1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Moreover the word of the LORD came to me, saying,
2நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.Go and cry in the ears of Jerusalem, saying, Thus saith the LORD; I remember thee, the kindness of thy youth, the love of thine espousals, when thou wentest after me in the wilderness, in a land that was not sown.
3இஸ்ரவேல் கர்த்தருக்கு பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.Israel was holiness unto the LORD, and the firstfruits of his increase: all that devour him shall offend; evil shall come upon them, saith the LORD.
4யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.Hear ye the word of the LORD, O house of Jacob, and all the families of the house of Israel:
5கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும் ஒருவனும், கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,Thus saith the LORD, What iniquity have your fathers found in me, that they are gone far from me, and have walked after vanity, and are become vain?
6என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?Neither said they, Where is the LORD that brought us up out of the land of Egypt, that led us through the wilderness, through a land of deserts and of pits, through a land of drought, and of the shadow of death, through a land that no man passed through, and where no man dwelt?
7செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.And I brought you into a plentiful country, to eat the fruit thereof and the goodness thereof; but when ye entered, ye defiled my land, and made mine heritage an abomination.
8கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.The priests said not, Where is the LORD? and they that handle the law knew me not: the pastors also transgressed against me, and the prophets prophesied by Baal, and walked after things that do not profit.
9ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.Wherefore I will yet plead with you, saith the LORD, and with your children's children will I plead.
10நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,For pass over the isles of Chittim, and see; and send unto Kedar, and consider diligently, and see if there be such a thing.
11எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.Hath a nation changed their gods, which are yet no gods? but my people have changed their glory for that which doth not profit.
12வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.Be astonished, O ye heavens, at this, and be horribly afraid, be ye very desolate, saith the LORD.
13என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.For my people have committed two evils; they have forsaken me the fountain of living waters, and hewed them out cisterns, broken cisterns, that can hold no water.
14இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்?Is Israel a servant? is he a homeborn slave? why is he spoiled?
15பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.The young lions roared upon him, and yelled, and they made his land waste: his cities are burned without inhabitant.
16நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.Also the children of Noph and Tahapanes have broken the crown of thy head.
17உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு நேரிடப்பண்ணினாய்?Hast thou not procured this unto thyself, in that thou hast forsaken the LORD thy God, when he led thee by the way?
18இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு சமாரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?And now what hast thou to do in the way of Egypt, to drink the waters of Sihor? or what hast thou to do in the way of Assyria, to drink the waters of the river?
19உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.Thine own wickedness shall correct thee, and thy backslidings shall reprove thee: know therefore and see that it is an evil thing and bitter, that thou hast forsaken the LORD thy God, and that my fear is not in thee, saith the Lord GOD of hosts.
20பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.For of old time I have broken thy yoke, and burst thy bands; and thou saidst, I will not transgress; when upon every high hill and under every green tree thou wanderest, playing the harlot.
21நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?Yet I had planted thee a noble vine, wholly a right seed: how then art thou turned into the degenerate plant of a strange vine unto me?
22நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.For though thou wash thee with nitre, and take thee much soap, yet thine iniquity is marked before me, saith the Lord GOD.
23நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாயோடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.How canst thou say, I am not polluted, I have not gone after Baalim? see thy way in the valley, know what thou hast done: thou art a swift dromedary traversing her ways;
24வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.A wild ass used to the wilderness, that snuffeth up the wind at her pleasure; in her occasion who can turn her away? all they that seek her will not weary themselves; in her month they shall find her.
25உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால் நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய்.Withhold thy foot from being unshod, and thy throat from thirst: but thou saidst, There is no hope: no; for I have loved strangers, and after them will I go.
26திருடன் அகப்படுகிறபோது எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கடமையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து நீ என்னைப் பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.As the thief is ashamed when he is found, so is the house of Israel ashamed; they, their kings, their princes, and their priests, and their prophets.
27அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்.Saying to a stock, Thou art my father; and to a stone, Thou hast brought me forth: for they have turned their back unto me, and not their face: but in the time of their trouble they will say, Arise, and save us.
28நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.But where are thy gods that thou hast made thee? let them arise, if they can save thee in the time of thy trouble: for according to the number of thy cities are thy gods, O Judah.
29என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.Wherefore will ye plead with me? ye all have transgressed against me, saith the LORD.
30நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.In vain have I smitten your children; they received no correction: your own sword hath devoured your prophets, like a destroying lion.
31சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.O generation, see ye the word of the LORD. Have I been a wilderness unto Israel? a land of darkness? wherefore say my people, We are lords; we will come no more unto thee?
32ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.Can a maid forget her ornaments, or a bride her attire? yet my people have forgotten me days without number.
33நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.Why trimmest thou thy way to seek love? therefore hast thou also taught the wicked ones thy ways.
34உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.Also in thy skirts is found the blood of the souls of the poor innocents: I have not found it by secret search, but upon all these.
35ஆகிலும் குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் என்னோடே வழக்காடுவேன்.Yet thou sayest, Because I am innocent, surely his anger shall turn from me. Behold, I will plead with thee, because thou sayest, I have not sinned.
36நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.Why gaddest thou about so much to change thy way? thou also shalt be ashamed of Egypt, as thou wast ashamed of Assyria.
37நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.Yea, thou shalt go forth from him, and thine hands upon thine head: for the LORD hath rejected thy confidences, and thou shalt not prosper in them.
1Karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Moreover the word of the LORD came to me, saying,
2Nee poy, erusalaemin sevikal kaetkumpatik kooppittuch sollavaenntiyathu ennavental: vithaikkappadaatha thaesamaakiya vanaantharaththilae nee ennaip pinpattivantha un ilavayathin pakthiyaiyum, nee vaalkkaippattapothu unakkiruntha naesaththaiyum ninaiththirukkiraேn entu Karththar sollukiraar.Go and cry in the ears of Jerusalem, saying, Thus saith the LORD; I remember thee, the kindness of thy youth, the love of thine espousals, when thou wentest after me in the wilderness, in a land that was not sown.
3Israel karththarukku Parisuththamum, avarutaiya vilaivin mutharpalanumaayirunthathu; athaip patchiththa yaavarum kuttavaalikalaanaarkal; pollaappu avarkalmael vanthathentu Karththar sollukiraar.Israel was holiness unto the LORD, and the firstfruits of his increase: all that devour him shall offend; evil shall come upon them, saith the LORD.
4Yaakkopin kudumpaththaarae, Israel kudumpaththin vamsangalae, neengalellaarum karththarutaiya vaarththaiyaik kaelungal.Hear ye the word of the LORD, O house of Jacob, and all the families of the house of Israel:
5Karththar sollukirathu ennavental: engalai ekipthuthaesaththilirunthu varappannnninavarum, avaantharaveliyum, pallangalumulla thaesamum, varatchiyum, marana irulumulla thaesamum oruvanum, kadavaamalum oru manushanum kutiyiraamalum irukkira thaesamumaana vanaantharaththil engalai nadaththinavarumaakiya Karththar engaeyentu ungal pithaakkal kaelaamal,Thus saith the LORD, What iniquity have your fathers found in me, that they are gone far from me, and have walked after vanity, and are become vain?
6Ennaivittuth thoorappattu, maayaiyaip pinpatti, veenaraayp pokiratharku ennidaththil enna aniyaayaththaik kanndaarkal?Neither said they, Where is the LORD that brought us up out of the land of Egypt, that led us through the wilderness, through a land of deserts and of pits, through a land of drought, and of the shadow of death, through a land that no man passed through, and where no man dwelt?
7Selippaana thaesaththin kaniyaiyum nanmaiyaiyum saappidumpatikku naan ungalai avvidaththukku alaiththukkonnduvanthaen; aanaalum neengal atharkul piravaesiththapothu, en thaesaththaith theettuppaduththi, en suthantharaththai aruvaruppaakkineerkal.And I brought you into a plentiful country, to eat the fruit thereof and the goodness thereof; but when ye entered, ye defiled my land, and made mine heritage an abomination.
8Karththar engaeyentu aasaariyarkal sollaamalum, vaethaththaip pothikkiravarkal ennai ariyaamalumirunthu, maeypparkal enakkuth thurokampannnninaarkal; theerkkatharisikal paakaalaikkonndu theerkkatharisananjaொlli, veennaanavaikalaip pinpattinaarkal.The priests said not, Where is the LORD? and they that handle the law knew me not: the pastors also transgressed against me, and the prophets prophesied by Baal, and walked after things that do not profit.
9Aathalaal innum naan ungalotae valakkaaduvaen, ungal pillaikalin pillaikalodum valakkaaduvaen entu Karththar sollukiraar.Wherefore I will yet plead with you, saith the LORD, and with your children's children will I plead.
10Neengal kiththeemin theevukalmattum kadanthupoyp paarththu, kaethaarukku aal anuppi nantay visaariththu, ippatippatta kaariyam unntoo entum,For pass over the isles of Chittim, and see; and send unto Kedar, and consider diligently, and see if there be such a thing.
11Entha jaathiyaavathu thaevarkalallaatha thangal thaevarkalai maattinathu unntoo entum paarungal; en janangalo veennaanavaikalukkaakath thangal makimaiyai maattinaarkal.Hath a nation changed their gods, which are yet no gods? but my people have changed their glory for that which doth not profit.
12Vaanangalae, ithinimiththam piramiththuk konthaliththu, mikavum thidukkidungal entu Karththar sollukiraar.Be astonished, O ye heavens, at this, and be horribly afraid, be ye very desolate, saith the LORD.
13En janangal iranndu theemaikalaich seythaarkal; jeevaththannnneer oottaாkiya ennai vittuvittarkal; thannnneer nirkaatha thottikalaakiya vetippulla thottikalai thangalukku vettikkonndaarkal.For my people have committed two evils; they have forsaken me the fountain of living waters, and hewed them out cisterns, broken cisterns, that can hold no water.
14Israel oru vaelaikkaarano? Avan veettil pirantha atimaiyo? Aen kollaiyaanaan?Is Israel a servant? is he a homeborn slave? why is he spoiled?
15Paalasingangal avanmael kerchchiththu, mulangi, avan thaesaththaip paalaakkivittana; avan pattanangal kutiyiraamal sutterikkappattana.The young lions roared upon him, and yelled, and they made his land waste: his cities are burned without inhabitant.
16Nnop, thakapaanaes ennum pattanangalin puththirarum, un uchchanthalaiyai noraுkkinaarkal.Also the children of Noph and Tahapanes have broken the crown of thy head.
17Un thaevanaakiya Karththar unnai valiyilae nadaththikkonndupokungaalaththil, nee avarai vittuppokirathinaal allavo unakku naeridappannnninaay?Hast thou not procured this unto thyself, in that thou hast forsaken the LORD thy God, when he led thee by the way?
18Ippothum seekorin thannnneeraik kutippatharku ekipthukkup pokirathinaal unakkup pirayojanam enna? Aippiraaththu nathiyin thannnneeraik kutippatharku samaariyaavukkup pokirathinaal unakkup pirayojanam enna?And now what hast thou to do in the way of Egypt, to drink the waters of Sihor? or what hast thou to do in the way of Assyria, to drink the waters of the river?
19Un theemai unnaith thanntikkum, un maaraுpaadukal unnaik kanntikkum; nee un thaevanaakiya karththarai vidukirathum, ennaip pattaுm payam unnidaththil illaamalirukkirathum, eththanai pollaappum kasappumaana kaariyam entu unarnthukol entu senaikalin karththaraakiya aanndavar sollukiraar.Thine own wickedness shall correct thee, and thy backslidings shall reprove thee: know therefore and see that it is an evil thing and bitter, that thou hast forsaken the LORD thy God, and that my fear is not in thee, saith the Lord GOD of hosts.
20Poorvakaalanthuvakki naan un nukaththatiyai muriththu, un kattukalai araுththaen; naan atimaippaduvathillai entu neeyum sonnaayae; aakilum, uyaramaana sakala maettinmaelum, pachchaைyaana sakalamaraththingeelum nee vaesiyaayth thirikiraay.For of old time I have broken thy yoke, and burst thy bands; and thou saidst, I will not transgress; when upon every high hill and under every green tree thou wanderest, playing the harlot.
21Naan unnai muttilum narkanitharum uyarkulath thiraatchachchetiyaaka naattinaen; nee enakkuk kaattuththiraatchachchetiyin aakaatha kotikalaay maaripponathu enna?Yet I had planted thee a noble vine, wholly a right seed: how then art thou turned into the degenerate plant of a strange vine unto me?
22Nee unnai uvarmannnninaalae kaluvi, athika savukkaaraththaik kaiyaatinaalum un akkiramaththin karaikal enakku munpaaka irukkumentu karththaraakiya aanndavar sollukiraar.For though thou wash thee with nitre, and take thee much soap, yet thine iniquity is marked before me, saith the Lord GOD.
23Naan theettuppadavillai; naan paakaalkalaip pinpattavillai entu nee eppatich sollukiraay? Pallaththaakkilae nee nadakkira maarkkaththaip paar; nee seythathai unarnthukol; thaaraுmaaraayodukira vaekamaana pennnnottakam nee.How canst thou say, I am not polluted, I have not gone after Baalim? see thy way in the valley, know what thou hast done: thou art a swift dromedary traversing her ways;
24Vanaantharaththilae palakinathum, than ichchaைyin mathaveriyilae kaattaை utkollukirathumaana kaattukkaluthai nee; athin aavalai niraுththi, athaith thiruppukiravan yaar? Athaith thaedukiravarkal oruvarum varuththappadavaenntiyathillai; athin maasaththil athaik kanndupitippaarkal.A wild ass used to the wilderness, that snuffeth up the wind at her pleasure; in her occasion who can turn her away? all they that seek her will not weary themselves; in her month they shall find her.
25Un kaal veraுngaalaakaathapatikkum, un thonntai varatchiyataiyaathapatikkum adakkikkol ental nee: athu koodaathakaariyam; naan appatich seyyamaattaேn; anniyarai naesikkiraேn; avarkal pirakae povaen enkiraay.Withhold thy foot from being unshod, and thy throat from thirst: but thou saidst, There is no hope: no; for I have loved strangers, and after them will I go.
26Thirudan akappadukirapothu eppati vetkappadukiraano, appatiyae Israel vamsaththaar vetkappaduvaarkal; kadamaiyaip paarththu, nee en thakappan entum; kallaippaarththu nee ennaip pettaாy entum sollukira avarkalum, avarkal raajaakkalum, avarkal pirapukkalum, avarkal aasaariyarkalum, avarkal theerkkatharisikalum vetkappaduvaarkal.As the thief is ashamed when he is found, so is the house of Israel ashamed; they, their kings, their princes, and their priests, and their prophets.
27Avarkal thangal mukaththaiyalla, thangal muthukai enakkuk kaattinaarkal; thangal aapaththukkaalaththilo elunthu engalai iratchiyum enkiraarkal.Saying to a stock, Thou art my father; and to a stone, Thou hast brought me forth: for they have turned their back unto me, and not their face: but in the time of their trouble they will say, Arise, and save us.
28Nee unakku unndupannnnina thaevarkal engae un aapaththukkaalaththil unnai iratchikkakkoodumaanaal avaikal elumpattum; yoothaavae, un pattanangalin ilakkamum, un thaevarkalin ilakkamum sari.But where are thy gods that thou hast made thee? let them arise, if they can save thee in the time of thy trouble: for according to the number of thy cities are thy gods, O Judah.
29Ennotae neengal valakkaaduvaanaen? Neengal anaivarum enakku virothamaayth thurokampannnnineerkal entu Karththar sollukiraar.Wherefore will ye plead with me? ye all have transgressed against me, saith the LORD.
30Naan ungal pillaikalai atiththathu viruthaa; sitchaைyai aettaுkkollaamarponaarkal; alikkira singaththaippola ungal pattayam ungal theerkkakarisikalaip patchiththathu.In vain have I smitten your children; they received no correction: your own sword hath devoured your prophets, like a destroying lion.
31Santhathiyaarae, neengal karththarutaiya vaarththaiyai sinthiththuppaarungal; naan isravaelukku vanaantharamum, kaarirulaana poomiyumaaka irunthaeno? Pinnai aen en janangal; naangalae ejamaankal, ini ummidaththil naangal varuvathillaiyentu sollukiraarkal.O generation, see ye the word of the LORD. Have I been a wilderness unto Israel? a land of darkness? wherefore say my people, We are lords; we will come no more unto thee?
32Oru penn than aaparanaththaiyum, oru manavaatti than aataikalaiyum marappaalo? En janangalo ennnnimutiyaatha naatkalaay ennai maranthuvittarkal.Can a maid forget her ornaments, or a bride her attire? yet my people have forgotten me days without number.
33Naesaththaith thaedumpatikku nee un valikalai nayappaduththukirathenna? Ivvithamaay nee pollaatha sthireekalukkum un valikalaik kattaுkkoduththaay.Why trimmest thou thy way to seek love? therefore hast thou also taught the wicked ones thy ways.
34Un vasthira orangalilum kuttamillaatha aelai aaththumaakkalin iraththam kaanappadukirathu; athaith thonntith thaedukirathinaal alla, athu ellaavattinmaelum veliyaayirukkirathinaal athaik kanndupitiththaen.Also in thy skirts is found the blood of the souls of the poor innocents: I have not found it by secret search, but upon all these.
35Aakilum kuttamillaathirukkiraேn entum, avarutaiya kopam ennaivittuth thirumpittaு entum sollukiraay; itho, naan paavanjaெyyavillaiyentu nee sollukirathinimiththam naan ennotae valakkaaduvaen.Yet thou sayest, Because I am innocent, surely his anger shall turn from me. Behold, I will plead with thee, because thou sayest, I have not sinned.
36Nee un valiyai maattimaatti ivvalavaay vilakip pokirathu enna? Nee aseeriyaavinaal vetkipponathupola ekipthinaalum vetkippovaay.Why gaddest thou about so much to change thy way? thou also shalt be ashamed of Egypt, as thou wast ashamed of Assyria.
37Nee un kaikalai un thalaiyinmael vaiththukkonndu ivvidaththilirunthu purappattuppovaay; aenenil, un nampikkaikalaik Karththar veraுththirukkiraar; avaikalaal unakkuk kaariyam vaaykkaathu.Yea, thou shalt go forth from him, and thine hands upon thine head: for the LORD hath rejected thy confidences, and thou shalt not prosper in them.