சங்கீதம் 148 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽அல்லேலூயா!␢ விண்ணுலகில் உள்ளவையே,␢ ஆண்டவரைப் போற்றுங்கள்;␢ உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.⁾2 ⁽அவருடைய தூதர்களே,␢ நீங்கள் யாவரும்␢ அவரைப் போற்றுங்கள்;␢ அவருடைய படைகளே,␢ நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.⁾3 ⁽கதிரவனே, நிலாவே,␢ அவரைப் போற்றுங்கள்;␢ ஒளிவீசும் விண்மீன்களே,␢ அவரைப் போற்றுங்கள்.⁾4 ⁽விண்ணுலக வானங்களே,␢ அவரைப் போற்றுங்கள்;␢ வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே,␢ அவரைப் போற்றுங்கள்.⁾5 ⁽அவை ஆண்டவரின் பெயரைப்␢ போற்றட்டும்;␢ ஏனெனில், அவரது கட்டளையின்படி␢ எல்லாம் படைக்கப்பட்டன;⁾6 ⁽அவரே அவற்றை என்றென்றும்␢ நிலைபெறச் செய்தார்;␢ மாறாத நியமத்தை␢ அவற்றிற்கு ஏற்படுத்தினார்.⁾7 ⁽மண்ணுலகில்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்;␢ கடலின் பெரும் நாகங்களே,␢ ஆழ்கடல் பகுதிகளே,⁾8 ⁽நெருப்பே, கல்மழையே,␢ வெண்பனியே, மூடுபனியே,␢ அவரது ஆணையை நிறைவேற்றும்␢ பெருங்காற்றே,⁾9 ⁽மலைகளே, அனைத்துக் குன்றுகளே,␢ கனிதரும் மரங்களே,␢ அனைத்துக் கேதுரு மரங்களே,⁾10 ⁽காட்டு விலங்குகளே,␢ அனைத்துக் கால்நடைகளே,␢ ஊர்ந்து செல்லும் உயிரினங்களே,␢ சிறகுள்ள பறவைகளே,⁾11 ⁽உலகின் அரசர்களே,␢ எல்லா மக்களினங்களே,␢ தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,⁾12 ⁽இளைஞரே, கன்னியரே,␢ முதியோரே மற்றும் சிறியோரே,␢ நீங்கள் எல்லாரும்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்.⁾13 ⁽அவர்கள் ஆண்டவரின் பெயரைப்␢ போற்றுவார்களாக;␢ அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது;␢ அவரது மாட்சி␢ விண்ணையும் மண்ணையும் கடந்தது.⁾14 ⁽அவர் தம் மக்களின் ஆற்றலை␢ உயர்வுறச் செய்தார்;␢ அவருடைய அனைத்து அடியாரும்␢ அவருக்கு நெருங்கிய␢ அன்பார்ந்த மக்களாகிய␢ இஸ்ரயேல் மக்களும்␢ அவரைப் போற்றுவார்கள்.␢ அல்லேலூயா!⁾