2 நாளாகமம் 27 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 யோத்தாம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகள் எரூசா என்பவளே அவன் தாய்.2 தன் தந்தை உசியாவைப்போல் அவன் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்து வந்தான்; அவனைப்போலன்றி ஆண்டவரின் இல்லத்தில் நுழையவில்லை. மக்களோ தொடர்ந்து தீய வழியில் நடந்தனர்.⒫3 அவன் ஆண்டவரது இல்லத்தின் உயர் வாயிலைக் கட்டியதுடன், ஒபேலின் மதில்களைப் பெரிதாகக் கட்டினான்.4 அவன் யூதாவின் மலைகளில் நகர்களையும், காடுகளில் கோட்டைகளையும் கொத்தளங்களையும் கட்டினான்.5 அவன் அம்மோனியரின் மன்னனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான். அந்த ஆண்டில் அம்மோனியர் அவனுக்கு நாலாயிரம் கிலோகிராம்* வெள்ளியும், பத்தாயிரம் கலம்** கோதுமையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையும் அளித்தனர். இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளிலும் அவ்வாறே அம்மோனியர் அவனுக்கு அளித்தனர்.6 யோத்தாமின் வழிகள் அவன் கடவுளாம் ஆண்டவரின் திருமுன் நேரியனவாக இருந்தமையால், அவன் வலிமையுடையவன் ஆனான்.7 யோத்தாமின் பிற செயல்களும், அவனுடைய எல்லாப் போர்களும், அவன் வழிமுறைகளும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.8 அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. பதினாறு ஆண்டுகள் எருசலேமில் அவன் ஆட்சி செய்தான்.9 யோத்தாம் தன் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் அவனுக்குப் பின் அரசனானான்.