ஏழை மனுவுருவை எடுத்த
இயேசு இராஜன் உன்னண்டை
நிற்கிறார்
ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே
(2)
1. கைகளில் கால்களில்
ஆணிகள் கடாவ
கடும் முள்முடி பொன் சிரசில்
சூடிட
கந்தையும் நிந்தையும்
வேதனை சகித்தார்
சொந்தமான இரத்தம்
சிந்தினார் உனக்காய்
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே (2)
2. அவர் தலையும் சாய்க்க
ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ
பானமுமில்லை
ஆறுதல் சொல்லவோ
அங்கே ஒருவரில்லை
அருமை இரட்சகர்
தொங்குறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே
3. அவர் மரணத்தால்
சாத்தானின் தலை நசுங்க
அவர் இரத்தத்தால் பாவக்
கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும்
ஒழிய
நீயும் சாபத்தினின்று
விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார்
யாவையும் (2)
4. மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால்
இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய் (2)
5. இன்னமும் தாமதம்
உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை
எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா
சமாதானத்தை
இன்று உனக்குத் தரக் காத்து
நிற்கிறாரே
அண்ணல்இயேசுன்னைஅழைக்கிறாரே(2)
Ezhai Manuvuruvai Eduththa Lyrics in English
Aelai manuvuruvai eduththa Yesu iraajan unnanntai nirkiraar aettaுkkol avaraith thallaathae (2) 1. Kaikalil kaalkalil aannikal kadaava kadum mulmuti pon sirasil sootida kanthaiyum ninthaiyum vaethanai sakiththaar sonthamaana iraththam sinthinaar unakkaay kanivudan unnai alaikkiraarae (2) 2. Avar thalaiyum saaykka sthalamumillai antu thaakaththaith theerkkavo paanamumillai aaraுthal sollavo angae oruvarillai arumai iratchakar thonguraar thaniyae anthap paadukal unnai meetkavae 3. Avar maranaththaal saaththaanin thalai nasunga avar iraththaththaal paavak karaikal neenga unthan viyaathiyin vaethanaiyum oliya neeyum saapaththinintu viduthalai ataiya siluvaiyil jeyiththaar yaavaiyum (2) 4. Maayai ulakam athaiyum nampaathae manumakkal manamum maarip pokumae niththiya thaevanai naesiththaal ippothae nichchayam santhosham pettaு nee makila nampikkaiyotae vanthiduvaay (2) 5. Innamum thaamatham unakkaen makanae inpa Yesuvanntai elunthu vaaraayo intha ulakam tharakkoodaa samaathaanaththai intu unakkuth tharak kaaththu nirkiraarae annnalYesunnaialaikkiraarae(2)
PowerPoint Presentation Slides for the song Ezhai Manuvuruvai Eduththa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhai Manuvuruvai Eduththa – ஏழை மனுவுருவை எடுத்த PPT
Ezhai Manuvuruvai Eduththa PPT

