உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் ஜோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை.
நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்ததும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க்கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய்.
நீ திருப்தியடையாததினால் அசீரிய புத்திரரோடும் வேசித்தனம்பண்ணினாய்; அவர்களோடே வேசித்தனம்பண்ணியும் நீ திருப்தியடையவில்லை.
நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.
இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னை பின் செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை.
நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்..
இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன்பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளிலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய்.
as for thee; And thy | וּמוֹלְדוֹתַ֗יִךְ | ûmôlĕdôtayik | oo-moh-leh-doh-TA-yeek |
nativity, day the | בְּי֨וֹם | bĕyôm | beh-YOME |
in born wast | הוּלֶּ֤דֶת | hûlledet | hoo-LEH-det |
thou was | אֹתָךְ֙ | ʾōtok | oh-toke |
not cut, | לֹֽא | lōʾ | loh |
navel | כָרַּ֣ת | korrat | hoh-RAHT |
thy | שָׁרֵּ֔ךְ | šorrēk | shoh-RAKE |
water in neither | וּבְמַ֥יִם | ûbĕmayim | oo-veh-MA-yeem |
washed thou | לֹֽא | lōʾ | loh |
wast to | רֻחַ֖צְתְּ | ruḥaṣĕt | roo-HA-tset |
supple salted not wast | לְמִשְׁעִ֑י | lĕmišʿî | leh-meesh-EE |
thou | וְהָמְלֵ֙חַ֙ | wĕhomlēḥa | veh-home-LAY-HA |
at all, | לֹ֣א | lōʾ | loh |
swaddled | הֻמְלַ֔חַתְּ | humlaḥat | hoom-LA-haht |
nor | וְהָחְתֵּ֖ל | wĕhoḥtēl | veh-hoke-TALE |
at all. | לֹ֥א | lōʾ | loh |
חֻתָּֽלְתְּ׃ | ḥuttālĕt | hoo-TA-let |