வெளிப்படுத்தின விசேஷம் 14:14
பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.
Tamil Indian Revised Version
பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனிதகுமாரனைப்போல தமது தலையின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கூர்மையான அரிவாளையும் வைத்திருக்கும் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன்.
Tamil Easy Reading Version
நான் பார்த்தபோது எனக்கு முன்னால் ஒரு வெண்ணிற மேகத்தைக் கண்டேன். அம்மேகத்தின் மீது மனித குமாரனைப் போன்ற ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரது தலையில் பொன் கிரீடம் இருந்தது. அவரது கையிலோ கூர்மையான அரிவாள் இருந்தது.
Thiru Viviliam
பின்பு, ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப்போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.
Title
பூமி அறுவடையாகுதல்
Other Title
நாடுகள் ஒன்றுதிரட்டப்படல்
King James Version (KJV)
And I looked, and behold a white cloud, and upon the cloud one sat like unto the Son of man, having on his head a golden crown, and in his hand a sharp sickle.
American Standard Version (ASV)
And I saw, and behold, a white cloud; and on the cloud `I saw’ one sitting like unto a son of man, having on his head a golden crown, and in his hand sharp sickle.
Bible in Basic English (BBE)
And I saw a white cloud, and on the cloud I saw one seated, like a son of man, having on his head a crown of gold, and in his hand a sharp curved blade.
Darby English Bible (DBY)
And I saw, and behold, a white cloud, and on the cloud one sitting like [the] Son of man, having upon his head a golden crown, and in his hand a sharp sickle.
World English Bible (WEB)
I looked, and behold, a white cloud; and on the cloud one sitting like a son of man, having on his head a golden crown, and in his hand a sharp sickle.
Young’s Literal Translation (YLT)
And I saw, and lo, a white cloud, and upon the cloud `one’ sitting like to a son of man, having upon his head a golden crown, and in his hand a sharp sickle;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 14:14
பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.
And I looked, and behold a white cloud, and upon the cloud one sat like unto the Son of man, having on his head a golden crown, and in his hand a sharp sickle.
| Καὶ | kai | kay | |
| εἶδον | eidon | EE-thone | |
| καὶ | kai | kay | |
| ἰδού, | idou | ee-THOO | |
| νεφέλη | nephelē | nay-FAY-lay | |
| λευκή | leukē | layf-KAY | |
| καὶ | kai | kay | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τὴν | tēn | tane | |
| νεφέλην | nephelēn | nay-FAY-lane | |
| καθήμενος | kathēmenos | ka-THAY-may-nose | |
| ὅμοιος | homoios | OH-moo-ose | |
| υιῷ | uiō | yoo-OH | |
| ἀνθρώπου | anthrōpou | an-THROH-poo | |
| ἔχων | echōn | A-hone | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τῆς | tēs | tase | |
| κεφαλῆς | kephalēs | kay-fa-LASE | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| στέφανον | stephanon | STAY-fa-none | |
| χρυσοῦν | chrysoun | hryoo-SOON | |
| καὶ | kai | kay | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| χειρὶ | cheiri | hee-REE | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| δρέπανον | drepanon | THRAY-pa-none | |
| ὀξύ | oxy | oh-KSYOO |
Cross Reference
வெளிப்படுத்தின விசேஷம் 1:13
அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:2
நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
தானியேல் 7:13
இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:15
அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.
மத்தேயு 17:5
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
சங்கீதம் 21:3
உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 19:12
அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 11:17
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.
வெளிப்படுத்தின விசேஷம் 10:1
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 1:7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
எபிரெயர் 2:9
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
லுூக்கா 21:27
அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
மாற்கு 4:29
பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.
மத்தேயு 13:30
அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
யோவேல் 3:12
ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.
எசேக்கியேல் 1:26
அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.
ஏசாயா 19:1
எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.
சங்கீதம் 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
Tags பின்பு நான் பார்த்தபோது இதோ வெண்மையான மேகத்தையும் அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்
Revelation 14:14 in Tamil Concordance Revelation 14:14 in Tamil Interlinear Revelation 14:14 in Tamil Image