1கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.Sanctify unto me all the firstborn, whatsoever openeth the womb among the children of Israel, both of man and of beast: it is mine.
3அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப் பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.And Moses said unto the people, Remember this day, in which ye came out from Egypt, out of the house of bondage; for by strength of hand the LORD brought you out from this place: there shall no leavened bread be eaten.
4ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.This day came ye out in the month Abib.
5ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக.And it shall be when the LORD shall bring thee into the land of the Canaanites, and the Hittites, and the Amorites, and the Hivites, and the Jebusites, which he sware unto thy fathers to give thee, a land flowing with milk and honey, that thou shalt keep this service in this month.
6புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக.Seven days thou shalt eat unleavened bread, and in the seventh day shall be a feast to the LORD.
7அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.Unleavened bread shall be eaten seven days; and there shall no leavened bread be seen with thee, neither shall there be leaven seen with thee in all thy quarters.
8அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.And thou shalt show thy son in that day, saying, This is done because of that which the LORD did unto me when I came forth out of Egypt.
9கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்;And it shall be for a sign unto thee upon thine hand, and for a memorial between thine eyes, that the LORD's law may be in thy mouth: for with a strong hand hath the LORD brought thee out of Egypt.
10ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக.Thou shalt therefore keep this ordinance in his season from year to year.
11மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,And it shall be when the LORD shall bring thee into the land of the Canaanites, as he sware unto thee and to thy fathers, and shall give it thee,
12கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.That thou shalt set apart unto the LORD all that openeth the matrix, and every firstling that cometh of a beast which thou hast; the males shall be the LORD's.
13கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக் கொள்வாயாக.And every firstling of an ass thou shalt redeem with a lamb; and if thou wilt not redeem it, then thou shalt break his neck: and all the firstborn of man among thy children shalt thou redeem.
14பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.And it shall be when thy son asketh thee in time to come, saying, What is this? that thou shalt say unto him, By strength of hand the LORD brought us out from Egypt, from the house of bondage:
15எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள் முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.And it came to pass, when Pharaoh would hardly let us go, that the LORD slew all the firstborn in the land of Egypt, both the firstborn of man, and the firstborn of beast: therefore I sacrifice to the LORD all that openeth the matrix, being males; but all the firstborn of my children I redeem.
16கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.And it shall be for a token upon thine hand, and for frontlets between thine eyes: for by strength of hand the LORD brought us forth out of Egypt.
17பார்வோன் ஜனங்களைப் போக விட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,And it came to pass, when Pharaoh had let the people go, that God led them not through the way of the land of the Philistines, although that was near; for God said, Lest peradventure the people repent when they see war, and they return to Egypt:
18சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப் பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.But God led the people about, through the way of the wilderness of the Red sea: and the children of Israel went up harnessed out of the land of Egypt.
19மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.And Moses took the bones of Joseph with him: for he had straitly sworn the children of Israel, saying, God will surely visit you; and ye shall carry up my bones away hence with you.
20அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.And they took their journey from Succoth, and encamped in Etham, in the edge of the wilderness.
21அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.And the LORD went before them by day in a pillar of a cloud, to lead them the way; and by night in a pillar of fire, to give them light; to go by day and night:
22பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.He took not away the pillar of the cloud by day, nor the pillar of fire by night, from before the people.
1Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Israel puththirarukkul manitharilum mirukajeevankalilum karppanthiranthu pirakkira mutharpaeranaiththaiyum enakkup Parisuththappaduththu; athu ennutaiyathu entar.Sanctify unto me all the firstborn, whatsoever openeth the womb among the children of Israel, both of man and of beast: it is mine.
3Appoluthu Moses janangalai Nnokki: neengal atimaiththana veedaakiya ekipthilirunthu purappatta intha naalai ninaiyungal; Karththar palaththa kaiyinaal ungalai avvidaththilirunthu purappadap pannnninaar; aakaiyaal, neengal puliththa appam pusikkavaenndaam.And Moses said unto the people, Remember this day, in which ye came out from Egypt, out of the house of bondage; for by strength of hand the LORD brought you out from this place: there shall no leavened bread be eaten.
4Aapip maathaththin intha naalilae neengal purappattirkal.This day came ye out in the month Abib.
5Aakaiyaal, Karththar unakkuk koduppaen entu un pithaakkalukku aannaiyittathum, paalum thaenum odukirathumaana thaesamaakiya kaanaaniyar, aeththiyar, emoriyar, aeviyar, epoosiyar enpavarkalutaiya thaesaththukku unnai varappannnum kaalaththil, nee intha maathaththilae intha aaraathanaiyaich seyvaayaaka.And it shall be when the LORD shall bring thee into the land of the Canaanites, and the Hittites, and the Amorites, and the Hivites, and the Jebusites, which he sware unto thy fathers to give thee, a land flowing with milk and honey, that thou shalt keep this service in this month.
6Pulippillaa appaththai aelunaalalavum pusikkakkadavaay; aelaamnaalilae karththarukkup panntikai aasarikkappaduvathaaka.Seven days thou shalt eat unleavened bread, and in the seventh day shall be a feast to the LORD.
7Antha aelunaalum pulippillaa appam pusikkavaenndum; pulippulla appam unnidaththilae kaanappadavaenndaam; un ellaikkul engum puliththamaavum unnidaththil kaanappadavaenndaam.Unleavened bread shall be eaten seven days; and there shall no leavened bread be seen with thee, neither shall there be leaven seen with thee in all thy quarters.
8Annaalil nee un puththiranai Nnokki: naan ekipthilirunthu purappadukaiyil, Karththar enakkuch seythatharkaaka ippati nadappikkappadukirathu entu sol.And thou shalt show thy son in that day, saying, This is done because of that which the LORD did unto me when I came forth out of Egypt.
9Karththarin niyaayappiramaanam unvaayilirukkumpatikku, ithu un kaiyilae oru ataiyaalamaakavum un kannkalin naduvae ninaippoottuthalaakavum irukkakkadavathu; palaththa kaiyinaal Karththar unnai ekipthilirunthu purappadap pannnninaar;And it shall be for a sign unto thee upon thine hand, and for a memorial between thine eyes, that the LORD's law may be in thy mouth: for with a strong hand hath the LORD brought thee out of Egypt.
10Aakaiyaal, nee varushanthoraுm kuriththa kaalaththil intha niyamaththai aasariththu varuvaayaaka.Thou shalt therefore keep this ordinance in his season from year to year.
11Maelum, Karththar unakkum un pithaakkalukkum aannaiyittapatiyae, unnaik kaanaaniyarin thaesaththilae varappannnni, athai unakkuk kodukkumpothu,And it shall be when the LORD shall bring thee into the land of the Canaanites, as he sware unto thee and to thy fathers, and shall give it thee,
12Karppanthiranthu pirakkum anaiththaiyum, unakku irukkum mirukajeevankalin thalaiyeettanaiththaiyum, karththarukku oppukkoduppaayaaka; avaikalilulla aannkal karththarutaiyavaikal.That thou shalt set apart unto the LORD all that openeth the matrix, and every firstling that cometh of a beast which thou hast; the males shall be the LORD's.
13Kaluthaiyin thalaiyeettaைyellaam oru aattukkuttiyaal meettukkolvaayaaka; meetkaavittal, athin kaluththai muriththuppodu. Un pillaikalil mutharpaeraana sakala narajeevanaiyum meettuk kolvaayaaka.And every firstling of an ass thou shalt redeem with a lamb; and if thou wilt not redeem it, then thou shalt break his neck: and all the firstborn of man among thy children shalt thou redeem.
14Pirkaalaththil un kumaaran: ithu enna entu unnaik kaettal; nee avanai Nnokki: Karththar engalaip palaththa kaiyinaal atimaiththana veedaakiya ekipthilirunthu purappadappannnninaar.And it shall be when thy son asketh thee in time to come, saying, What is this? that thou shalt say unto him, By strength of hand the LORD brought us out from Egypt, from the house of bondage:
15Engalai vidaathapatikku, paarvon katinappattirukkumpothu, Karththar ekipthu thaesaththil manitharin thalaippillaikal muthal mirukajeevankalin thalaiyeettaுkal varaikkum unndaayiruntha mutharpaeraுkal yaavaiyum kontu pottar; aakaiyaal, karppanthiranthu pirakkum aannaiyellaam naan karththarukkup paliyittu en pillaikalil mutharpaeranaiththaiyum meettukkollukiraேn.And it came to pass, when Pharaoh would hardly let us go, that the LORD slew all the firstborn in the land of Egypt, both the firstborn of man, and the firstborn of beast: therefore I sacrifice to the LORD all that openeth the matrix, being males; but all the firstborn of my children I redeem.
16Karththar engalaip palaththa kaiyinaal ekipthilirunthu purappadappannnninatharku, ithu un kaiyil ataiyaalamaakavum, un kannkalin naduvae njaapakakkuriyaakavum irukkakkadavathu entu solvaayaaka entan.And it shall be for a token upon thine hand, and for frontlets between thine eyes: for by strength of hand the LORD brought us forth out of Egypt.
17Paarvon janangalaip poka vittapin: janangal yuththaththaik kanndaal manamatinthu, ekipthukkuth thirumpuvaarkal entu solli; pelistharin thaesavaliyaayp povathu sameepamaanaalum, Dhevan avarkalai antha valiyaay nadaththaamal,And it came to pass, when Pharaoh had let the people go, that God led them not through the way of the land of the Philistines, although that was near; for God said, Lest peradventure the people repent when they see war, and they return to Egypt:
18Sivantha samuththiraththin vanaanthara valiyaay janangalaich suttip pokap pannnninaar. Israel puththirar ekipthu thaesaththilirunthu anniyanniyaayp purappattupponaarkal.But God led the people about, through the way of the wilderness of the Red sea: and the children of Israel went up harnessed out of the land of Egypt.
19Moses thannotaekooda yoseppin elumpukalai eduththukkonndu ponaan. Dhevan nichchayamaay ungalaich santhippaar; appoluthu ungalotaekooda en elumpukalai ivvidaththilirunthu konndupongal entu yoseppu solli, Israel puththirarai uraுthiyaay aannaiyidumpati seythirunthaan.And Moses took the bones of Joseph with him: for he had straitly sworn the children of Israel, saying, God will surely visit you; and ye shall carry up my bones away hence with you.
20Avarkal sukkoththilirunthu pirayaanappattu, vanaantharaththin oramaay aeththaamilae paalayamiranginaarkal.And they took their journey from Succoth, and encamped in Etham, in the edge of the wilderness.
21Avarkal iravum pakalum valinadakkakkoodumpatikku, Karththar pakalil avarkalai valinadaththa maekasthampaththilum, iravil avarkalukku velichchangaatta akkinisthampaththilum avarkalukku mun sentar.And the LORD went before them by day in a pillar of a cloud, to lead them the way; and by night in a pillar of fire, to give them light; to go by day and night:
22Pakalilae maekasthampamum, iravilae akkinisthampamum janangalidaththilirunthu vilakippokavillai.He took not away the pillar of the cloud by day, nor the pillar of fire by night, from before the people.