Tamil Image