ஆபகூக் 2:6
இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எந்தமட்டும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.
Tamil Indian Revised Version
இவர்களெல்லோரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான பழிச்சொல்லையும் கூறி, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எதுவரைக்கும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் அவனைப் பார்த்து விரைவில் நகைப்பார்கள். அவர்கள் அவனது தோல்வியைப்பற்றி நகைத்து சொல்வார்கள், ԅஇது மிகவும் மோசமானது. அந்த மனிதன் பலவற்றை எடுத்தான், அவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எடுத்தான், அவன் அதிகமான கடன்களை வசூலித்து அதினால் செல்வந்தனானான்.”
Thiru Viviliam
⁽ஆனால், தோல்வியுற்ற அனைவரும்␢ அவர்கள் மேல் பழிமொழிகளையும்,␢ ஏளனப் பாடல்களையும்␢ இப்படிப் புனைவார்கள்;␢ ‘தமக்குரியது அல்லாததைத்␢ தமக்கெனக் குவித்துக் கொள்கின்றவருக்கு␢ ஐயோ கேடு!␢ இன்னும் எத்துணைக் காலத்திற்கு␢ இப்படிச் செய்வர்?␢ அவர்கள் தங்கள் மேல்␢ அடைமானங்களையே␢ சுமத்திக் கொள்கின்றார்கள்!’⁾
King James Version (KJV)
Shall not all these take up a parable against him, and a taunting proverb against him, and say, Woe to him that increaseth that which is not his! how long? and to him that ladeth himself with thick clay!
American Standard Version (ASV)
Shall not all these take up a parable against him, and a taunting proverb against him, and say, Woe to him that increaseth that which is not his! how long? and that ladeth himself with pledges!
Bible in Basic English (BBE)
Will not all these take up a word of shame against him and a bitter saying against him, and say, A curse on him who goes on taking what is not his and is weighted down with the property of debtors!
Darby English Bible (DBY)
Shall not all these take up a proverb about him, and a taunting riddle against him, and say, Woe to him that increaseth that which is not his! how long? — and to him that loadeth himself with pledges!
World English Bible (WEB)
Won’t all these take up a parable against him, and a taunting proverb against him, and say, ‘Woe to him who increases that which is not his, and who enriches himself by extortion! How long?’
Young’s Literal Translation (YLT)
Do not these — all of them — against him a simile taken up, And a moral of acute sayings for him, And say, Wo `to’ him who is multiplying `what is’ not his? Till when also is he multiplying to himself heavy pledges?
ஆபகூக் Habakkuk 2:6
இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எந்தமட்டும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.
Shall not all these take up a parable against him, and a taunting proverb against him, and say, Woe to him that increaseth that which is not his! how long? and to him that ladeth himself with thick clay!
| הֲלוֹא | hălôʾ | huh-LOH | |
| אֵ֣לֶּה | ʾēlle | A-leh | |
| כֻלָּ֗ם | kullām | hoo-LAHM | |
| עָלָיו֙ | ʿālāyw | ah-lav | |
| מָשָׁ֣ל | māšāl | ma-SHAHL | |
| יִשָּׂ֔אוּ | yiśśāʾû | yee-SA-oo | |
| וּמְלִיצָ֖ה | ûmĕlîṣâ | oo-meh-lee-TSA | |
| חִיד֣וֹת | ḥîdôt | hee-DOTE | |
| ל֑וֹ | lô | loh | |
| וְיֹאמַ֗ר | wĕyōʾmar | veh-yoh-MAHR | |
| ה֚וֹי | hôy | hoy | |
| הַמַּרְבֶּ֣ה | hammarbe | ha-mahr-BEH | |
| לֹּא | lōʾ | loh | |
| ל֔וֹ | lô | loh | |
| עַד | ʿad | ad | |
| מָתַ֕י | mātay | ma-TAI | |
| וּמַכְבִּ֥יד | ûmakbîd | oo-mahk-BEED | |
| עָלָ֖יו | ʿālāyw | ah-LAV | |
| עַבְטִֽיט׃ | ʿabṭîṭ | av-TEET |
Cross Reference
மீகா 2:4
அந்நாளில் உங்கள்பேரில் ஒப்புச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது ஜனத்தின் சுதந்தரத்தை மாற்றிப்போட்டார்; என்னமாய் அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாய்ப் புலம்புவார்கள்.
எரேமியா 50:13
கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான்.
யோபு 20:15
அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
எண்ணாகமம் 23:7
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்து விடவேண்டும் என்று சொன்னான்.
ஆபகூக் 2:13
இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய செயல் அல்லவோ?
லுூக்கா 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
1 கொரிந்தியர் 7:29
மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,
யாக்கோபு 5:1
ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
1 பேதுரு 4:7
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
ஆபகூக் 1:15
அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன்பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.
ஆபகூக் 1:9
அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.
எசேக்கியேல் 32:21
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.
யோபு 22:6
முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
சங்கீதம் 94:3
கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்.
நீதிமொழிகள் 22:16
தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன் தனக்குக் குறைச்சலுண்டாகவே ஐசுவரியவானுக்குக் கொடுப்பான்.
ஏசாயா 14:4
நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!
ஏசாயா 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
ஏசாயா 55:2
நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.
எரேமியா 29:22
பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக் குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 51:34
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
எண்ணாகமம் 23:18
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
Tags இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும் அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும் அது எந்தமட்டும் நிற்கும் என்றும் அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்
Habakkuk 2:6 in Tamil Concordance Habakkuk 2:6 in Tamil Interlinear Habakkuk 2:6 in Tamil Image