Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 17:17 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 17 2 Kings 17:17

2 இராஜாக்கள் 17:17
அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப் போட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் அக்கினியில் சுட்டெரித்துப்போட்டு, குறிகேட்டு சகுனங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
நெருப்பில் தங்கள் மகன்களையும் மகள்கனையும் அவர்கள் பலியாகக் கொடுத்தனர். எதிர்காலத்தை அறிந்துக் கொள்ள மந்திரங்களையும் சூனியங்களையும் பயன்படுத்தினார்கள். பாவம் என்று கர்த்தர் சொன்னவற்றுக்கு அவர்கள் தம்மைத்தாமே பலியாக்கிக்கொண்டு கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானார்கள்.

Thiru Viviliam
தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் நெருப்பில் பலியிட்டனர். குறிகேட்டும் சூனியம் வைத்தும் வந்தனர்; ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து அவருக்குச் சினமூட்டுமாறு தங்களையே விற்று விட்டனர்.

2 Kings 17:162 Kings 172 Kings 17:18

King James Version (KJV)
And they caused their sons and their daughters to pass through the fire, and used divination and enchantments, and sold themselves to do evil in the sight of the LORD, to provoke him to anger.

American Standard Version (ASV)
And they caused their sons and their daughters to pass through the fire, and used divination and enchantments, and sold themselves to do that which was evil in the sight of Jehovah, to provoke him to anger.

Bible in Basic English (BBE)
And they made their sons and their daughters go through the fire, and they made use of secret arts and unnatural powers, and gave themselves up to doing evil in the eyes of the Lord, till he was moved to wrath.

Darby English Bible (DBY)
and they caused their sons and their daughters to pass through the fire, and used divination and enchantments, and sold themselves to do evil in the sight of Jehovah, to provoke him to anger.

Webster’s Bible (WBT)
And they caused their sons and their daughters to pass through the fire, and used divination and enchantments, and sold themselves to do evil in the sight of the LORD, to provoke him to anger.

World English Bible (WEB)
They caused their sons and their daughters to pass through the fire, and used divination and enchantments, and sold themselves to do that which was evil in the sight of Yahweh, to provoke him to anger.

Young’s Literal Translation (YLT)
and cause their sons and their daughters to pass over through fire, and divine divinations, and use enchantments, and sell themselves to do the evil thing in the eyes of Jehovah, to provoke Him;

2 இராஜாக்கள் 2 Kings 17:17
அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப் போட்டார்கள்.
And they caused their sons and their daughters to pass through the fire, and used divination and enchantments, and sold themselves to do evil in the sight of the LORD, to provoke him to anger.

וַֽ֠יַּעֲבִירוּwayyaʿăbîrûVA-ya-uh-vee-roo
אֶתʾetet
בְּנֵיהֶ֤םbĕnêhembeh-nay-HEM
וְאֶתwĕʾetveh-ET
בְּנֽוֹתֵיהֶם֙bĕnôtêhembeh-noh-tay-HEM
בָּאֵ֔שׁbāʾēšba-AYSH
וַיִּקְסְמ֥וּwayyiqsĕmûva-yeek-seh-MOO
קְסָמִ֖יםqĕsāmîmkeh-sa-MEEM
וַיְנַחֵ֑שׁוּwaynaḥēšûvai-na-HAY-shoo
וַיִּֽתְמַכְּר֗וּwayyitĕmakkĕrûva-yee-teh-ma-keh-ROO
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
הָרַ֛עhāraʿha-RA
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
יְהוָ֖הyĕhwâyeh-VA
לְהַכְעִיסֽוֹ׃lĕhakʿîsôleh-hahk-ee-SOH

Cross Reference

2 இராஜாக்கள் 21:6
தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்கு கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.

2 இராஜாக்கள் 16:3
இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்.

1 இராஜாக்கள் 21:20
அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.

உபாகமம் 18:10
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

எசேக்கியேல் 23:37
அவர்கள் விபசாரம்பண்ணினார்கள், அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.

லேவியராகமம் 18:21
நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.

லேவியராகமம் 19:26
யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.

சங்கீதம் 106:37
அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுக்காகப் பலியிட்டார்கள்.

மீகா 5:12
சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்;

கலாத்தியர் 5:26
வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:16
நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.

எசேக்கியேல் 23:39
அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.

எசேக்கியேல் 20:31
நீங்கள் உங்கள் பிள்ளைகளைத் தீக்கடக்கப்பண்ணி, உங்கள் பலிகளைச்செலுத்துகிறபோது, இந்நாள்வரைக்கும் அவர்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுவீர்களே; நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுப்பேனோ இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என்னிடத்தில் விசாரிக்கும்படி இடங்கொடுப்பதில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

2 இராஜாக்கள் 17:11
கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,

2 நாளாகமம் 28:3
அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டு,

2 நாளாகமம் 33:6
அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.

ஏசாயா 8:19
அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?

ஏசாயா 47:9
சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்.

ஏசாயா 47:12
நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.

ஏசாயா 50:1
கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன்கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.

எரேமியா 27:9
பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாட்பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் செவிகொடாதிருங்கள்.

எசேக்கியேல் 20:26
நான் கர்த்தர் என்று அவர்கள் அறியத்தக்கதாக, நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்கள் கர்ப்பந்திறந்து பிறக்கிறதையெல்லாம் தீக்கடக்கப்பண்ணி, இவ்விதமாய் அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படப்பண்ணினேன்.

1 இராஜாக்கள் 21:25
தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.


Tags அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப் போட்டார்கள்
2 Kings 17:17 in Tamil Concordance 2 Kings 17:17 in Tamil Interlinear 2 Kings 17:17 in Tamil Image