Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 1:10 in Tamil

Home Bible Revelation Revelation 1 Revelation 1:10

வெளிப்படுத்தின விசேஷம் 1:10
கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

Tamil Indian Revised Version
கர்த்தரை ஆராதிக்கும் நாளில் நான் ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போல ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய நாளில் பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார். அப்பொழுது ஒரு பெரிய சத்தத்தை எனக்குப் பின்பாகக் கேட்டேன். அது எக்காள சத்தம்போல் இருந்தது.

Thiru Viviliam
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன்.

Revelation 1:9Revelation 1Revelation 1:11

King James Version (KJV)
I was in the Spirit on the Lord’s day, and heard behind me a great voice, as of a trumpet,

American Standard Version (ASV)
I was in the Spirit on the Lord’s day, and I heard behind me a great voice, as of a trumpet

Bible in Basic English (BBE)
I was in the Spirit on the Lord’s day, and a great voice at my back, as of a horn, came to my ears,

Darby English Bible (DBY)
I became in [the] Spirit on the Lord’s day, and I heard behind me a great voice as of a trumpet,

World English Bible (WEB)
I was in the Spirit on the Lord’s day, and I heard behind me a loud voice, like a trumpet

Young’s Literal Translation (YLT)
I was in the Spirit on the Lord’s-day, and I heard behind me a great voice, as of a trumpet, saying,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 1:10
கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
I was in the Spirit on the Lord's day, and heard behind me a great voice, as of a trumpet,

ἐγενόμηνegenomēnay-gay-NOH-mane
ἐνenane
πνεύματιpneumatiPNAVE-ma-tee
ἐνenane
τῇtay
κυριακῇkyriakēkyoo-ree-ah-KAY
ἡμέρᾳhēmeraay-MAY-ra
καὶkaikay
ἤκουσαēkousaA-koo-sa
ὀπίσωopisōoh-PEE-soh
μουmoumoo
φωνὴνphōnēnfoh-NANE
μεγάληνmegalēnmay-GA-lane
ὡςhōsose
σάλπιγγοςsalpingosSAHL-peeng-gose

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 17:3
ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:10
பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:1
இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:7
வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.

மத்தேயு 22:43
அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?

2 கொரிந்தியர் 12:2
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:10
அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து,

வெளிப்படுத்தின விசேஷம் 10:3
சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.

1 கொரிந்தியர் 16:2
நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.

யோவான் 20:19
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

யோவான் 20:26
மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.


Tags கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன் அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்
Revelation 1:10 in Tamil Concordance Revelation 1:10 in Tamil Interlinear Revelation 1:10 in Tamil Image