எரேமியா 6 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து␢ தப்பியோடுங்கள்;␢ தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்;␢ பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்;␢ ஏனெனில் வடக்கிலிருந்து␢ தீமையும், பேரழிவும் வருகின்றன.⁾2 ⁽*மகள் சீயோனை␢ வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்*.⁾3 ⁽ஆயர்கள் தங்கள் மந்தையோடு␢ அவளிடம் வருவார்கள்;␢ அவளைச் சுற்றிலும்␢ கூடாரங்கள் அடிப்பார்கள்;␢ அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.⁾4 ⁽“அவளுக்கு எதிராய்ப்␢ போருக்குத் தயாராகுங்கள்;␢ எழுந்திருங்கள்;␢ நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்;␢ ஐயோ! பொழுது சாய்கின்றதே!␢ மாலை நேரத்து நிழல்கள்␢ நீள்கின்றனவே!⁾5 ⁽எழுந்திருங்கள்;␢ இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்;␢ அவள் அரண்மனைகளை␢ அழிப்போம்” என்பார்கள்.⁾6 ⁽படைகளின் ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகிறார்;␢ அவளுடைய மரங்களை வெட்டுங்கள்;␢ எருசலேமுக்கு எதிராக␢ முற்றுகைத் தளம் எழுப்புங்கள்;␢ அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்;␢ அவளிடம் காணப்படுவது அனைத்தும்␢ கொடுமையே.⁾7 ⁽கேணியில் நீர்␢ சுரந்து கொண்டிருப்பது போல்␢ அவள் தீமைகளைச்␢ சுரந்து கொண்டிருக்கின்றாள்.␢ வன்முறை, அழிவு என்பதே␢ அவளிடம் எழும் குரல்;␢ நோயும் காயமுமே␢ என்றும் என் கண்முன் உள்ளன.⁾8 ⁽எருசலேமே, எச்சரிக்கையாய் இரு;␢ இல்லையேல், நான் உன்னைவிட்டு␢ அகன்று போவேன்;␢ உன்னை மனிதர் வாழாப்␢ பாழ்நிலம் ஆக்குவேன்.⁾9 ⁽படைகளின் ஆண்டவர்␢ கூறுவது இதுவே;␢ திராட்சைக் கொடிகளில்␢ தப்பும் பழங்களை ஒன்றும் விடாது␢ பறித்துச் சேர்ப்பது போல,␢ இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக்␢ கூட்டிச்சேர்.␢ திராட்சைத் தோட்டக்காரரைப்போல்␢ கிளைகளிடையே␢ உன் கையை விட்டுப் பார்.⁾10 ⁽நான் யாரிடம் பேசுவேன்?␢ யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்?␢ யார் செவி கொடுப்பார்?␢ அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை;␢ அவர்களால் செவிகொடுக்க முடியாது;␢ ஆண்டவரின் வாக்கு␢ அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று;␢ அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.⁾11 ⁽ஆண்டவரின் சீற்றம்␢ என்னில் நிறைந்துள்ளது;␢ அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்;␢ ஆண்டவர் கூறுவது;␢ தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும்␢ ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும்␢ சினத்தைக் கொட்டு.␢ கணவனும் மனைவியும்,␢ முதியோரும் வயது நிறைந்தோரும் பிடிபடுவர்.⁾12 ⁽அவர்களுடைய வீடுகளையும்␢ நிலங்களையும் மனைவியரையும்␢ பிறர் கைப்பற்றுவர்;␢ ஏனெனில், நாட்டில்␢ குடியிருப்போருக்கு எதிராய்␢ என் கையை நீட்டப்போகிறேன்.⁾13 ⁽ஏனெனில், சிறியோர் முதல்␢ பெரியோர் வரை அனைவரும்␢ கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்;␢ இறைவாக்கினர் முதல்␢ குருக்கள்வரை அனைவரும்␢ ஏமாற்றுவதையே␢ தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.⁾14 ⁽அமைதியே இல்லாதபொழுது,␢ ‘அமைதி, அமைதி’ என்று கூறி␢ என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை␢ மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.⁾15 ⁽அருவருப்பானதைச் செய்தபோது␢ அவர்கள் வெட்கமடைந்தார்களா?␢ அப்போதுகூட அவர்கள்␢ வெட்கமடையவில்லை;␢ நாணம் என்பதே என்னவென்று␢ அவர்களுக்குத் தெரியாது;␢ எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு␢ அவர்களும் வீழ்வர்;␢ நான் அவர்களைத் தண்டிக்கும்போது␢ அவர்கள் வீழ்த்தப்படுவர்␢ என்கிறார் ஆண்டவர்.⁾16 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்;␢ தொன்மையான பாதைகள் எவை?␢ நல்ல வழி எது? என்று கேளுங்கள்;␢ அதில் செல்லுங்கள்.␢ அப்போது உங்களுக்கு␢ அமைதி கிடைக்கும்.␢ அவர்களோ, “அவ்வழியே␢ செல்ல மாட்டோம்” என்றார்கள்.⁾17 ⁽நான் உங்களுக்குக்␢ காவலரை நியமித்தேன்.␢ “எக்காளக் குரலுக்குச்␢ செவி கொடுங்கள்” என்றேன்.␢ அவர்களோ, “செவிசொடுக்க␢ மாட்டோம்” என்றார்கள்.⁾18 ⁽எனவே, நாடுகளே கேளுங்கள்;␢ மக்கள் கூட்டத்தாரே,␢ அவர்களுக்கு என்ன நேரப்போகிறது␢ என்று பாருங்கள்.⁾19 ⁽நிலமே, நீயும் கேள்;␢ இதோ! இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன்.␢ அவர்களின் தீய எண்ணங்களின்␢ விளைவே இத்தீமை.␢ ஏனெனில், அவர்கள்␢ என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை;␢ என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.⁾20 ⁽சேபா நாட்டுத் தூபமும்␢ தூரத்து நாட்டு நறுமண நாணலும்␢ எனக்கு எதற்கு?␢ உங்கள் எரிபலிகள்␢ எனக்கு ஏற்புடையவை அல்ல.␢ உங்களின் மற்றைய பலிகளும்␢ எனக்கு உவகை தருவதில்லை.⁾21 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே;␢ இதோ இம் மக்களுக்கு எதிராகத்␢ தடைக்கற்களை வைக்கப்போகிறேன்.␢ தந்தையரும் தனயரும்␢ ஒன்றாகத் தடுக்கி விழுவர்;␢ அடுத்திருப்பாரும் நண்பரும்␢ அழிந்து போவர்.⁾22 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே;␢ இதோ! வடக்கு நாட்டினின்று␢ ஓர் இனம் வருகின்றது;␢ மண்ணுலகின் கடை எல்லைகளினின்று␢ பெரிய நாடு ஒன்று␢ கிளர்ந்து எழுகின்றது.⁾23 ⁽அவர்கள் வில்லும் ஈட்டியும்␢ ஏந்தியுள்ளார்கள்;␢ அவர்கள் கொடியவர்; இரக்கமற்றவர்;␢ அவர்களின் ஆரவாரம்␢ கடலின் இரைச்சலைப் போன்றது;␢ மகளே சீயோன்!␢ அவர்கள் போருக்கு அணிவகுத்து␢ குதிரைகள் மீது வருகின்றார்கள்;␢ சவாரி செய்துகொண்டு␢ உனக்கெதிராய் வருகின்றார்கள்;⁾24 ⁽“அவர்களைப் பற்றிய செய்தியை␢ நாம் கேள்வியுற்றபோது␢ நம் கைகள் தளர்ந்து போயின;␢ கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது;␢ பேறுகாலப் பெண்ணைப் போல்␢ நாம் தவிக்கின்றோம்.⁾25 ⁽வயல்வெளிக்குப்␢ போகவேண்டாம்;␢ சாலைகளில் செல்ல வேண்டாம்;␢ ஏனெனில், எதிரியின் வாள்␢ எங்கும் உள்ளது;␢ சுற்றிலும் ஒரே திகில்.⁾26 ⁽மகளாகிய என் மக்களே!␢ சாக்கு உடை உடுத்துங்கள்;␢ சாம்பலில் புரளுங்கள்;␢ இறந்த ஒரே பிள்ளைக்காகத்␢ துயருற்று அழுவது போல்,␢ மனமுடைந்து அழுது புலம்புங்கள்.␢ ஏனெனில், அழிப்பவன் திடீரென␢ நமக்கெதிராய் வருவான்.”⁾27 ⁽நான் உன்னை என் மக்களுக்குள்␢ மதிப்பீடு செய்பவனாகவும்,␢ ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்;␢ நீ அவர்களின் வழிகளை அறிந்து␢ மதிப்பீடு செய்வாய்.⁾28 ⁽அவர்கள் எல்லாரும்␢ அடங்காத கலகக்காரர்கள்;␢ பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்;␢ அவர்கள் யாவரும் வெண்கலத்தையும்␢ இரும்பையும் போன்றவர்கள்;␢ அவர்களின் செயல்கள் கறைபட்டவை.⁾29 ⁽துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன;␢ காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது.␢ தூய்மைப்படுத்தும் வேலை␢ தொடர்ந்து நடப்பதில் பயனில்லை;␢ ஏனெனில், தீயவர்கள் இன்னும்␢ நீக்கப்படவில்லை.⁾30 ⁽அவர்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’␢ என்று அழைக்கப்படுவார்கள்.␢ ஏனெனில், ஆண்டவர் அவர்களைப்␢ புறக்கணித்துள்ளார்.⁾