1 கொரிந்தியர் 15:42
மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
Tamil Indian Revised Version
மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்;
Tamil Easy Reading Version
மரணமடைந்த மக்கள் எழுப்பப்படும்போதும் இவ்வாறே நிகழும். மரணத்தின் பின் “புதைக்கப்பட்ட” சரீரம் கெட்டு அழியும். ஆனால் எழுப்பப்பட்ட சரீரம் அழிவற்ற வாழ்வைக் கொண்டிருக்கும்.
Thiru Viviliam
இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும். அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்று எழுகிறது.
King James Version (KJV)
So also is the resurrection of the dead. It is sown in corruption; it is raised in incorruption:
American Standard Version (ASV)
So also is the resurrection of the dead. It is sown in corruption; it is raised in incorruption:
Bible in Basic English (BBE)
So is it with the coming back from the dead. It is planted in death; it comes again in life:
Darby English Bible (DBY)
Thus also [is] the resurrection of the dead. It is sown in corruption, it is raised in incorruptibility.
World English Bible (WEB)
So also is the resurrection of the dead. It is sown in corruption; it is raised in incorruption.
Young’s Literal Translation (YLT)
So also `is’ the rising again of the dead: it is sown in corruption, it is raised in incorruption;
1 கொரிந்தியர் 1 Corinthians 15:42
மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
So also is the resurrection of the dead. It is sown in corruption; it is raised in incorruption:
| Οὕτως | houtōs | OO-tose | |
| καὶ | kai | kay | |
| ἡ | hē | ay | |
| ἀνάστασις | anastasis | ah-NA-sta-sees | |
| τῶν | tōn | tone | |
| νεκρῶν | nekrōn | nay-KRONE | |
| σπείρεται | speiretai | SPEE-ray-tay | |
| ἐν | en | ane | |
| φθορᾷ | phthora | fthoh-RA | |
| ἐγείρεται | egeiretai | ay-GEE-ray-tay | |
| ἐν | en | ane | |
| ἀφθαρσίᾳ· | aphtharsia | ah-fthahr-SEE-ah |
Cross Reference
மத்தேயு 13:43
அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.
தானியேல் 12:3
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
ரோமர் 8:21
அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
1 பேதுரு 1:4
அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.
பிலிப்பியர் 3:20
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
1 கொரிந்தியர் 15:50
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
ரோமர் 1:23
அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:34
இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:31
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:27
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
லுூக்கா 20:35
மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
ஏசாயா 38:17
இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
சங்கீதம் 49:14
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
சங்கீதம் 16:10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
யோபு 17:14
அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப்பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
ஆதியாகமம் 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
சங்கீதம் 49:9
அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.
Tags மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும் அழிவுள்ளதாய் விதைக்கப்படும் அழிவில்லாததாய் எழுந்திருக்கும்
1 Corinthians 15:42 in Tamil Concordance 1 Corinthians 15:42 in Tamil Interlinear 1 Corinthians 15:42 in Tamil Image