1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,Paul, an apostle of Jesus Christ by the will of God, and Timotheus our brother,
2கொலோசெ பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.To the saints and faithful brethren in Christ which are at Colosse: Grace be unto you, and peace, from God our Father and the Lord Jesus Christ.
3கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,We give thanks to God and the Father of our Lord Jesus Christ, praying always for you,
4பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,Since we heard of your faith in Christ Jesus, and of the love which ye have to all the saints,
5நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.For the hope which is laid up for you in heaven, whereof ye heard before in the word of the truth of the gospel;
6அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது;Which is come unto you, as it is in all the world; and bringeth forth fruit, as it doth also in you, since the day ye heard of it, and knew the grace of God in truth:
7அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;As ye also learned of Epaphras our dear fellowservant, who is for you a faithful minister of Christ;
8ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.Who also declared unto us your love in the Spirit.
9இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,For this cause we also, since the day we heard it, do not cease to pray for you, and to desire that ye might be filled with the knowledge of his will in all wisdom and spiritual understanding;
10சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,That ye might walk worthy of the Lord unto all pleasing, being fruitful in every good work, and increasing in the knowledge of God;
11சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.Strengthened with all might, according to his glorious power, unto all patience and longsuffering with joyfulness;
12ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,Giving thanks unto the Father, which hath made us meet to be partakers of the inheritance of the saints in light:
13இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.Who hath delivered us from the power of darkness, and hath translated us into the kingdom of his dear Son:
14அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.In whom we have redemption through his blood, even the forgiveness of sins:
15அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.Who is the image of the invisible God, the firstborn of every creature:
16ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.For by him were all things created, that are in heaven, and that are in earth, visible and invisible, whether they be thrones, or dominions, or principalities, or powers: all things were created by him, and for him:
17அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.And he is before all things, and by him all things consist.
18அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.And he is the head of the body, the church: who is the beginning, the firstborn from the dead; that in all things he might have the preeminence.
19சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,For it pleased the Father that in him should all fulness dwell;
20அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.And, having made peace through the blood of his cross, by him to reconcile all things unto himself; by him, I say, whether they be things in earth, or things in heaven.
21முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.And you, that were sometime alienated and enemies in your mind by wicked works, yet now hath he reconciled
22நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.In the body of his flesh through death, to present you holy and unblameable and unreproveable in his sight:
23அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.If ye continue in the faith grounded and settled, and be not moved away from the hope of the gospel, which ye have heard, and which was preached to every creature which is under heaven; whereof I Paul am made a minister;
24இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.Who now rejoice in my sufferings for you, and fill up that which is behind of the afflictions of Christ in my flesh for his body's sake, which is the church:
25ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு,Whereof I am made a minister, according to the dispensation of God which is given to me for you, to fulfil the word of God;
26உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.Even the mystery which hath been hid from ages and from generations, but now is made manifest to his saints:
27புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.To whom God would make known what is the riches of the glory of this mystery among the Gentiles; which is Christ in you, the hope of glory:
28எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.Whom we preach, warning every man, and teaching every man in all wisdom; that we may present every man perfect in Christ Jesus:
29அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.Whereunto I also labour, striving according to his working, which worketh in me mightily.
1Thaevanutaiya siththaththinaalae YesuKristhuvin apposthalanaakiya pavulum, sakotharanaakiya theemoththaeyum,Paul, an apostle of Jesus Christ by the will of God, and Timotheus our brother,
2Kolose pattanaththil Kristhuvukkul Parisuththavaankalum visuvaasikalumaayirukkira sakothararkalukku eluthukirathaavathu: nammutaiya pithaavaakiya thaevanaalum karththaraakiya YesuKristhuvinaalum ungalukkuk kirupaiyum samaathaanamum unndaavathaaka.To the saints and faithful brethren in Christ which are at Colosse: Grace be unto you, and peace, from God our Father and the Lord Jesus Christ.
3Kristhu Yesuvinmaelulla ungal visuvaasaththaiyum, Parisuththavaankalellaarmaelulla ungal anpaiyunguriththu naangal kaelvippattu,We give thanks to God and the Father of our Lord Jesus Christ, praying always for you,
4Paralokaththil ungalukkaaka vaiththirukkira nampikkaiyinimiththam,Since we heard of your faith in Christ Jesus, and of the love which ye have to all the saints,
5Nammutaiya karththaraakiya YesuKristhuvin pithaavaakiya thaevanukku sthoththiranjaெluththi, eppoluthum ungalukkaaka vaennduthal seykirom.For the hope which is laid up for you in heaven, whereof ye heard before in the word of the truth of the gospel;
6Antha nampikkaiyaikkuriththu, neengal munnamae saththiyavasanamaakiya suviseshaththinaalae kaelvippattirkal; anthach Suvisesham ulakamengum parampip palantharukirathupola, ungalidaththilum vanthu, neengal athaik kaettu, thaevakirupaiyaich saththiyaththinpati arinthukonnda naalmuthal, athu ungalukkullum palantharukirathaayirukkirathu;Which is come unto you, as it is in all the world; and bringeth forth fruit, as it doth also in you, since the day ye heard of it, and knew the grace of God in truth:
7Athai engalukkup piriyamaana udanvaelaiyaalum, ungalukkaakak Kristhuvin unnmaiyaana ooliyakkaaranumaayirukkira eppaappiraavinidaththil neengal kattarinthirukkireerkal;As ye also learned of Epaphras our dear fellowservant, who is for you a faithful minister of Christ;
8Aavikkullaana ungal anpaiyum avanae engalukkuth theriyappaduththinaan.Who also declared unto us your love in the Spirit.
9Ithinimiththam, naangal athaikkaetta naalmuthal ungalukkaaka itaividaamal Jebampannnukirom; neengal ellaa njaanaththodum, aavikkuriya vivaekaththodum avarutaiya siththaththai arikira arivinaalae nirappappadavum,For this cause we also, since the day we heard it, do not cease to pray for you, and to desire that ye might be filled with the knowledge of his will in all wisdom and spiritual understanding;
10Sakalavitha narkiriyaikalumaakiya kanikalaith thanthu, thaevanai arikira arivil viruththiyatainthu, karththarukkup piriyamunndaaka avarukkup paaththiraraay nadanthukollavum,That ye might walk worthy of the Lord unto all pleasing, being fruitful in every good work, and increasing in the knowledge of God;
11Santhoshaththotae kootiya ellaapporaுmaiyum neetiyasaanthamum unndaavatharku, makimaiyaana avarutaiya vallamaiyinpati, ellaa vallamaiyaalum palappaduththappadavum, ungalukkaaka vaennduthalseykirom.Strengthened with all might, according to his glorious power, unto all patience and longsuffering with joyfulness;
12Oliyilulla Parisuththavaankalutaiya suthantharaththil pangataivatharku, nammaith thakuthiyullavarkalaakkinavarum,Giving thanks unto the Father, which hath made us meet to be partakers of the inheritance of the saints in light:
13Irulin athikaaraththinintu nammai viduthalaiyaakki, thamathu anpin kumaaranutaiya raajyaththirku utpaduththinavarumaayirukkira pithaavai sthoththirikkirom.Who hath delivered us from the power of darkness, and hath translated us into the kingdom of his dear Son:
14Avarukkul, avarutaiya iraththaththinaalae, paavamannippaakiya meetpu namakku unndaayirukkirathu.In whom we have redemption through his blood, even the forgiveness of sins:
15Avar atharisanamaana thaevanutaiya tharsuroopamum, sarva sirushtikkum munthina paeraுmaanavar.Who is the image of the invisible God, the firstborn of every creature:
16Aenental avarukkul sakalamum sirushtikkappattathu; paralokaththilullavaikalum poolokaththilullavaikalumaakiya kaanappadukiravaikalum kaanappadaathavaikalumaana sakala vasthukkalum, singaasanangalaanaalum, karththaththuvangalaanaalum, thuraiththanangalaanaalum, athikaarangalaanaalum, sakalamum avaraikkonndum avarukkentum sirushtikkappattathu.For by him were all things created, that are in heaven, and that are in earth, visible and invisible, whether they be thrones, or dominions, or principalities, or powers: all things were created by him, and for him:
17Avar ellaavattirkum munthinavar, ellaam avarukkul nilainirkirathu.And he is before all things, and by him all things consist.
18Avarae Sabaiyaakiya sareeraththukkuth thalaiyaanavar; ellaavattilum muthalvaraayirukkumpati, avarae aathiyum mariththorilirunthu eluntha mutharpaeraுmaanavar.And he is the head of the body, the church: who is the beginning, the firstborn from the dead; that in all things he might have the preeminence.
19Sakala paripooranamum avarukkullae vaasamaayirukkavum,For it pleased the Father that in him should all fulness dwell;
20Avar siluvaiyil sinthina iraththaththinaalae samaathaanaththai unndaakki, poolokaththilullavaikal paralokaththilullavaikal yaavaiyum avar moolamaayth thamakku oppuravaakkikkollavum avarukkup piriyamaayittaு.And, having made peace through the blood of his cross, by him to reconcile all things unto himself; by him, I say, whether they be things in earth, or things in heaven.
21Munnae anniyaraayum thurkkiriyaikalinaal manathilae saththurukkalaayumiruntha ungalaiyum Parisuththaraakavum kuttamattavarkalaakavum kanntikkappadaathavarkalaakavum thamakku mun niraுththumpatiyaaka avarutaiya maamsa sareeraththil ataintha maranaththinaalae ippoluthu oppuravaakkinaar.And you, that were sometime alienated and enemies in your mind by wicked works, yet now hath he reconciled
22Neengal kaetta suviseshaththinaal unndaakum nampikkaiyaivittu asaiyaamal, sthiramaayum uraுthiyaayum visuvaasaththilae nilaiththiruppeerkalaanaal appatiyaakum.In the body of his flesh through death, to present you holy and unblameable and unreproveable in his sight:
23Anthach Suvisesham vaanaththin geelirukkira sakala sirushtikalukkum pirasangikkappattuvarukirathu; atharkente pavulaakiya naan ooliyakkaaranaanaen.If ye continue in the faith grounded and settled, and be not moved away from the hope of the gospel, which ye have heard, and which was preached to every creature which is under heaven; whereof I Paul am made a minister;
24Ippoluthu naan ungal nimiththam anupavikkira paadukalil santhoshamatainthu, Kristhuvinutaiya upaththiravangalil kuraivaanathai avarutaiya sareeramaakiya Sabaikkaaka, en maamsaththil niraivaettaுkiraேn.Who now rejoice in my sufferings for you, and fill up that which is behind of the afflictions of Christ in my flesh for his body's sake, which is the church:
25Aathikaalangalukkum thalaimurai thalaimuraikalukkum maraivaayirunthu, ippoluthu avarutaiya Parisuththavaankalukku veliyaakkappatta irakasiyamaakiya thaevavasanaththaip pooranamaayth theriyappaduththukiratharku,Whereof I am made a minister, according to the dispensation of God which is given to me for you, to fulfil the word of God;
26Ungalporuttu thaevanaal enakku alikkappatta uththiyokaththinpatiyae naan anthach Sabaikku ooliyakkaaranaanaen.Even the mystery which hath been hid from ages and from generations, but now is made manifest to his saints:
27Purajaathikalukkullae vilangiya intha irakasiyaththilulla makimaiyin aisuvariyam innathentu, Dhevan thammutaiya Parisuththavaankalukkuth theriyappaduththach siththamaanaar; Kristhuvaanavar makimaiyin nampikkaiyaaka ungalukkul iruppathae antha irakasiyam.To whom God would make known what is the riches of the glory of this mystery among the Gentiles; which is Christ in you, the hope of glory:
28Entha manushanaiyum Kristhu Yesuvukkul thaerinavanaaka niraுththumpatikku, avaraiyae naangal ariviththu, entha manushanukkum puththisolli, entha manushanukkum ellaa njaanaththodum upathaesampannnukirom.Whom we preach, warning every man, and teaching every man in all wisdom; that we may present every man perfect in Christ Jesus:
29Atharkaaka naan enakkullae vallamaiyaayk kiriyai nadappikkira avarutaiya palaththinpati poraatip pirayaasappadukiraேn.Whereunto I also labour, striving according to his working, which worketh in me mightily.