Deuteronomy 33 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 கடவுளின் அடியவரான மோசே, தாம் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது:2 ⁽ஆண்டவர் சீனாயினின்று வந்தார்;␢ சேயிரினின்று அவர்களுக்குத்␢ தோன்றினார்;␢ பாரான் மலையினின்று␢ அவர்கள் மீது ஒளிர்ந்தார்;␢ பல்லாயிரம் புனிதர் புடைசூழ␢ வந்தார்;␢ அவரது வலப்புறத்தினின்று␢ மின்னல் ஒளிர் திருச்சட்டம்␢ ஏந்திவந்தார்.⁾3 ⁽உண்மையாகவே, மக்களினங்களின்␢ அன்பர் அவர்;␢ அவர்தம் புனிதர்கள் அவர்␢ கையில் உள்ளனர்.␢ அவர்கள் அவரது பாதங்களில் அமர்வர்;␢ அனைவரும் அவரது கூற்றுகளை␢ ஏற்றுக்கொள்வர்.⁾4 ⁽மோசே எங்களுக்குத்␢ திருச்சட்டத்தைக் கட்டளையாக␢ வழங்கினார்; அதுவே யாக்கோபினது␢ திருக்கூட்டத்தின் உடைமை.⁾5 ⁽மக்கள் தலைவர்களும்␢ இஸ்ரயேலின் குலங்களும்␢ ஒன்று திரட்டப்பட்டபொழுது␢ அவர் எசுரூன்மீது அரசனாய்␢ இருந்தார்.⁾6 ⁽ரூபன் வாழட்டும்; அவன்␢ மடிந்து போகாதிருக்கட்டும்;␢ அவன்தன் புதல்வர்␢ குறையாதிருக்கட்டும்!⁾7 ⁽யூதாவுக்கான ஆசி இதுவே.␢ அவர் கூறியது:␢ ஆண்டவரே, யூதாவின் குரலைக் கேளும்;␢ அவனை அவனுடைய மக்களிடம்␢ கொண்டு வாரும்;␢ அவனது கைகள் அவனுக்குப்␢ போதுமானது ஆகட்டும்.␢ அவனுக்குத் துணை நின்று␢ அவனுடைய பகைவரிடமிருந்து␢ காத்தருளும்.⁾8 ⁽லேவியைக் குறித்து அவர் கூறியது:␢ ஆண்டவரே, உம் தும்மிம், ஊரிம்␢ என்பவை மாசாவில் சோதிக்கப்பட்டு␢ மெரிபாவின் நீரூற்றருகில்␢ வழக்காடிய உம் பற்றுமிகு அடியானிடம்␢ இருக்கட்டும்.⁾9 ⁽அவனிடமே அவற்றைக் கொடும்;␢ ஏனெனில் அவன் தன் தந்தையையும்␢ தாயையும் நோக்கி ‘நான்␢ உங்களைப் பாரேன்’ என்றவன்;␢ தன் சகோதரர்களை அடையாளம்␢ கண்டு கொள்ளாதவன்;␢ தன் சொந்தப் பிள்ளைகளையே␢ அறியாதவன்; உம் வார்த்தைகளைக்␢ கடைப்பிடித்து உம் உடன்படிக்கையை␢ நிறைவேற்றுபவன்;⁾10 ⁽யாக்கோபுக்கு உம்␢ நீதிமுறைமைகளையும்␢ இஸ்ரயேலுக்கு உம் திருச்␢ சட்டத்தையும் கற்றுத்தருபவன்;␢ உமது முன்னிலையில் தூபம்␢ காட்டுபவன்;␢ உமது பீடத்தில் எரிபலிகளைச்␢ செலுத்துபவன்.⁾11 ⁽ஆண்டவரே, அவனது ஆற்றலை␢ ஆசியால் நிரப்பும்;␢ அவனுடைய கரங்களின் உழைப்பை␢ ஏற்றுக்கொள்ளும்;␢ அவனுக்கு எதிராக எழும்புவோரை␢ அவர்களின் இடுப்பு ஒடிந்து␢ விழும் வண்ணம் வதையும்.␢ அவனைப் பகைப்பவர் மீண்டும்␢ எழாதவாறு செய்யும்.⁾12 ⁽பென்யமினைக் குறித்து அவர்␢ கூறியது:␢ ஆண்டவரின் அன்புக்கு உரியவன்;␢ அவரால் அவன் பாதுகாப்புடன்␢ வாழ்வான்.␢ எக்காலமும் அவனை அவர்␢ அரவணைத்துக் காப்பார்;␢ அவர்தம் கரங்களுக்கிடையே␢ அவன் வாழ்வான்.⁾13 ⁽யோசேப்பைக் குறித்து அவர் கூறியது:␢ அவனது நிலம் ஆண்டவரால்␢ ஆசி பெற்றது;␢ அது வானத்தின் செல்வத்தாலும்␢ பனியாலும்,⁾14 ⁽ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும்,␢ கதிரவன் வழங்கும் கனிகளாலும்,␢ பருவங்கள் விளைவிக்கும்␢ பயன்களாலும்⁾15 ⁽பண்டைய மலைகளின் உயர்␢ செல்வங்களாலும், என்றுமுள␢ குன்றுகளின் அரும் பொருள்களாலும்␢ ஆசிபெற்றது.⁾16 ⁽நிலம் தரும் பெரும் விளைச்சலும்␢ அதன் நிறைவும், முட்புதரில்␢ வீற்றிருந்தவரின் அருளன்பும்,␢ எல்லா ஆசிகளும் யோசேப்பின்␢ தலைமீதும் தன் சகோதரருள்␢ தேர்ந்தெடுக்கப்பட்டவனின்␢ உச்சந்தலைமீதும் தங்குவதாக!⁾17 ⁽அவனது நடை தலையீற்றுக்␢ காளையின் பீடுநடை போன்றது.␢ அவனின் கொம்புகள்␢ காட்டெருமையின் கொம்புகள்␢ போன்றவை;␢ அவற்றால் மக்களினத்தாரைப்␢ பூவுலகின் கடை எல்லைவரை␢ முட்டித் துரத்துவான்.␢ அவை எப்ராயிமின் பதினாயிரம்␢ படைகளும் மனாசேயின் ஆயிரம்␢ படைகளும் ஆகும்.⁾18 ⁽செபுலோனைக் குறித்து அவர்␢ கூறியது:␢ செபுலோனே, நீ பயணம்␢ செய்கையில் மகிழ்ந்திடு!␢ இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கும்␢ போது மகிழ்ந்திடு!⁾19 ⁽அவர்கள் மக்களினங்களை␢ மலைக்கு அழைத்துச் செல்வர்;␢ அங்கு அவர்கள் ஏற்புடைய␢ பலிகளைச் செலுத்துவர்;␢ அவர்கள் கடலில் பலுகியிருப்பதும்␢ மணலில் புதைந்திருப்பதுமான␢ திரளான செல்வங்களை அனுபவிப்பார்.⁾20 ⁽காத்தைக் குறித்து அவர் கூறியது:␢ காத்தைப் பெருகச் செய்பவர்␢ போற்றி! போற்றி!␢ காத்து சிங்கத்தைப்போல்␢ தங்கியிருந்து புயத்தையும்␢ தலையையும் பீறிப் பிளந்திடுவான்.⁾21 ⁽அவன் தனக்கெனச் சிறந்த␢ இடத்தைத் தேர்ந்து கொண்டான்;␢ தலைவனுக்குரிய பங்கு அவனுக்காக␢ ஒதுக்கப்பட்டிருந்தது; மக்களின்␢ தலைவனாகி, அவன் ஆண்டவரின்␢ நீதியை நிலை நிறுத்தினான்;␢ ஏனைய இஸ்ரயேலரோடு சேர்ந்து,␢ அவர்தம் நீதிமுறையை␢ நிலைநாட்டினான்.⁾22 ⁽தாணைக் குறித்து அவர் கூறியது:␢ தாண் பாசானினின்று␢ பாய்ந்துவரும் சிங்கக்குட்டி.⁾23 ⁽நப்தலியைக் குறித்து அவர் கூறியது:␢ ஆண்டவரின் அருளன்பால்␢ நிறைவு பெற்றவன்;␢ கலிலேயக் கடலையும்␢ தென்திசையையும்␢ உடைமையாக்கிக் கொள்வான்.⁾24 ⁽ஆசேரைக் குறித்து அவர் கூறியது:␢ ஆசேர் எல்லாக் குலங்களிடையே␢ ஆசி பெற்றவனாவான்;␢ தன் உடன்பிறந்தாருக்கு␢ உகந்தவனாய் இருப்பான்;␢ அவன் தன் காலை எண்ணெயில்␢ தோய்ப்பான்.⁾25 ⁽உன் தாழ்ப்பாள்கள் இரும்பாலும்␢ செம்பாலும் ஆனவை;␢ உன் வாழ்நாள் அனைத்தும் நீ␢ பாதுகாப்புடன் இருப்பாய்.⁾26 ⁽எசுரூபின் இறைவன்போல்␢ எவருமில்லை; அவர் உனக்கு␢ உதவிட வானங்களின் வழியாக␢ தமது மாட்சியுடன் மேகங்கள்மீது␢ ஏறிவருவார்.⁾27 ⁽என்றுமுள கடவுளே உனக்குப்␢ புகலிடம்; என்றுமுள அவரது␢ புயம் உனக்கு அடித்தளம்;␢ ‘பகைவரை உன் முன்னின்று␢ விரட்டியடித்து, அவர்களை␢ அழித்துவிடு’ என்பார் அவர்.⁾28 ⁽அப்போது, இஸ்ரயேல்␢ பாதுகாப்புடன் வாழ்ந்திடும்;␢ யாக்கோபின் உறைவிடம் தானியமும்,␢ இரசமும் மிகுந்த நிலத்தில்␢ இருக்கும்; அவர்தம் மேகங்கள்␢ பனி மழை பொழியும்.⁾29 ⁽இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்;␢ ஆண்டவரால் மீட்கப்பட்ட␢ மக்களினமே! உன்னைப்போல்␢ வேறு இனம் உண்டோ?␢ உன்னைக் காக்கும் கேடயமும் உன்␢ வெற்றி வாளும் அவரே!␢ உன் பகைவர் உன்முன் கூனிக்␢ குறுகுவர்! அவர்களின்␢ தொழுகைமேடுகளை நீ ஏறி மிதிப்பாய்.⁾