1இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:Jude, the servant of Jesus Christ, and brother of James, to them that are sanctified by God the Father, and preserved in Jesus Christ, and called:
2உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.Mercy unto you, and peace, and love, be multiplied.
3பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.Beloved, when I gave all diligence to write unto you of the common salvation, it was needful for me to write unto you, and exhort you that ye should earnestly contend for the faith which was once delivered unto the saints.
4ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்ற சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.For there are certain men crept in unawares, who were before of old ordained to this condemnation, ungodly men, turning the grace of our God into lasciviousness, and denying the only Lord God, and our Lord Jesus Christ.
5நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.I will therefore put you in remembrance, though ye once knew this, how that the Lord, having saved the people out of the land of Egypt, afterward destroyed them that believed not.
6தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.And the angels which kept not their first estate, but left their own habitation, he hath reserved in everlasting chains under darkness unto the judgment of the great day.
7அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.Even as Sodom and Gomorrha, and the cities about them in like manner, giving themselves over to fornication, and going after strange flesh, are set forth for an example, suffering the vengeance of eternal fire.
8அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.Likewise also these filthy dreamers defile the flesh, despise dominion, and speak evil of dignities.
9பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்.Yet Michael the archangel, when contending with the devil he disputed about the body of Moses, durst not bring against him a railing accusation, but said, The Lord rebuke thee.
10இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.But these speak evil of those things which they know not: but what they know naturally, as brute beasts, in those things they corrupt themselves.
11இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.Woe unto them! for they have gone in the way of Cain, and ran greedily after the error of Balaam for reward, and perished in the gainsaying of Core.
12இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும்,These are spots in your feasts of charity, when they feast with you, feeding themselves without fear: clouds they are without water, carried about of winds; trees whose fruit withereth, without fruit, twice dead, plucked up by the roots;
13தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.Raging waves of the sea, foaming out their own shame; wandering stars, to whom is reserved the blackness of darkness for ever.
14ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,And Enoch also, the seventh from Adam, prophesied of these, saying, Behold, the Lord cometh with ten thousands of his saints,
15தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.To execute judgment upon all, and to convince all that are ungodly among them of all their ungodly deeds which they have ungodly committed, and of all their hard speeches which ungodly sinners have spoken against him.
16இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.These are murmurers, complainers, walking after their own lusts; and their mouth speaketh great swelling words, having men's persons in admiration because of advantage.
17நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூறுங்கள்.But, beloved, remember ye the words which were spoken before of the apostles of our Lord Jesus Christ;
18கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.How that they told you there should be mockers in the last time, who should walk after their own ungodly lusts.
19இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.These be they who separate themselves, sensual, having not the Spirit.
20நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,But ye, beloved, building up yourselves on your most holy faith, praying in the Holy Ghost,
21தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.Keep yourselves in the love of God, looking for the mercy of our Lord Jesus Christ unto eternal life.
22அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,And of some have compassion, making a difference:
23மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.And others save with fear, pulling them out of the fire; hating even the garment spotted by the flesh.
24வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,Now unto him that is able to keep you from falling, and to present you faultless before the presence of his glory with exceeding joy,
25தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.To the only wise God our Saviour, be glory and majesty, dominion and power, both now and ever. Amen.
1YesuKristhuvinutaiya ooliyakkaaranum, yaakkopinutaiya sakotharanumaayirukkira yoothaa, pithaavaakiya thaevanaalae Parisuththamaakkappattavarkalum, YesuKristhuvinaalae kaakkappattavarkalumaakiya alaikkappattavarkalukku eluthukirathaavathu:Jude, the servant of Jesus Christ, and brother of James, to them that are sanctified by God the Father, and preserved in Jesus Christ, and called:
2Ungalukku irakkamum samaathaanamum anpum perukakkadavathu.Mercy unto you, and peace, and love, be multiplied.
3Piriyamaanavarkalae, pothuvaana iratchippaikkuriththu ungalukku eluthumpati naan mikavum karuththullavanaayirukkaiyil, Parisuththavaankalukku oruvisai oppukkodukkappatta visuvaasaththirkaaka neengal thairiyamaayp poraadavaenndumentu ungalukku eluthi unarththuvathu enakku avasiyamaayk kanndathu.Beloved, when I gave all diligence to write unto you of the common salvation, it was needful for me to write unto you, and exhort you that ye should earnestly contend for the faith which was once delivered unto the saints.
4Aenenil namathu thaevanutaiya kirupaiyaik kaamavikaaraththukkaethuvaakap puratti, ontana aanndavaraakiya thaevanaiyum, nammutaiya karththaraakiya YesuKristhuvaiyum maraுthalikkira pakthiyatta silar pakkavaliyaay nulainthirukkiraarkal; avarkal intha aakkinaikkullaavaarkalentu poorvaththilae eluthiyirukkirathu.For there are certain men crept in unawares, who were before of old ordained to this condemnation, ungodly men, turning the grace of our God into lasciviousness, and denying the only Lord God, and our Lord Jesus Christ.
5Neengal munnamae arinthirunthaalum, naan ungalukku ninaippootta virumpukirathennavenil, Karththar thamathu janaththai ekipthu thaesaththilirunthu varappannnni iratchiththu, pinpu visuvaasiyaathavarkalai aliththaar.I will therefore put you in remembrance, though ye once knew this, how that the Lord, having saved the people out of the land of Egypt, afterward destroyed them that believed not.
6Thangalutaiya aathimaenmaiyaik kaaththukkollaamal, thangalukkuriya vaasasthalaththai vittuvitta thootharkalaiyum, makaa naalin niyaayaththeerppukkentu niththiya sangilikalinaalae katti, anthakaaraththil ataiththu vaiththirukkiraar.And the angels which kept not their first estate, but left their own habitation, he hath reserved in everlasting chains under darkness unto the judgment of the great day.
7Appatiyae sothom komoraa pattanaththaarkalum, avaikalaich soolntha pattanaththaarkalum, avarkalaip pol vipasaarampannnni, anniya maamsaththaith thodarnthu, niththiya akkiniyin aakkinaiyai atainthu, thirushdaanthamaaka vaikkappattirukkiraarkal.Even as Sodom and Gomorrha, and the cities about them in like manner, giving themselves over to fornication, and going after strange flesh, are set forth for an example, suffering the vengeance of eternal fire.
8Appatippolavae, soppanakkaararaakiya ivarkalum maamsaththai asusippaduththikkonndu, karththaththuvaththai asattaைpannnni, makaththuvangalaith thooshikkiraarkal.Likewise also these filthy dreamers defile the flesh, despise dominion, and speak evil of dignities.
9Pirathaana thoothanaakiya mikaavael, Mosesyin sareeraththaik kuriththup pisaasudanae tharkkiththuppaesinapothu, avanaith thooshanamaayk kuttappaduththath thunniyaamal: Karththar unnaik katinthukolvaaraaka entu sonnaan.Yet Michael the archangel, when contending with the devil he disputed about the body of Moses, durst not bring against him a railing accusation, but said, The Lord rebuke thee.
10Ivarkal thangalukkuth theriyaathavaikalaith thooshikkiraarkal; puththiyillaatha mirukangalaippola supaavappati thangalukkuth therinthirukkiravaikalaalae thangalaik keduththukkollukiraarkal.But these speak evil of those things which they know not: but what they know naturally, as brute beasts, in those things they corrupt themselves.
11Ivarkalukku aiyo! Ivarkal kaayeenutaiya valiyil nadanthu, pilaeyaam koolikkaakach seytha vanjakaththilae virainthoti, koraa ethirththuppaesina paavaththirkullaaki, kettupponaarkal.Woe unto them! for they have gone in the way of Cain, and ran greedily after the error of Balaam for reward, and perished in the gainsaying of Core.
12Ivarkal ungal anpin virunthukalil karaikalaayirunthu, payamintik kooda virunthunndu, thangalaith thaangalae maeyththukkollukiraarkal; ivarkal kaattaுkalaal atiyunntoodukira thannnneeratta maekangalum, ilaiyuthirnthu kaniyattaு iranndutharanj seththu vaerattaுp pona marangalum,These are spots in your feasts of charity, when they feast with you, feeding themselves without fear: clouds they are without water, carried about of winds; trees whose fruit withereth, without fruit, twice dead, plucked up by the roots;
13Thangal avamaanangalai nuraithallukira amaliyaana kadalalaikalum, maarkkanthappi alaikira natchaththirangalumaayirukkiraarkal; ivarkalukkaaka ententaikkum kaarirulae vaikkappattirukkirathu.Raging waves of the sea, foaming out their own shame; wandering stars, to whom is reserved the blackness of darkness for ever.
14Aathaamukku aelaanthalaimuraiyaana aenokkum ivarkalaikkuriththu: itho, ellaarukkum niyaayaththeerppuk kodukkiratharkum, avarkalil avapakthiyullavarkal yaavarum avapakthiyaaych seythuvantha sakala avapakthiyaana kiriyaikalinimiththamum,And Enoch also, the seventh from Adam, prophesied of these, saying, Behold, the Lord cometh with ten thousands of his saints,
15Thamakku virothamaay avapakthiyulla paavikal paesina katina vaarththaikalellaavattinimiththamum, avarkalaik kanntikkiratharkum, aayiramaayiramaana thamathu Parisuththavaankalodungaூda Karththar varukiraar entu munnariviththaan.To execute judgment upon all, and to convince all that are ungodly among them of all their ungodly deeds which they have ungodly committed, and of all their hard speeches which ungodly sinners have spoken against him.
16Ivarkal muraுmuraுkkiravarkalum, muraiyidukiravarkalum, thangal ichchaைkalinpati nadakkiravarkalumaayirukkiraarkal; ivarkalutaiya vaay iraுmaappaanavaikalaippaesum; tharpolivukkaaka mukasthuthi seyvaarkal.These are murmurers, complainers, walking after their own lusts; and their mouth speaketh great swelling words, having men's persons in admiration because of advantage.
17Neengalo piriyamaanavarkalae, nammutaiya karththaraakiya YesuKristhuvin apposthalaraal mun sollappatta vaarththaikalai ninaivukooraுngal.But, beloved, remember ye the words which were spoken before of the apostles of our Lord Jesus Christ;
18Kataisikkaalaththilae thangal thunmaarkkamaana ichchaைkalinpati nadakkira pariyaasakkaarar thontuvaarkal entu ungalukkuch sonnaarkalae.How that they told you there should be mockers in the last time, who should walk after their own ungodly lusts.
19Ivarkal pirinthu pokiravarkalum, jenmasupaavaththaarum, aaviyillaathavarkalumaamae.These be they who separate themselves, sensual, having not the Spirit.
20Neengalo piriyamaanavarkalae, ungal makaa Parisuththamaana visuvaasaththinmael ungalai uraுthippaduththikkonndu, Parisuththa aavikkul Jebampannnni,But ye, beloved, building up yourselves on your most holy faith, praying in the Holy Ghost,
21Thaevanutaiya anpilae ungalaik kaaththukkonndu, niththiya jeevanukkaethuvaaka nammutaiya karththaraakiya YesukKristhuvinutaiya irakkaththaipperak kaaththirungal.Keep yourselves in the love of God, looking for the mercy of our Lord Jesus Christ unto eternal life.
22Allaamalum, neengal pakuththarivullavarkalaayirunthu, silarukku irakkam paaraatti, silarai akkiniyilirunthu iluththuvittu, payaththotae iratchiththu,And of some have compassion, making a difference:
23Maamsaththaal karaippattirukkira vasthiraththaiyum veraுththuth thallungal.And others save with fear, pulling them out of the fire; hating even the garment spotted by the flesh.
24Valuvaathapati ungalaik kaakkavum, thamathu makimaiyulla sannithaanaththilae mikuntha makilchchiyotae ungalai maasattavarkalaay niraுththavum vallamaiyullavarum,Now unto him that is able to keep you from falling, and to present you faultless before the presence of his glory with exceeding joy,
25Thaam oruvarae njaanamullavarumaakiya nammutaiya iratchakaraana thaevanukkuk kanamum makaththuvamum vallamaiyum athikaaramum ippoluthum eppoluthum unndaavathaaka. Amen.To the only wise God our Saviour, be glory and majesty, dominion and power, both now and ever. Amen.