1பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.And there was given me a reed like unto a rod: and the angel stood, saying, Rise, and measure the temple of God, and the altar, and them that worship therein.
2ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.But the court which is without the temple leave out, and measure it not; for it is given unto the Gentiles: and the holy city shall they tread under foot forty and two months.
3என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.And I will give power unto my two witnesses, and they shall prophesy a thousand two hundred and threescore days, clothed in sackcloth.
4பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.These are the two olive trees, and the two candlesticks standing before the God of the earth.
5ஒருவன் அவர்களைச் சேதப்படுத்தமனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.And if any man will hurt them, fire proceedeth out of their mouth, and devoureth their enemies: and if any man will hurt them, he must in this manner be killed.
6அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.These have power to shut heaven, that it rain not in the days of their prophecy: and have power over waters to turn them to blood, and to smite the earth with all plagues, as often as they will.
7அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.And when they shall have finished their testimony, the beast that ascendeth out of the bottomless pit shall make war against them, and shall overcome them, and kill them.
8அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.And their dead bodies shall lie in the street of the great city, which spiritually is called Sodom and Egypt, where also our Lord was crucified.
9ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.And they of the people and kindreds and tongues and nations shall see their dead bodies three days and an half, and shall not suffer their dead bodies to be put in graves.
10அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.And they that dwell upon the earth shall rejoice over them, and make merry, and shall send gifts one to another; because these two prophets tormented them that dwelt on the earth.
11மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.And after three days and an half the spirit of life from God entered into them, and they stood upon their feet; and great fear fell upon them which saw them.
12இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.And they heard a great voice from heaven saying unto them, Come up hither. And they ascended up to heaven in a cloud; and their enemies beheld them.
13அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.And the same hour was there a great earthquake, and the tenth part of the city fell, and in the earthquake were slain of men seven thousand: and the remnant were affrighted, and gave glory to the God of heaven.
14இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.The second woe is past; and, behold, the third woe cometh quickly.
15ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.And the seventh angel sounded; and there were great voices in heaven, saying, The kingdoms of this world are become the kingdoms of our Lord, and of his Christ; and he shall reign for ever and ever.
16அப்பொழுது அவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:And the four and twenty elders, which sat before God on their seats, fell upon their faces, and worshipped God,
17இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.Saying, We give thee thanks, O LORD God Almighty, which art, and wast, and art to come; because thou hast taken to thee thy great power, and hast reigned.
18ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.And the nations were angry, and thy wrath is come, and the time of the dead, that they should be judged, and that thou shouldest give reward unto thy servants the prophets, and to the saints, and them that fear thy name, small and great; and shouldest destroy them which destroy the earth.
19அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.And the temple of God was opened in heaven, and there was seen in his temple the ark of his testament: and there were lightnings, and voices, and thunderings, and an earthquake, and great hail.
1Pinpu kaikkolukku oppaana orualavukol ennidaththil kodukkappattathu. Appoluthu thaevathoothan nintu, ennai Nnokki: nee elunthu, thaevanutaiya aalayaththaiyum, palipeedaththaiyum athil tholuthukollukiravarkalaiyum alanthupaar.And there was given me a reed like unto a rod: and the angel stood, saying, Rise, and measure the temple of God, and the altar, and them that worship therein.
2Aalayaththirkup purampae irukkirapiraakaaram purajaathiyaarukkuk kodukkappattapatiyaal athai alavaamal purampaakkippodu; Parisuththa nakaraththai avarkal naarpaththiranndu maathamalavum mithippaarkal.But the court which is without the temple leave out, and measure it not; for it is given unto the Gentiles: and the holy city shall they tread under foot forty and two months.
3Ennutaiya iranndu saatchikalum irattu vasthiramuduththikkonntirukkiravarkalaay, aayiraththirunoottaraுpathu naalalavum theerkkatharisananjaொllumpati avarkalukku athikaaram koduppaen.And I will give power unto my two witnesses, and they shall prophesy a thousand two hundred and threescore days, clothed in sackcloth.
4Poolokaththin aanndavarukku munpaaka nirkira iranndu olivamarangalum iranndu vilakkuththanndukalum ivarkalae.These are the two olive trees, and the two candlesticks standing before the God of the earth.
5Oruvan avarkalaich sethappaduththamanathaayirunthaal, avarkalutaiya vaayilirunthu akkini purappattu, avarkalutaiya saththurukkalaip patchikkum; avarkalaich sethappaduththa manathaayirukkiravan evano avan appatiyae kollappadavaenndum.And if any man will hurt them, fire proceedeth out of their mouth, and devoureth their enemies: and if any man will hurt them, he must in this manner be killed.
6Avarkal theerkkatharisananj sollivarukira naatkalilae malaipeyyaathapatikku vaanaththai ataikka avarkalukku athikaaramunndu; avarkal thannnneerkalai iraththamaaka maattavum, thangalukku vaenndumpothellaam poomiyaichchakalavitha vaathaikalaalum vaathikkavum avarkalukku athikaaramunndu.These have power to shut heaven, that it rain not in the days of their prophecy: and have power over waters to turn them to blood, and to smite the earth with all plagues, as often as they will.
7Avarkal thangal saatchiyaichchaொlli mutiththirukkumpothu, paathaalaththilirunthaeraுkira mirukam avarkalotae yuththampannnni, avarkalai jeyiththu, avarkalaik kontupodum.And when they shall have finished their testimony, the beast that ascendeth out of the bottomless pit shall make war against them, and shall overcome them, and kill them.
8Avarkalutaiya udalkal makaanakaraththin visaalamaana veethiyilae kidakkum. Antha nakaram sothom entum ekipthu entum njaanaarththamaaych sollappadum; athilae nammutaiya karththarum siluvaiyilae araiyappattar.And their dead bodies shall lie in the street of the great city, which spiritually is called Sodom and Egypt, where also our Lord was crucified.
9Janangalilum, koththirangalilum, paashaikkaararilum, jaathikalilumullavarkal avarkalutaiya udalkalai moontarai naal varaikkum paarppaarkal, avarkalutaiya udalkalaik kallaraikalil vaikkavottarkal.And they of the people and kindreds and tongues and nations shall see their dead bodies three days and an half, and shall not suffer their dead bodies to be put in graves.
10Avviranndu theerkkatharisikalum poomiyin kutikalai vaethanaippaduththinapatiyaal avarkal nimiththam poomiyil kutiyirukkiravarkal santhoshappattuk kalikoornthu, oruvarukkoruvar vekumathikalai anuppuvaarkal.And they that dwell upon the earth shall rejoice over them, and make merry, and shall send gifts one to another; because these two prophets tormented them that dwelt on the earth.
11Moontarai naalaikkuppinpu thaevanidaththilirunthu jeevaaavi avarkalukkul piravaesiththathu, appoluthu avarkal kaaloonti nintarkal; avarkalaip paarththavarkalukku mikuntha payamunndaayittaு.And after three days and an half the spirit of life from God entered into them, and they stood upon their feet; and great fear fell upon them which saw them.
12Ingae aerivaarungal entu vaanaththilirunthu thangalukku unndaana periya saththaththai avarkal kaettu, maekaththil aeri vaanaththirkup ponaarkal, avarkalutaiya saththurukkal avarkalaip paarththaarkal.And they heard a great voice from heaven saying unto them, Come up hither. And they ascended up to heaven in a cloud; and their enemies beheld them.
13Annaeraththilae poomi mikavum athirnthathu, udanae antha nakaraththil paththilorupangu itinthu vilunthathu; manusharil aelaayirampaer poomiyathirchchiyinaal alinthaarkal; meethiyaanavarkal payamatainthu paralokaththin thaevanai makimaippaduththinaarkal.And the same hour was there a great earthquake, and the tenth part of the city fell, and in the earthquake were slain of men seven thousand: and the remnant were affrighted, and gave glory to the God of heaven.
14Iranndaam aapaththu kadanthupoyittaு; itho, moontam aapaththu seekkiramaay varukirathu.The second woe is past; and, behold, the third woe cometh quickly.
15Aelaam thoothan ekkaalam oothinaan; appoluthu ulakaththin raajyangal nammutaiya karththarukkum, avarutaiya Kristhuvukkumuriya raajyangalaayina; avar sathaakaalangalilum raajyapaaram pannnuvaar ennum kempeera saththangal vaanaththil unndaayina.And the seventh angel sounded; and there were great voices in heaven, saying, The kingdoms of this world are become the kingdoms of our Lord, and of his Christ; and he shall reign for ever and ever.
16Appoluthu avanukku munpaakath thangal singaasanangalmael utkaarnthiruntha irupaththunaanku moopparkalum mukanguppura vilunthu:And the four and twenty elders, which sat before God on their seats, fell upon their faces, and worshipped God,
17Irukkiravarum irunthavarum varukiravarumaakiya sarvavallamaiyulla karththaraakiya thaevanae, ummai sthoththirikkirom, thaevareer umathu makaa vallamaiyaikkonndu raajyapaarampannnukireer.Saying, We give thee thanks, O LORD God Almighty, which art, and wast, and art to come; because thou hast taken to thee thy great power, and hast reigned.
18Jaathikal kopiththaarkal, appoluthu ummutaiya kopam moonndathu; mariththor niyaayaththeerppataikiratharkum, theerkkatharisikalaakiya ummutaiya ooliyakkaararukkum Parisuththavaankalukkum umathu naamaththinmael payapakthiyaayiruntha siriyor periyorukkum palanalikkiratharkum, poomiyaik keduththavarkalaik kedukkiratharkum, kaalamvanthathu entu solli, thaevanaith tholuthukonndaarkal.And the nations were angry, and thy wrath is come, and the time of the dead, that they should be judged, and that thou shouldest give reward unto thy servants the prophets, and to the saints, and them that fear thy name, small and great; and shouldest destroy them which destroy the earth.
19Appoluthu paralokaththil thaevanutaiya aalayam thirakkappattathu, avarutaiya aalayaththilae avarutaiya udanpatikkaiyin petti kaanappattathu; appoluthu minnalkalum, saththangalum, itimulakkangalum, poomiyathirchchiyum, perungalmalaiyum unndaayina.And the temple of God was opened in heaven, and there was seen in his temple the ark of his testament: and there were lightnings, and voices, and thunderings, and an earthquake, and great hail.