எசேக்கியேல் 28 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:2 ⁽மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:␢ உன் இதயத்தின் செருக்கில்,␢ ‘நானே கடவுள்;␢ நான் கடல் நடுவே␢ கடவுளின் அரியணையில்␢ வீற்றிருக்கிறேன்’␢ என்று சொல்கின்றாய், ஆனால்␢ நீ கடவுளைப்போல்␢ அறிவாளியாக இருப்பதாக␢ எண்ணிடினும்,␢ நீ கடவுளல்ல; மனிதனே!⁾3 ⁽தானியேலை விட நீ அறிவாளிதான்!␢ மறைபொருள் எதுவும்␢ உனக்கு மறைவாயில்லை!⁾4 ⁽உன் ஞானத்தாலும் அறிவாலும்␢ உனக்குச் செல்வம் சேர்த்தாய்;␢ உன் கருவூலத்தில் பொன்னையும்␢ வெள்ளியையும் குவித்தாய்.⁾5 ⁽உன் வாணிபத் திறமையால்␢ உன் செல்வத்தைப் பெருக்கினாய்;␢ உன் செல்வத்தினாலோ␢ உன் இதயம் செருக்குற்றது.⁾6 ⁽ஆகவே, தலைவராகிய ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகிறார்:␢ கடவுளைப்போல் அறிவாளி என␢ உன்னைக் கருதிக் கொள்வதால்,⁾7 ⁽மக்களினங்களில்␢ மிகவும் கொடியோரான அந்நியரை␢ உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்;␢ அவர்கள் உன் அழகுக்கும்␢ ஞானத்திற்கும் எதிராக␢ உருவிய வாளுடன் வருவர்;␢ உன் பெருமையைக் குலைப்பர்.⁾8 ⁽படு குழியில் தள்ளுவர் உன்னை;␢ கடல் நடுவே மூழ்கிச்␢ சாவோரெனச் சாவாய் நீயே!⁾9 ⁽அப்போது உன்னைக்␢ கொல்வோரின் நடுவில்␢ ‘நானே கடவுள்’ என்று சொல்வாயோ?␢ உன்னைக் குத்திக்␢ கிழிப்போரின் கையில்␢ நீ கடவுளாக அல்ல,␢ மனிதனாகவே இருப்பாய்.⁾10 ⁽விருத்தசேதனம்␢ செய்யப்படாதவனைப்போல்␢ அன்னியர் கையால் நீ சாவாய்.␢ நானே உரைத்தேன், என்கிறார்␢ தலைவராகிய ஆண்டவர்.⁾11 ⁽ஆண்டவரின் வாக்கு␢ எனக்கு அருளப்பட்டது:⁾12 ⁽மானிடா! தீர் நகரின்␢ மன்னனைக் குறித்து,␢ இரங்கற்பா ஒன்று பாடு.␢ தலைவராகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே;␢ ‘நீ நிறைவின் மாதிரியாகவும்␢ ஞானத்தின் நிறைவாகவும்ப்␢ அழகின் முழுமையாகவும் இருந்தாய்.⁾13 ⁽கடவுளின் தோட்டமாகிய␢ ஏதேனில் இருந்தாய்!␢ விலையுயர்ந்த கற்கள்␢ உன்னை அழகுபடுத்தின!⁾ பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகப்பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருந்தாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பிறந்த அன்றே இவை படைக்கப்பட்டுத் தயாரிக்கப்பெற்றன.14 காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்; ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய்.15 நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய்.16 ⁽பரந்த உன் வாணிபத்தால்␢ வன்முறை நிறைந்தது உன்னில்;␢ பாவம் செய்தாய் நீயே!␢ எனவே, வெறுப்புடன் உன்னைக்␢ கடவுளின் மலையினின்று␢ வெளியேற்றினேன்;␢ ஓ! காவல்காக்கும் கெருபே!␢ உன்னை ஒளிவீசும்␢ கற்கள் நடுவினின்று␢ வெளியே தள்ளினேன்.⁾17 ⁽உன் அழகின் காரணமாய்␢ உன் இதயம் செருக்குற்றது;␢ உன் மாட்சியின் காரணமாய்␢ உன் ஞானத்தைக்␢ கெடுத்துக் கொண்டாய்;␢ எனவே நான் உன்னைத்␢ தரையில் தள்ளிவிட்டேன்;␢ மன்னர்கள் முன்னே உன்னைக்␢ காட்சிப் பொருளாக்கினேன்.⁾18 ⁽உன் மிகுதியான பாவங்களாலும்␢ நேர்மையற்ற வாணிபத்தாலும்␢ உன் திருத்தலங்களைத்␢ தீட்டுப்படுத்தினாய்;␢ எனவே உன் நடுவினின்று␢ நெருப்பு வரச்செய்தேன்.␢ உன்னைப் பார்த்தோர் கண்முன்னே␢ முற்றிலும் உன்னைத்␢ தரையில் சாம்பலாக்கினேன்.⁾19 ⁽உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும்␢ உன்னைக் கண்டு மருண்டு␢ திகிலுறுகின்றன.␢ நடுங்கற்குரிய முடிவுக்கு␢ வந்து விட்டாய் நீ;␢ இனிமேல் நீ இருக்கமாட்டாய்.’⁾20 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:21 மானிடா! சீதோனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்காகச் சொல்.22 ⁽தலைவராகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே;␢ சீதோனே, நான் உனக்கு␢ எதிராய் இருக்கிறேன்;␢ உன் நடுவில் என் மாட்சியை␢ வெளிப்படுத்தும்போது,␢ நான் உன்மீது தண்டனைத் தீர்ப்புகளை␢ நிறைவேற்றும்போது,␢ உன் நடுவில் என் தூய்மையைக்␢ காண்பிக்கும்போது,␢ ‘நானே ஆண்டவர்’ என␢ உன்னிலுள்ளோர் அறிந்து கொள்வர்.⁾23 ⁽உன்னிடத்தில் கொள்ளை நோய்␢ வரச்செய்து, உன் தெருக்களில்␢ குருதி ஓடச் செய்வேன்.␢ கொலை செய்யப்பட்டோர்␢ உன் நடுவில் விழுந்துகிடப்பர்;␢ உனக்கு எதிராய் எப்பக்கமும்␢ வாள் இருக்கும்;␢ அப்போது ‘நானே ஆண்டவர்’ என அறிந்து கொள்வர்.⁾⒫24 இஸ்ரயேல் நாட்டினர்க்கு அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் இனிமேல் காலில் குத்தும் முள்ளாகவும் தைத்து வலிகொடுக்கும் நெரிஞ்சிலாகவும் இருக்கமாட்டார். அப்போது, அவர்கள் ‘நானே தலைவராகிய ஆண்டவர்’ என்பதை அறிந்து கொள்வர்.25 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டினரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்க்கையில் எல்லா மக்களினங்கள் நடுவிலும் நான் என் தூய்மையைக் காண்பிப்பேன். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்த அவர்களின் சொந்த நாட்டில் அப்போது வாழ்வர்.26 அவர்கள் அங்கே அச்சமின்றிக் குடியிருப்பர்; வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைப்பர். அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் அனைவர் மீதும் தண்டனைத் தீர்ப்புகளை நான் நிறைவேற்றும்போது, அவர்கள் மட்டும் அச்சமின்றி வாழ்வர். அப்போது ‘நானே ஆண்டவர்’ என அறிந்து கொள்வர்.