1பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:And it came to pass in the eleventh year, in the third month, in the first day of the month, that the word of the LORD came unto me, saying,
2மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?Son of man, speak unto Pharaoh king of Egypt, and to his multitude; Whom art thou like in thy greatness?
3இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.Behold, the Assyrian was a cedar in Lebanon with fair branches, and with a shadowing shroud, and of an high stature; and his top was among the thick boughs.
4தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டதுThe waters made him great, the deep set him up on high with her rivers running round about his plants, and sent her little rivers unto all the trees of the field.
5ஆகையால் வெளியின் சகல விருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கொப்புகள் நீளமாயின.Therefore his height was exalted above all the trees of the field, and his boughs were multiplied, and his branches became long because of the multitude of waters, when he shot forth.
6அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.All the fowls of heaven made their nests in his boughs, and under his branches did all the beasts of the field bring forth their young, and under his shadow dwelt all great nations.
7அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.Thus was he fair in his greatness, in the length of his branches: for his root was by great waters.
8தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக் கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.The cedars in the garden of God could not hide him: the fir trees were not like his boughs, and the chestnut trees were not like his branches; nor any tree in the garden of God was like unto him in his beauty.
9அதின் கிளைகளின் திரளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின்பேரில் பொறாமைகொண்டன.I have made him fair by the multitude of his branches: so that all the trees of Eden, that were in the garden of God, envied him.
10ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டபடியினாலும், அதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்துபோனபடியினாலும்,Therefore thus saith the Lord GOD; Because thou hast lifted up thyself in height, and he hath shot up his top among the thick boughs, and his heart is lifted up in his height;
11நான் அதை ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன்.I have therefore delivered him into the hand of the mighty one of the heathen; he shall surely deal with him: I have driven him out for his wickedness.
12ஜாதிகளில் வல்லவராகிய அந்நியதேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆள்களினருகே முறிந்தன; பூமியிலுள்ள ஜனங்களெல்லாரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்துபோனார்கள்.And strangers, the terrible of the nations, have cut him off, and have left him: upon the mountains and in all the valleys his branches are fallen, and his boughs are broken by all the rivers of the land; and all the people of the earth are gone down from his shadow, and have left him.
13விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தாபரித்தன; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.Upon his ruin shall all the fowls of the heaven remain, and all the beasts of the field shall be upon his branches:
14தண்ணீரின் ஓரமாய் வளருகிற எந்த விருட்சங்களும் தங்கள் உயரத்தினாலே மேட்டிமைகொள்ளாமலும், தங்கள் கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும் தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கை வைக்காமலும் இருக்கும் பொருட்டு இப்படிச் செய்வேன்; மனுபுத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.To the end that none of all the trees by the waters exalt themselves for their height, neither shoot up their top among the thick boughs, neither their trees stand up in their height, all that drink water: for they are all delivered unto death, to the nether parts of the earth, in the midst of the children of men, with them that go down to the pit.
15கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குற நாளில் புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அதினிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின.Thus saith the Lord GOD; In the day when he went down to the grave I caused a mourning: I covered the deep for him, and I restrained the floods thereof, and the great waters were stayed: and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.
16நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.I made the nations to shake at the sound of his fall, when I cast him down to hell with them that descend into the pit: and all the trees of Eden, the choice and best of Lebanon, all that drink water, shall be comforted in the nether parts of the earth.
17அவனோடேகூட இவர்களும் ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.They also went down into hell with him unto them that be slain with the sword; and they that were his arm, that dwelt under his shadow in the midst of the heathen.
18இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடே நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.To whom art thou thus like in glory and in greatness among the trees of Eden? yet shalt thou be brought down with the trees of Eden unto the nether parts of the earth: thou shalt lie in the midst of the uncircumcised with them that be slain by the sword. This is Pharaoh and all his multitude, saith the Lord GOD.
1Pathinoraam varusham moontam maatham muthalaanthaethiyilae karththarutaiya vaarththai enakku unndaaki, avar:And it came to pass in the eleventh year, in the third month, in the first day of the month, that the word of the LORD came unto me, saying,
2Manupuththiranae, ekipthin raajaavaakiya paarvonodum avanutaiya thiralaana janaththodum nee sollavaenntiyathu ennavental: nee un makaththuvaththilae yaarukku oppaayirukkiraay?Son of man, speak unto Pharaoh king of Egypt, and to his multitude; Whom art thou like in thy greatness?
3Itho, aseeriyan leepanonilae alangaarak koppukalodum, nilalidum thalaikalodum, valarnthongiya kaethuru virutchamaayirunthaan; athin kilaikalin thalaikalukkullae athin nunikkolunthu uyarnthirunthathu.Behold, the Assyrian was a cedar in Lebanon with fair branches, and with a shadowing shroud, and of an high stature; and his top was among the thick boughs.
4Thannnneerkal athaip perithum, aalam athai uyarththiyum aakkina; athin aaraுkal athin atimaraththaich suttilum otina; than neerkkaalkalai veliyin virutchangalukkellaam paayavittathuThe waters made him great, the deep set him up on high with her rivers running round about his plants, and sent her little rivers unto all the trees of the field.
5Aakaiyaal veliyin sakala virutchangalilum athu mikavum uyarnthathu; athu thulirvidukaiyil thiralaana thannnneerinaal athin kilaikal peruki, athin koppukal neelamaayina.Therefore his height was exalted above all the trees of the field, and his boughs were multiplied, and his branches became long because of the multitude of waters, when he shot forth.
6Athin koppukalil aakaayaththin paravaikalellaam koodukattina; athin koppukalingeel veliyin mirukangalellaam kuttikalaippottana; perithaana sakalajaathikalum athin nilalilae kutiyirunthaarkal.All the fowls of heaven made their nests in his boughs, and under his branches did all the beasts of the field bring forth their young, and under his shadow dwelt all great nations.
7Appatiyae athin vaer thiralaana thannnneerkalarukae irunthathinaal athu than selippinaalum than koppukalin neelaththinaalum alangaaramaayirunthathu.Thus was he fair in his greatness, in the length of his branches: for his root was by great waters.
8Thaevanutaiya vanaththilulla kaethurukkal athai maraikkak koodaathirunthathu; thaevathaaru virutchangal athin koppukalukkuch samaanamalla; armon marangal athin kilaikalukku nikaralla; thaevanutaiya vanaththilulla oru virutchamum alangaaraththilae atharku oppalla.The cedars in the garden of God could not hide him: the fir trees were not like his boughs, and the chestnut trees were not like his branches; nor any tree in the garden of God was like unto him in his beauty.
9Athin kilaikalin thiralinaal athai alangariththaen; thaevanutaiya vanamaakiya aethaenin virutchangalellaam athinpaeril poraamaikonndana.I have made him fair by the multitude of his branches: so that all the trees of Eden, that were in the garden of God, envied him.
10Aakaiyaal karththaraakiya aanndavar sollukirathu ennavental: athu than valarththiyilae maettimaiyaaki, koppukalin thalaikalukkullae than nunikkilaiyai ongavittapatiyinaalum, athin iruthayam than maettimaiyinaal uyarnthuponapatiyinaalum,Therefore thus saith the Lord GOD; Because thou hast lifted up thyself in height, and he hath shot up his top among the thick boughs, and his heart is lifted up in his height;
11Naan athai jaathikalil makaa vallamaiyullavan kaiyilae oppukkoduththaen; avan thanakku ishdamaanapati atharkuch seyvaan; athinutaiya akkiramaththinimiththam athaith thallippottaேn.I have therefore delivered him into the hand of the mighty one of the heathen; he shall surely deal with him: I have driven him out for his wickedness.
12Jaathikalil vallavaraakiya anniyathaesaththaar athai vettippottu, vittupponaarkal; athin koppukal malaikalinmaelum sakala pallaththaakkukalilum vilunthana; athin kilaikal thaesaththinutaiya ellaa aalkalinarukae murinthana; poomiyilulla janangalellaarum athin nilalaivittuk kalainthuponaarkal.And strangers, the terrible of the nations, have cut him off, and have left him: upon the mountains and in all the valleys his branches are fallen, and his boughs are broken by all the rivers of the land; and all the people of the earth are gone down from his shadow, and have left him.
13Vilunthukidakkira athinmael aakaayaththup paravaikalellaam thaapariththana; athin kompukalinmael veliyin mirukangalellaam thangina.Upon his ruin shall all the fowls of the heaven remain, and all the beasts of the field shall be upon his branches:
14Thannnneerin oramaay valarukira entha virutchangalum thangal uyaraththinaalae maettimaikollaamalum, thangal koppukalin thalaikkullae thangal nunikkilaiyai ongavidaamalum, thannnneeraik kutikkira entha marangalum thangal uyarththiyinaalae thangalmael nampikkai vaikkaamalum irukkum poruttu ippatich seyvaen; manupuththirarin naduvae avarkal ellaarum kuliyil irangukiravarkalotaekooda maranaththukku oppukkodukkappattu, poomiyin thaalvidangalil ponaarkal.To the end that none of all the trees by the waters exalt themselves for their height, neither shoot up their top among the thick boughs, neither their trees stand up in their height, all that drink water: for they are all delivered unto death, to the nether parts of the earth, in the midst of the children of men, with them that go down to the pit.
15Karththaraakiya aanndavar sollukirathu ennavental: avan paathaalaththil irangura naalil pulampalai varuviththaen; naan avanimiththam aalaththai mootippottu, thiralaana thannnneerkal odaathapatikku athin aaraுkalai ataiththu, athinimiththam leepanonai irulataiyappannnninaen; veliyin virutchangalellaam avanimiththam pattuppoyina.Thus saith the Lord GOD; In the day when he went down to the grave I caused a mourning: I covered the deep for him, and I restrained the floods thereof, and the great waters were stayed: and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.
16Naan avanaik kuliyil irangukiravarkalotaekoodap paathaalaththil irangappannnukaiyil, avan vilukira saththaththinaal jaathikalai athirappannnninaen; appoluthu poomiyin thaalvidangalil aethaenin virutchangalum, leepanonin maenmaiyaana sirantha virutchangalum, thannnneer kutikkum sakala marangalum aaraுthal atainthana.I made the nations to shake at the sound of his fall, when I cast him down to hell with them that descend into the pit: and all the trees of Eden, the choice and best of Lebanon, all that drink water, shall be comforted in the nether parts of the earth.
17Avanotaekooda ivarkalum jaathikalin naduvae avan nilalil kutiyirunthu avanukkup puyapalamaayirunthavarkalum, pattayaththaal vettunndavarkalanntaiyilae paathaalaththil iranginaarkal.They also went down into hell with him unto them that be slain with the sword; and they that were his arm, that dwelt under his shadow in the midst of the heathen.
18Ippatippatta makimaiyilum makaththuvaththilum aethaenin virutchangalil nee etharku oppaanavan? Aethaenin virutchangalotae neeyum poomiyin thaalvidangalil irakkappattu, pattayaththaalae vettunndavarkalotaekooda viruththasethanamillaathavarkalin naduvilae kidappaay; paarvonum avan koottamum ithuvae entu karththaraakiya aanndavar uraikkiraar entu sol entar.To whom art thou thus like in glory and in greatness among the trees of Eden? yet shalt thou be brought down with the trees of Eden unto the nether parts of the earth: thou shalt lie in the midst of the uncircumcised with them that be slain by the sword. This is Pharaoh and all his multitude, saith the Lord GOD.