1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:And the LORD spake unto Moses and unto Aaron, saying,
2கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.This is the ordinance of the law which the LORD hath commanded, saying, Speak unto the children of Israel, that they bring thee a red heifer without spot, wherein is no blemish, and upon which never came yoke:
3அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.And ye shall give her unto Eleazar the priest, that he may bring her forth without the camp, and one shall slay her before his face:
4அப்பொழுது ஆசாரியனξகிய Πβெயξசார͠தன் வߠΰலߠΩாலύ அதοΩ் இΰத்ĠΤ்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன்.And Eleazar the priest shall take of her blood with his finger, and sprinkle of her blood directly before the tabernacle of the congregation seven times:
5பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.And one shall burn the heifer in his sight; her skin, and her flesh, and her blood, with her dung, shall he burn:
6அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்புநூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன்.And the priest shall take cedar wood, and hyssop, and scarlet, and cast it into the midst of the burning of the heifer.
7பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.Then the priest shall wash his clothes, and he shall bathe his flesh in water, and afterward he shall come into the camp, and the priest shall be unclean until the even.
8அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.And he that burneth her shall wash his clothes in water, and bathe his flesh in water, and shall be unclean until the even.
9சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டி வைக்கக்கடவன், அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்துவைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up without the camp in a clean place, and it shall be kept for the congregation of the children of Israel for a water of separation: it is a purification for sin.
10கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக.And he that gathereth the ashes of the heifer shall wash his clothes, and be unclean until the even: and it shall be unto the children of Israel, and unto the stranger that sojourneth among them, for a statute for ever.
11செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.He that toucheth the dead body of any man shall be unclean seven days.
12அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான்.He shall purify himself with it on the third day, and on the seventh day he shall be clean: but if he purify not himself the third day, then the seventh day he shall not be clean.
13செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.Whosoever toucheth the dead body of any man that is dead, and purifieth not himself, defileth the tabernacle of the LORD; and that soul shall be cut off from Israel: because the water of separation was not sprinkled upon him, he shall be unclean; his uncleanness is yet upon him.
14கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.This is the law, when a man dieth in a tent: all that come into the tent, and all that is in the tent, shall be unclean seven days.
15மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.And every open vessel, which hath no covering bound upon it, is unclean.
16வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.And whosoever toucheth one that is slain with a sword in the open fields, or a dead body, or a bone of a man, or a grave, shall be unclean seven days.
17ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும்.And for an unclean person they shall take of the ashes of the burnt heifer of purification for sin, and running water shall be put thereto in a vessel:
18சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன்.And a clean person shall take hyssop, and dip it in the water, and sprinkle it upon the tent, and upon all the vessels, and upon the persons that were there, and upon him that touched a bone, or one slain, or one dead, or a grave:
19சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான்.And the clean person shall sprinkle upon the unclean on the third day, and on the seventh day: and on the seventh day he shall purify himself, and wash his clothes, and bathe himself in water, and shall be clean at even.
20தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.But the man that shall be unclean, and shall not purify himself, that soul shall be cut off from among the congregation, because he hath defiled the sanctuary of the LORD: the water of separation hath not been sprinkled upon him; he is unclean.
21தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத்தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.And it shall be a perpetual statute unto them, that he that sprinkleth the water of separation shall wash his clothes; and he that toucheth the water of separation shall be unclean until even.
22தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.And whatsoever the unclean person toucheth shall be unclean; and the soul that toucheth it shall be unclean until even.
1Karththar Mosesyaiyum aaronaiyum Nnokki:And the LORD spake unto Moses and unto Aaron, saying,
2Karththar karpiththa niyamappiramaanamaavathu: paluthattathum oonamillaathathum nukaththatikku utpadaathathumaakiya sivappaana oru kidaariyai unnidaththil konnduvarumpati Israel puththirarukkuch sollungal.This is the ordinance of the law which the LORD hath commanded, saying, Speak unto the children of Israel, that they bring thee a red heifer without spot, wherein is no blemish, and upon which never came yoke:
3Athai eleyaasaar ennum aasaariyanidaththil oppukkodungal; avan athaip paalayaththukku veliyae konndupokakkadavan; angae athu avanukku munpaakak kollappadakkadavathu.And ye shall give her unto Eleazar the priest, that he may bring her forth without the camp, and one shall slay her before his face:
4Appoluthu aasaariyanaξkiya Πβெyaξsaara͠than vaߠΰlaߠΩாlaύ athaοΩ் iΰthĠΤ்thil konjam eduththu, aasarippuk koodaaraththukku ethiraaka aelutharam thelikkakkadavan.And Eleazar the priest shall take of her blood with his finger, and sprinkle of her blood directly before the tabernacle of the congregation seven times:
5Pinpu kidaariyai avan kannkalukku munpaaka oruvan sutterikkavaenndum; athin tholum athin maamsamum athin iraththamum athin saanniyum sutterikkappadavaenndum.And one shall burn the heifer in his sight; her skin, and her flesh, and her blood, with her dung, shall he burn:
6Appoluthu aasaariyan kaethurukkattaைyaiyum eesoppaiyum sivappunoolaiyum eduththu, kidaari erikkappadukira neruppin naduvilae podakkadavan.And the priest shall take cedar wood, and hyssop, and scarlet, and cast it into the midst of the burning of the heifer.
7Pinpu aasaariyan than vasthirangalaith thoyththu, jalaththilae snaanampannnni, athinpinpu paalayaththil piravaesikkakkadavan; aasaariyan saayangaalamattum theettuppattiruppaan.Then the priest shall wash his clothes, and he shall bathe his flesh in water, and afterward he shall come into the camp, and the priest shall be unclean until the even.
8Athaich sutteriththavanum than vasthirangalai jalaththil thoyththu, jalaththilae snaanampannnni, saayangaalamattum theettuppattiruppaan.And he that burneth her shall wash his clothes in water, and bathe his flesh in water, and shall be unclean until the even.
9Suththamaayirukkira oruvan anthak kidaariyin saampalai vaarikkonndu paalayaththirkup purampae suththamaana oru idaththilae kotti vaikkakkadavan, athu Israel puththirarin Sabaikkaakath theettukkalikkum jalaththukkentu kaaththuvaikkappadavaenndum; athu paavaththaip parikarikkum.And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up without the camp in a clean place, and it shall be kept for the congregation of the children of Israel for a water of separation: it is a purification for sin.
10Kidaariyin saampalai vaarinavan than vasthirangalaith thoykkakkadavan; avan saayangaalamattum theettuppattiruppaan; ithu Israel puththirarukkum avarkal naduvilae thangukira anniyanukkum niththiya kattalaiyaayiruppathaaka.And he that gathereth the ashes of the heifer shall wash his clothes, and be unclean until the even: and it shall be unto the children of Israel, and unto the stranger that sojourneth among them, for a statute for ever.
11Seththupponavanutaiya piraethaththaith thottavan aelunaal theettuppattiruppaan.He that toucheth the dead body of any man shall be unclean seven days.
12Avan moontam naalilum aelaam naalilum theettukkalikkum jalaththinaal thannaich suththikarikkakkadavan; appoluthu suththamaavaan; moontam naalilum aelaam naalilum thannaich suththikarikkaamaliruppaanaakil suththamaakaan.He shall purify himself with it on the third day, and on the seventh day he shall be clean: but if he purify not himself the third day, then the seventh day he shall not be clean.
13Seththavanutaiya piraethaththaith thottum, thannaich suththikariththukkollaathavan karththarin vaasasthalaththaith theettuppaduththukiraan; antha aaththumaa isravaelil iraamal araுppunndupovaan; theettukkalikkum jalam avanmael thelikkappadaathathinaal, avan theettuppattiruppaan; avan theettu innum avanmael irukkum.Whosoever toucheth the dead body of any man that is dead, and purifieth not himself, defileth the tabernacle of the LORD; and that soul shall be cut off from Israel: because the water of separation was not sprinkled upon him, he shall be unclean; his uncleanness is yet upon him.
14Koodaaraththil oru manithan seththaal, atharkaduththa niyamamaavathu: anthak koodaaraththil piravaesikkira yaavarum koodaaraththil irukkira yaavarum aelunaal theettuppattiruppaarkal.This is the law, when a man dieth in a tent: all that come into the tent, and all that is in the tent, shall be unclean seven days.
15Mootik kattappadaamal thiranthirukkum paaththirangal ellaam theettuppattirukkum.And every open vessel, which hath no covering bound upon it, is unclean.
16Veliyilae pattayaththaal vettunndavanaiyaavathu, seththavanaiyaavathu, manitha elumpaiyaavathu, piraethakkuliyaiyaavathu, thottavan evanum aelunaal theettuppattiruppaan.And whosoever toucheth one that is slain with a sword in the open fields, or a dead body, or a bone of a man, or a grave, shall be unclean seven days.
17Aakaiyaal theettuppattavanukkaaka, paavaththaip parikarikkum kidaariyin saampalilae konjam eduththu, oru paaththiraththil pottu, athinmael oottaு jalam vaarkkavaenndum.And for an unclean person they shall take of the ashes of the burnt heifer of purification for sin, and running water shall be put thereto in a vessel:
18Suththamaana oruvan eesoppai eduththu, antha jalaththilae thoyththu, koodaaraththinmaelum athilulla sakala pannimuttukalinmaelum angaeyirukkira janangalinmaelum thelikkirathumallaamal, elumpaiyaakilum vettunndavanaiyaakilum seththavanaiyaakilum piraethakkuliyaiyaakilum thottavanmaelum thelikkakkadavan.And a clean person shall take hyssop, and dip it in the water, and sprinkle it upon the tent, and upon all the vessels, and upon the persons that were there, and upon him that touched a bone, or one slain, or one dead, or a grave:
19Suththamaayirukkiravan theettuppattavanmael moontam naalilum aelaam naalilum thelikkavaenndum; aelaam naalil ivan thannaich suththikariththu, than vasthirangalaith thoyththu, jalaththil snaanampannnni, saayangaalaththilae suththamaayiruppaan.And the clean person shall sprinkle upon the unclean on the third day, and on the seventh day: and on the seventh day he shall purify himself, and wash his clothes, and bathe himself in water, and shall be clean at even.
20Theettuppattirukkiravan thannaich suththikariththuk kollaathirunthaal, avan Sabaiyil iraathapatikku araுppunndupovaan; avan karththarin Parisuththa sthalaththaith theettuppaduththinaan; theettukkalikkum jalam avanmael thelikkappadaathathinaal avan theettuppattirukkiraan.But the man that shall be unclean, and shall not purify himself, that soul shall be cut off from among the congregation, because he hath defiled the sanctuary of the LORD: the water of separation hath not been sprinkled upon him; he is unclean.
21Theettukkalikkum jalaththaith thelikkiravanum than vasthirangalaith thoykkakkadavan; theettukkalikkum jalaththaiththottavanum saayangaalamattum theettuppattiruppaan.And it shall be a perpetual statute unto them, that he that sprinkleth the water of separation shall wash his clothes; and he that toucheth the water of separation shall be unclean until even.
22Theettuppattirukkiravan thodukiravaikalellaam theettuppadum, avaikalaith thodukiravanum saayangaalamattum theettuppattiruppaan; ithu ungalukku niththiya kattalaiyaayirukkum entar.And whatsoever the unclean person toucheth shall be unclean; and the soul that toucheth it shall be unclean until even.