தமிழ்

Ucchida Pattanam - உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்

உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்
விரைந்தோடி நடவடி உத்தம புத்திரி
உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்

நிச்சயமாகவே ரட்சகர் செப்புரை
நீணிலம் தோன்றும் முனாடி நம்
நித்திய பிதாவே ஆயத்தமாய் நாட்டிய
நீதியின் பட்டணம் ஆதிபன் கட்டடம்
நிண்ணய மாநகரம் திடத்திடு
உன்னதமே சிகரம் நமின் பிரிய
நேசர் கிறிஸ்து மேல் பாசம் மிகுத்தவர்
நேரே செலும் நவ சாலேம் நகர் என்ற

சித்தமாய் உச்சித பட்டணம் பற்றியே
செப்புகிறாய் எனின் தாயே அதில்
சேந்திடு பிள்ளைகள் வாழ்ந்துறும் பாக்கியம்
திட்ட அரிதாம் என் தாயே புது
வித்தக மாநகர் ரத்னப் பளிங்கு
விளக்கொளி மேவும் நன்றாயே அந்த
விஞ்சையர் பட்டணம் எங்கே இருக்கும்
விளம்பி விரி என் பேராயே
இத்தரை மீதிலோ அத்திரி வானிலோ
இட்டமாய் யாம் அதற் கெட்டி நடவமோ
எங்கே இருக்கு தம்மா கவலை அற்
றங்க் கிருப்போமே சும்மா சரி சரி
இன்பக் கண்ணாட்டியே அன்புப் புதல்வியே
எங்கிருக்கு தென்றன் தங்கமே சொல்கிறேன்

உன்னத வானிலிருந் திறங்கும் அவ்வெ
ருசலேம் பட்டணம் கண்டு வெகு
ஊக்கமுடன் அதைப் பார்க்கப் புறப்பட்டு
ஓசன்னாவும் பாடிக் கொண்டு அங்கே
பன்னிரு வாசலும் கண்ணாடி வீதியும்
பானொளிக் கற்களும் உண்டு அந்தப்
பட்டணம் தேவாட்டுக் குட்டியின் ஆசனம்
பண்பாக மத்தியில் கொண்டு
மின்னும் விளக்குகள் தீவட்டிகள் இல்லை
விண்ணினில் சூரிய சந்திரரும் இல்லை
மெய்ப்பொழு தானவரே அதன் விளக்கெபொழுதும் அவரே அலங்க்ருத
மேன்மைப்பிரகாசப் பான்மையின் நீதியர்
மேனி மினுங்கிடத் தோணி இலங்கிடு

Ucchida Pattanam Lyrics in English

uchchitha pattanam patchamudan seluvom
virainthoti nadavati uththama puththiri
uchchitha pattanam patchamudan seluvom

nichchayamaakavae ratchakar seppurai
neennilam thontum munaati nam
niththiya pithaavae aayaththamaay naattiya
neethiyin pattanam aathipan kattadam
ninnnaya maanakaram thidaththidu
unnathamae sikaram namin piriya
naesar kiristhu mael paasam mikuththavar
naerae selum nava saalaem nakar enta

siththamaay uchchitha pattanam pattiyae
seppukiraay enin thaayae athil
senthidu pillaikal vaalnthurum paakkiyam
thitta arithaam en thaayae puthu
viththaka maanakar rathnap palingu
vilakkoli maevum nantayae antha
vinjaiyar pattanam engae irukkum
vilampi viri en paeraayae
iththarai meethilo aththiri vaanilo
ittamaay yaam athar ketti nadavamo
engae irukku thammaa kavalai ar
ranga் kiruppomae summaa sari sari
inpak kannnnaattiyae anpup puthalviyae
engirukku thentan thangamae solkiraen

unnatha vaanilirun thirangum avve
rusalaem pattanam kanndu veku
ookkamudan athaip paarkkap purappattu
osannaavum paatik konndu angae
panniru vaasalum kannnnaati veethiyum
paanolik karkalum unndu anthap
pattanam thaevaattuk kuttiyin aasanam
pannpaaka maththiyil konndu
minnum vilakkukal theevattikal illai
vinnnninil sooriya santhirarum illai
meyppolu thaanavarae athan vilakkepoluthum avarae alanga்rutha
maenmaippirakaasap paanmaiyin neethiyar
maeni minungidath thonni ilangidu

PowerPoint Presentation Slides for the song Ucchida Pattanam

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites