ஏசாயா 62 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽சீயோனின் வெற்றி␢ வைகறை ஒளியெனவும்,␢ அதன் மீட்பு சுடர் விளக்கெனவும்␢ வெளிப்படும்வரை,␢ அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்;␢ எருசலேம் பொருட்டுச்␢ செயலற்று அமைதியாயிரேன்.⁾2 ⁽பிறஇனத்தார்␢ உன் வெற்றியைக் காண்பர்;␢ மன்னர் யாவரும்␢ உன் மேன்மையைப் பார்ப்பர்;␢ ஆண்டவர் தம் நாவினால் சூட்டும்␢ புதியதொரு பெயரால்␢ நீ அழைக்கப்படுவாய்.⁾3 ⁽ஆண்டவரின் கையில் நீ␢ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்;␢ உன் கடவுளின் கரத்தில்␢ அரச மகுடமாய் விளங்குவாய்.⁾4 ⁽‘கைவிடப்பட்டவள்’ என்று␢ இனி நீ பெயர்பெற மாட்டாய்;␢ ‘பாழ்பட்டது’ என␢ இனி உன் நாடு அழைக்கப்படாது;␢ நீ ‘எப்சிபா’* என்று அழைக்கப்படுவாய்;␢ உன் நாடு ‘பெயுலா’**என்று பெயர் பெறும்.␢ ஏனெனில், ஆண்டவர் உன்னை␢ விரும்புகின்றார்;␢ உன் நாடு மணவாழ்வு பெறும்.⁾5 ⁽இளைஞன் கன்னிப் பெண்ணை␢ மணப்பதுபோல␢ உன்னை எழுப்பியவர்␢ உன்னை மணந்து கொள்வார்;␢ மணமகன் மணப்பெண்ணில்␢ மகிழ்வதுபோல்␢ உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.⁾6 ⁽எருசலேமே, உன் மதில்கள்மேல்␢ காவலரை நிறுத்தியுள்ளேன்;␢ இராப்பகலாய் ஒருபோதும்␢ அவர்கள் அமைதியாய் இரார்;␢ ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே!␢ நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர்.⁾7 ⁽அவர் எருசலேமை நிலைநாட்டி,␢ பூவுலகில் அது புகழ் பெறும்வரை␢ அவரை ஓய்வெடுக்க விடாதீர்.⁾8 ⁽ஆண்டவர் தம் வலக்கையின் மேலும்␢ வலிமைமிக்க தம் புயத்தின் மேலும்␢ ஆணையிட்டுக் கூறியது:␢ உன் தானியத்தை இனி␢ நான் உன் பகைவருக்கு␢ உணவாகக் கொடுக்கமாட்டேன்;␢ உன் உழைப்பால் கிடைத்த␢ திராட்சை இரசத்தை␢ வேற்றின மக்கள் பருகமாட்டார்கள்.⁾9 ⁽அறுவடை செய்தவர்களே␢ அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர்.␢ பழம் பறித்தவர்களே␢ என் தூயகச் சுற்றுமுற்றங்களில்␢ இரசம் பருகுவர்.⁾10 ⁽செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க்␢ கடந்து செல்லுங்கள்;␢ மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்;␢ அமையுங்கள், நெடுஞ்சாலையைச்␢ சீராக அமையுங்கள்;␢ கற்களை அகற்றுங்கள்;␢ மக்களினங்கள்முன்␢ கொடியைத் தூக்கிப் பிடியுங்கள்.⁾11 ⁽உலகின் கடைக்கோடி வரை␢ ஆண்டவர் பறைசாற்றியது:␢ “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்:␢ இதோ, உன் மீட்பு வருகின்றது,␢ அவரது வெற்றிப்பரிசு␢ அவருடன் உள்ளது;␢ அவரது செயலின் பயன்␢ அவர் முன்னே உள்ளது.”⁾12 ⁽‘புனித மக்களினம்’ என்றும்␢ ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும்␢ அவர்கள் அழைக்கப்படுவார்கள்;␢ நீயோ, ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்’␢ என்றும்␢ இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும்␢ பெயர் பெறுவாய்.⁾