கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,
எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.
கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய், ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.
நீ அறியாத தேசத்தில் உன் சத்துருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப் பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என் கோபத்திலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார்.
என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
well said, | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
The | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
Lord | אִם | ʾim | eem |
לֹ֥א | lōʾ | loh | |
Verily remnant; thy with | שֵֽׁרִותִ֖ךָ | šēriwtikā | shay-reev-TEE-ha |
well be shall | לְט֑וֹב | lĕṭôb | leh-TOVE |
it | אִם | ʾim | eem |
verily | ל֣וֹא׀ | lôʾ | loh |
entreat to in | הִפְגַּ֣עְתִּֽי | hipgaʿtî | heef-ɡA-tee |
thee time | בְךָ֗ | bĕkā | veh-HA |
the evil | בְּעֵ֥ת | bĕʿēt | beh-ATE |
of and in the time | רָעָ֛ה | rāʿâ | ra-AH |
of affliction. | וּבְעֵ֥ת | ûbĕʿēt | oo-veh-ATE |
cause will I | צָרָ֖ה | ṣārâ | tsa-RA |
enemy the | אֶת | ʾet | et |
הָאֹיֵֽב׃ | hāʾōyēb | ha-oh-YAVE |