தமிழ்

Aathuma Aadhayam - ஆத்தும ஆதாயம் செங்குவோமே இது

ஆத்தும ஆதாயம் செங்குவோமே – இது
ஆண்டவர்க்குப் பிரியம் நாமதினால்
ஆசீர்வாதம் பெறுவோம்

சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
தஞ்சத்தைப் பெற்றுநாமித்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
அற்புதமான பலனை அடையலாம்

பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் – ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்தி விட்டால்
ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று
ஏழை ரூபங்கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே

கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவசுதன் – வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தைதானே
துட்டை யருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே

Aathuma Aadhayam Lyrics in English

aaththuma aathaayam senguvomae – ithu
aanndavarkkup piriyam naamathinaal
aaseervaatham peruvom

saaththiram yaavum therintha kiristhaiyan
thanjaththaip pettunaamiththa maavaelaiyil
aaththiramaaka muyarsi seyvomaakil
arputhamaana palanai ataiyalaam

paalulaka muluthaiyum oruvan sam
paathiththuk konndaalum – oru
naalumaliyaatha aaththumaththai avan
nashdappaduththi vittal
aalunthuraiyava naayirunthaalumae
aththaal avanukku laapamillai yentu
aelai roopangaொnndu njaalamathil vantha
emperumaan kiristhaesantu sonnaarae

kettuppona aaththumaakkalai ratchikka
mattillaa thaevasuthan – vaanai
vittulakil kanapaadu pattu jeevan
vittathum vinthaithaanae
thuttaை yaruththiyi naaththumaththai meetka
thooyaparan munnor kinattarukilae
ittamudan seytha iratchannya vaelaiyai
intha nimishamae sinthaiyi lennnniyae

PowerPoint Presentation Slides for the song Aathuma Aadhayam

by clicking the fullscreen button in the Top left