1 கொரிந்தியர் 2:7
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
Tamil Indian Revised Version
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
Tamil Easy Reading Version
ஆனால் நாம் தேவனுடைய இரகசியமான ஞானத்தைப் பேசுகிறோம். மக்களிடமிருந்து இந்த ஞானம் மறைக்கப்பட்டுள்ளது. நமது மகிமைக்காக தேவன் இந்த ஞானத்தைத் திட்டமிட்டார். உலகம் தோன்றுவதற்கு முன்பே தேவன் இதைத் திட்டமிட்டார்.
Thiru Viviliam
வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
King James Version (KJV)
But we speak the wisdom of God in a mystery, even the hidden wisdom, which God ordained before the world unto our glory:
American Standard Version (ASV)
but we speak God’s wisdom in a mystery, `even’ the `wisdom’ that hath been hidden, which God foreordained before the worlds unto our glory:
Bible in Basic English (BBE)
But we give the news of the secret wisdom of God, which he had kept in store before the world came into existence, for our glory;
Darby English Bible (DBY)
But we speak God’s wisdom in [a] mystery, that hidden [wisdom] which God had predetermined before the ages for our glory:
World English Bible (WEB)
But we speak God’s wisdom in a mystery, the wisdom that has been hidden, which God foreordained before the worlds for our glory,
Young’s Literal Translation (YLT)
but we speak the hidden wisdom of God in a secret, that God foreordained before the ages to our glory,
1 கொரிந்தியர் 1 Corinthians 2:7
உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
But we speak the wisdom of God in a mystery, even the hidden wisdom, which God ordained before the world unto our glory:
| ἀλλὰ | alla | al-LA | |
| λαλοῦμεν | laloumen | la-LOO-mane | |
| σοφίαν | sophian | soh-FEE-an | |
| θεοῦ | theou | thay-OO | |
| ἐν | en | ane | |
| μυστηρίῳ | mystēriō | myoo-stay-REE-oh | |
| τὴν | tēn | tane | |
| ἀποκεκρυμμένην | apokekrymmenēn | ah-poh-kay-kryoom-MAY-nane | |
| ἣν | hēn | ane | |
| προώρισεν | proōrisen | proh-OH-ree-sane | |
| ὁ | ho | oh | |
| θεὸς | theos | thay-OSE | |
| πρὸ | pro | proh | |
| τῶν | tōn | tone | |
| αἰώνων | aiōnōn | ay-OH-none | |
| εἰς | eis | ees | |
| δόξαν | doxan | THOH-ksahn | |
| ἡμῶν· | hēmōn | ay-MONE |
Cross Reference
எபேசியர் 3:4
இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.
ரோமர் 16:25
ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகலஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,
வெளிப்படுத்தின விசேஷம் 13:8
உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
2 பேதுரு 1:3
தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
1 பேதுரு 5:10
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
1 பேதுரு 5:1
உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:
1 பேதுரு 1:11
தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
2 தீமோத்தேயு 1:9
அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
கொலோசெயர் 1:26
உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
எபேசியர் 1:4
தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
மத்தேயு 13:35
என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 11:25
அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
ஏசாயா 48:6
அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.
சங்கீதம் 78:2
என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
Tags உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும் மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்
1 Corinthians 2:7 in Tamil Concordance 1 Corinthians 2:7 in Tamil Interlinear 1 Corinthians 2:7 in Tamil Image