எசேக்கியேல் 42

fullscreen1 பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிப்பிராகாரத்திலே புறப்படப்பண்ணி, பிரத்தியேகமான இடத்துக்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.

fullscreen2 நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம்.

fullscreen3 உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது.

fullscreen4 உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.

fullscreen5 உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது.

fullscreen6 அவைகள் மூன்று அடுக்குகளாயிருந்தது; பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைப் பார்க்கிலும் அகலக்கட்டையாயிருந்தது.

fullscreen7 புறம்பே அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறை வீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.

fullscreen8 வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது.

fullscreen9 கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.

fullscreen10 கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.

fullscreen11 அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும் எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது.

fullscreen12 தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது.

fullscreen13 அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருக்கிற வடபுறமான அறைவீடுகளும் தென்புறமான அறைவீடுகளும் பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த ஸ்தலம் பரிசுத்தமாயிருக்கிறது.

fullscreen14 ஆசாரியர் உட்பிரவேசிக்கும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திருந்து வெளிப்பிராகாரத்துக்கு வராததற்குமுன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து உடுத்தியிருந்த ஸ்திரங்களைக் கழற்றி வைப்பார்கள்; அவ்வஸ்திரங்கள் பரிசுத்தமானவைகள்; வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, ஜனத்தின் பிராகாரத்திலே போவார்கள் என்றார்.

fullscreen15 அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச்சுற்றிலும் அளந்தார்.

fullscreen16 கீழ்த்திசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறுகோலாயிருந்தது.

fullscreen17 வடதிசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறுகோலாய் அளந்தார்.

fullscreen18 தென்திசைப்பக்கத்தை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.

fullscreen19 மேற்றிசைப் பக்கத்துக்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.

fullscreen20 நாலு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது மெமுகான் ராஜாவிற்கும் பிரபுக்களுக்கும் முன்னே மறுமொழியாக: ராணியாகிய வஸ்தி ராஜாவிற்கு மட்டும் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய எல்லா நாடுகளிலுமுள்ள எல்லாபிரபுக்களுக்கும் எல்லா மக்களுக்குங்கூட அநியாயம் செய்தாள்.

Tamil Easy Reading Version
பிறகு, மெமுகான் மற்ற அதிகாரிகள் கவனித்துக்கொண்டிருக்கையில், “இராணி வஸ்தி தவறு செய்தாள். அவள் அரசனுக்கு எதிராகவும், எல்லா தலைவர்களுக்கு எதிராகவும், அகாஸ்வேரு அரசனது அரசாட்சியில் உள்ள எல்லா ஜனங்களுக்கு எதிராகவும் தவறு செய்தாள்.

Thiru Viviliam
மன்னருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் முன்பாக மெமுக்கான் கூறியது: “அரசி வஸ்தி மன்னருக்கு எதிராக மட்டுமன்றித் தலைவர் அனைவர்க்கு எதிராகவும், அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநில மக்களுக்கு எதிராகவும் தவறிழைத்துவிட்டாள்.

எஸ்தர் 1:15எஸ்தர் 1எஸ்தர் 1:17

King James Version (KJV)
And Memucan answered before the king and the princes, Vashti the queen hath not done wrong to the king only, but also to all the princes, and to all the people that are in all the provinces of the king Ahasuerus.

American Standard Version (ASV)
And Memucan answered before the king and the princes, Vashti the queen hath not done wrong to the king only, but also to all the princes, and to all the peoples that are in all the provinces of the king Ahasuerus.

Bible in Basic English (BBE)
And before the king and the captains, Memucan gave his answer: Vashti the queen has done wrong, not only to the king, but to all the captains and to all the peoples in all the divisions of the kingdom of King Ahasuerus;

Darby English Bible (DBY)
Then said Memucan before the king and the princes, The queen Vashti has not done wrong to the king only, but also to all the princes, and to all the peoples that are in all the provinces of the king Ahasuerus.

Webster’s Bible (WBT)
And Memucan answered before the king and the princes, Vashti the queen hath not done wrong to the king only, but also to all the princes, and to all the people that are in all the provinces of the king Ahasuerus.

World English Bible (WEB)
Memucan answered before the king and the princes, Vashti the queen has not done wrong to the king only, but also to all the princes, and to all the peoples who are in all the provinces of the king Ahasuerus.

Young’s Literal Translation (YLT)
And Memucan saith before the king and the heads, `Not against the king by himself hath Vashti the queen done perversely, but against all the heads, and against all the peoples that `are’ in all provinces of the king Ahasuerus;

எஸ்தர் Esther 1:16
அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்குமாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.
And Memucan answered before the king and the princes, Vashti the queen hath not done wrong to the king only, but also to all the princes, and to all the people that are in all the provinces of the king Ahasuerus.

And
Memucan
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
answered
מְומּכָ֗ןmĕwmmkānmev-MKAHN
before
לִפְנֵ֤יlipnêleef-NAY
king
the
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
and
the
princes,
וְהַשָּׂרִ֔יםwĕhaśśārîmveh-ha-sa-REEM
Vashti
לֹ֤אlōʾloh
queen
the
עַלʿalal
hath
not
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
done
wrong
לְבַדּ֔וֹlĕbaddôleh-VA-doh
to
עָֽוְתָ֖הʿāwĕtâah-veh-TA
the
king
וַשְׁתִּ֣יwaštîvahsh-TEE
only,
הַמַּלְכָּ֑הhammalkâha-mahl-KA
but
כִּ֤יkee
also
to
עַלʿalal
all
כָּלkālkahl
the
princes,
הַשָּׂרִים֙haśśārîmha-sa-REEM
to
and
וְעַלwĕʿalveh-AL
all
כָּלkālkahl
the
people
הָ֣עַמִּ֔יםhāʿammîmHA-ah-MEEM
that
אֲשֶׁ֕רʾăšeruh-SHER
are
in
all
בְּכָלbĕkālbeh-HAHL
the
provinces
מְדִינ֖וֹתmĕdînôtmeh-dee-NOTE
of
the
king
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
Ahasuerus.
אֲחַשְׁוֵרֽוֹשׁ׃ʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH