1ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.There is therefore now no condemnation to them which are in Christ Jesus, who walk not after the flesh, but after the Spirit.
2கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.For the law of the Spirit of life in Christ Jesus hath made me free from the law of sin and death.
3அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.For what the law could not do, in that it was weak through the flesh, God sending his own Son in the likeness of sinful flesh, and for sin, condemned sin in the flesh:
4மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.That the righteousness of the law might be fulfilled in us, who walk not after the flesh, but after the Spirit.
5அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.For they that are after the flesh do mind the things of the flesh; but they that are after the Spirit the things of the Spirit.
6மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.For to be carnally minded is death; but to be spiritually minded is life and peace.
7எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.Because the carnal mind is enmity against God: for it is not subject to the law of God, neither indeed can be.
8மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.So then they that are in the flesh cannot please God.
9தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.But ye are not in the flesh, but in the Spirit, if so be that the Spirit of God dwell in you. Now if any man have not the Spirit of Christ, he is none of his.
10மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.And if Christ be in you, the body is dead because of sin; but the Spirit is life because of righteousness.
11அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you.
12ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.Therefore, brethren, we are debtors, not to the flesh, to live after the flesh.
13மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.For if ye live after the flesh, ye shall die: but if ye through the Spirit do mortify the deeds of the body, ye shall live.
14மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.For as many as are led by the Spirit of God, they are the sons of God.
15அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.For ye have not received the spirit of bondage again to fear; but ye have received the Spirit of adoption, whereby we cry, Abba, Father.
16நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.The Spirit itself beareth witness with our spirit, that we are the children of God:
17நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.And if children, then heirs; heirs of God, and joint-heirs with Christ; if so be that we suffer with him, that we may be also glorified together.
18ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.For I reckon that the sufferings of this present time are not worthy to be compared with the glory which shall be revealed in us.
19மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.For the earnest expectation of the creature waiteth for the manifestation of the sons of God.
20அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,For the creature was made subject to vanity, not willingly, but by reason of him who hath subjected the same in hope,
21அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.Because the creature itself also shall be delivered from the bondage of corruption into the glorious liberty of the children of God.
22ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.For we know that the whole creation groaneth and travaileth in pain together until now.
23அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.And not only they, but ourselves also, which have the firstfruits of the Spirit, even we ourselves groan within ourselves, waiting for the adoption, to wit, the redemption of our body.
24அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?For we are saved by hope: but hope that is seen is not hope: for what a man seeth, why doth he yet hope for?
25நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.But if we hope for that we see not, then do we with patience wait for it.
26அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.Likewise the Spirit also helpeth our infirmities: for we know not what we should pray for as we ought: but the Spirit itself maketh intercession for us with groanings which cannot be uttered.
27ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார்.And he that searcheth the hearts knoweth what is the mind of the Spirit, because he maketh intercession for the saints according to the will of God.
28அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.And we know that all things work together for good to them that love God, to them who are the called according to his purpose.
29தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;For whom he did foreknow, he also did predestinate to be conformed to the image of his Son, that he might be the firstborn among many brethren.
30எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.Moreover whom he did predestinate, them he also called: and whom he called, them he also justified: and whom he justified, them he also glorified.
31இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?What shall we then say to these things? If God be for us, who can be against us?
32தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?He that spared not his own Son, but delivered him up for us all, how shall he not with him also freely give us all things?
33தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.Who shall lay any thing to the charge of God's elect? It is God that justifieth.
34ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.Who is he that condemneth? It is Christ that died, yea rather, that is risen again, who is even at the right hand of God, who also maketh intercession for us.
35உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,Who shall separate us from the love of Christ? shall tribulation, or distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword?
36கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?As it is written, For thy sake we are killed all the day long; we are accounted as sheep for the slaughter.
37இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.Nay, in all these things we are more than conquerors through him that loved us.
38மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,For I am persuaded, that neither death, nor life, nor angels, nor principalities, nor powers, nor things present, nor things to come,
39உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.Nor height, nor depth, nor any other creature, shall be able to separate us from the love of God, which is in Christ Jesus our Lord.
1Aanapatiyaal, Kristhu Yesuvukkutpattavarkalaayirunthu, maamsaththinpati nadavaamal aaviyinpatiyae nadakkiravarkalukku aakkinaiththeerppillai.There is therefore now no condemnation to them which are in Christ Jesus, who walk not after the flesh, but after the Spirit.
2Kristhu Yesuvinaalae jeevanutaiya aaviyin piramaanam ennaip paavam maranam enpavaikalin piramaanaththinintu viduthalaiyaakkitte.For the law of the Spirit of life in Christ Jesus hath made me free from the law of sin and death.
3Atheppatiyenil, maamsaththinaalae palaveenamaayiruntha niyaayappiramaanam seyyakkoodaathathai thaevanae seyyumpatikku, thammutaiya kumaaranaip paavamaamsaththin saayalaakavum, paavaththaip pokkum paliyaakavum anuppi, maamsaththilae paavaththai aakkinaikkullaakath theerththaar.For what the law could not do, in that it was weak through the flesh, God sending his own Son in the likeness of sinful flesh, and for sin, condemned sin in the flesh:
4Maamsaththinpati nadavaamal aaviyinpati nadakkira nammidaththil niyaayappiramaanaththin neethi niraivaeraுmpatikkae appatich seythaar.That the righteousness of the law might be fulfilled in us, who walk not after the flesh, but after the Spirit.
5Antiyum maamsaththinpati nadakkiravarkal maamsaththukkuriyavaikalaich sinthikkiraarkal; aaviyinpati nadakkiravarkal aavikkuriyavaikalaich sinthikkiraarkal.For they that are after the flesh do mind the things of the flesh; but they that are after the Spirit the things of the Spirit.
6Maamsasinthai maranam; aaviyin sinthaiyo jeevanum samaathaanamumaam.For to be carnally minded is death; but to be spiritually minded is life and peace.
7Eppatiyental, maamsasinthai thaevanukku virothamaana pakai; athu thaevanutaiya niyaayappiramaanaththukkuk geelppatiyaamalum, geelppatiyakkoodaamalum irukkirathu.Because the carnal mind is enmity against God: for it is not subject to the law of God, neither indeed can be.
8Maamsaththukkutpattavarkal thaevanukkup piriyamaayirukkamaattarkal.So then they that are in the flesh cannot please God.
9Thaevanutaiya aavi ungalil vaasamaayirunthaal, neengal maamsaththukkutpattavarkalaayiraamal aavikkutpattavarkalaayiruppeerkal. Kristhuvin aaviyillaathavan avarutaiyavanalla.But ye are not in the flesh, but in the Spirit, if so be that the Spirit of God dwell in you. Now if any man have not the Spirit of Christ, he is none of his.
10Maelum Kristhu ungalilirunthaal, sareeramaanathu paavaththinimiththam mariththathaayum, aaviyaanathu neethiyinimiththam jeevanullathaayum irukkum.And if Christ be in you, the body is dead because of sin; but the Spirit is life because of righteousness.
11Antiyum Yesuvai mariththorilirunthu eluppinavarutaiya aavi ungalil vaasamaayirunthaal, Kristhuvai mariththorilirunthu eluppinavar ungalil vaasamaayirukkira thammutaiya aaviyinaalae saavukkaethuvaana ungal sareerangalaiyum uyirppippaar.But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you.
12Aakaiyaal sakothararae, maamsaththinpati pilaippatharku naam maamsaththukkuk kadanaalikalalla.Therefore, brethren, we are debtors, not to the flesh, to live after the flesh.
13Maamsaththinpati pilaiththaal saaveerkal; aaviyinaalae sareeraththin seykaikalai aliththaal pilaippeerkal.For if ye live after the flesh, ye shall die: but if ye through the Spirit do mortify the deeds of the body, ye shall live.
14Maelum evarkal thaevanutaiya aaviyinaalae nadaththappadukiraarkalo, avarkal thaevanutaiya puththiraraayirukkiraarkal.For as many as are led by the Spirit of God, they are the sons of God.
15Anthappati, thirumpavum payappadukiratharku neengal atimaiththanaththin aaviyaip peraamal, appaa pithaavae, entu kooppidappannnukira puththira suvikaaraththin aaviyaip pettaீrkal.For ye have not received the spirit of bondage again to fear; but ye have received the Spirit of adoption, whereby we cry, Abba, Father.
16Naam thaevanutaiya pillaikalaayirukkiromentu Aaviyaanavarthaamae nammutaiya aaviyudanaekoodach saatchikodukkiraar.The Spirit itself beareth witness with our spirit, that we are the children of God:
17Naam pillaikalaanaal suthanthararumaamae; thaevanutaiya suthanthararum, Kristhuvukku udan suthanthararumaamae; Kristhuvudanaekooda naam makimaippadumpatikku avarudanaekoodap paadupattal appatiyaakum.And if children, then heirs; heirs of God, and joint-heirs with Christ; if so be that we suffer with him, that we may be also glorified together.
18Aathalaal ikkaalaththup paadukal ini nammidaththil velippadum makimaikku oppidaththakkavaikal allaventu ennnukiraேn.For I reckon that the sufferings of this present time are not worthy to be compared with the glory which shall be revealed in us.
19Maelum thaevanutaiya puththirar velippaduvatharkuch sirushtiyaanathu mikuntha aavalotae kaaththukkonntirukkirathu.For the earnest expectation of the creature waiteth for the manifestation of the sons of God.
20Athaenental sirushtiyaanathu alivukkuriya atimaiththanaththinintu viduthalaiyaakkappattu, thaevanutaiya pillaikalukkuriya makimaiyaana suyaatheenaththaip pettaுkkollum enkira nampikkaiyotae,For the creature was made subject to vanity, not willingly, but by reason of him who hath subjected the same in hope,
21Anthach sirushtiyaanathu suya ishdaththinaalae alla, geelppaduththinavaraalaeyae maayaikkuk geelppattirukkirathu.Because the creature itself also shall be delivered from the bondage of corruption into the glorious liberty of the children of God.
22Aakaiyaal namakkuth therinthirukkirapati, ithuvaraikkum sarva sirushtiyum aekamaayth thaviththup pirasavavaethanaippadukirathu.For we know that the whole creation groaneth and travaileth in pain together until now.
23Athuvumallaamal, aaviyin mutharpalankalaip petta naamungaூda nammutaiya sareerameetpaakiya puththirasuvikaaram varukiratharkuk kaaththirunthu, namakkullae thavikkirom.And not only they, but ourselves also, which have the firstfruits of the Spirit, even we ourselves groan within ourselves, waiting for the adoption, to wit, the redemption of our body.
24Antha nampikkaiyinaalae naam iratchikkappattirukkirom. Kaanappadukirathai nampukirathu nampikkaiyalla; oruvan thaan kaannkirathai nampavaennduvathenna?For we are saved by hope: but hope that is seen is not hope: for what a man seeth, why doth he yet hope for?
25Naam kaannaathathai nampinomaakil, athu varukiratharkup poraுmaiyotae kaaththiruppom.But if we hope for that we see not, then do we with patience wait for it.
26Anthappatiyae aaviyaanavarum namathu palaveenangalil namakku uthaviseykiraar. Naam aettapati vaenntikkollavaenntiyathinnathentu ariyaamalirukkirapatiyaal, Aaviyaanavarthaamae vaakkukkadangaatha perumoochchukalodu namakkaaka vaennduthalseykiraar.Likewise the Spirit also helpeth our infirmities: for we know not what we should pray for as we ought: but the Spirit itself maketh intercession for us with groanings which cannot be uttered.
27Aaviyaanavar thaevanutaiya siththaththinpatiyae Parisuththavaankalukkaaka vaennduthal seykirapatiyaal, iruthayangalai aaraaynthupaarkkiravar aaviyin sinthanai innathentu arivaar.And he that searcheth the hearts knoweth what is the mind of the Spirit, because he maketh intercession for the saints according to the will of God.
28Antiyum, avarutaiya theermaanaththinpati alaikkappattavarkalaay thaevanidaththil anpukoorukiravarkalukkuch sakalamum nanmaikku aethuvaaka nadakkirathentu arinthirukkirom.And we know that all things work together for good to them that love God, to them who are the called according to his purpose.
29Thammutaiya kumaaran anaeka sakothararukkullae mutharpaeraanavaraayirukkumporuttu, Dhevan evarkalai munnarinthaaro avarkalaith thamathu kumaaranutaiya saayalukku oppaayiruppatharku munkuriththirukkiraar;For whom he did foreknow, he also did predestinate to be conformed to the image of his Son, that he might be the firstborn among many brethren.
30Evarkalai munkuriththaaro avarkalai alaiththumirukkiraar; evarkalai alaiththaaro avarkalai neethimaankalaakkiyumirukkiraar; evarkalai neethimaankalaakkinaaro avarkalai makimaippaduththiyumirukkiraar.Moreover whom he did predestinate, them he also called: and whom he called, them he also justified: and whom he justified, them he also glorified.
31Ivaikalaikkuriththu naam ennasolluvom? Dhevan nammutaiya patchaththilirunthaal namakku virothamaayiruppavan yaar?What shall we then say to these things? If God be for us, who can be against us?
32Thammutaiya sonthakkumaaranentum paaraamal nammellaarukkaakavum avarai oppukkoduththavar, avarokooda matta ellaavattaைyum namakku arulaathiruppatheppati?He that spared not his own Son, but delivered him up for us all, how shall he not with him also freely give us all things?
33Dhevan therinthukonndavarkalmael kuttanjaattukiravan yaar? Thaevanae avarkalai neethimaankalaakkukiravar.Who shall lay any thing to the charge of God's elect? It is God that justifieth.
34Aakkinaikkullaakath theerkkiravan yaar? Kristhuvae mariththavar; avarae elunthumirukkiravar; avarae thaevanutaiya valathupaarisaththilum irukkiravar, namakkaaka vaennduthal seykiravarum avarae.Who is he that condemneth? It is Christ that died, yea rather, that is risen again, who is even at the right hand of God, who also maketh intercession for us.
35Umathunimiththam ennaeramum kollappadukirom, atikkappadum aadukalaippola ennnappadukirom entu eluthiyirukkirapati naerittalum,Who shall separate us from the love of Christ? shall tribulation, or distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword?
36Kristhuvin anpaivittu nammaip pirippavan yaar? Upaththiravamo, viyaakulamo, thunpamo, pasiyo, nirvaanamo, naasamosamo, pattayamo?As it is written, For thy sake we are killed all the day long; we are accounted as sheep for the slaughter.
37Ivaiyellaavattilaeyum naam nammil anpukoorukiravaraalae muttaுm jeyangaொllukiravarkalaayirukkiromae.Nay, in all these things we are more than conquerors through him that loved us.
38Maranamaanaalum, jeevanaanaalum, thaevathootharkalaanaalum, athikaarangalaanaalum, vallamaikalaanaalum, nikalkaariyangalaanaalum, varungaariyangalaanaalum,For I am persuaded, that neither death, nor life, nor angels, nor principalities, nor powers, nor things present, nor things to come,
39Uyarvaanaalum, thaalvaanaalum, vaeraெnthach sirushtiyaanaalum nammutaiya karththaraakiya Kristhu Yesuvilulla thaevanutaiya anpaivittu nammaip pirikkamaattathentu nichchayiththirukkiraேn.Nor height, nor depth, nor any other creature, shall be able to separate us from the love of God, which is in Christ Jesus our Lord.