சங்கீதம் 28 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽ஆண்டவரே, உம்மை நோக்கி␢ மன்றாடுகின்றேன்;␢ என் கற்பாறையே, என் குரலைக்␢ கேளாதவர்போல் இராதேயும்;␢ நீர் மௌனமாய் இருப்பீராகில்,␢ படுகுழியில் இறங்குவோருள்␢ நானும் ஒருவனாகிவிடுவேன்.⁾2 ⁽நான் உம்மிடம் உதவி வேண்டுகையில்,␢ உமது திருத்தூயகத்தை நோக்கி␢ நான் கையுயர்த்தி வேண்டுகையில்,␢ பதில் அளித்தருளும்.⁾3 ⁽பொல்லாரோடு என்னை␢ ஒழித்து விடாதேயும்!␢ தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்!␢ அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு␢ பேசுவதோ சமாதானம்;␢ அவர்களது உள்ளத்தில் உள்ளதோ␢ நயவஞ்சகம்.⁾4 ⁽அவர்களின் செய்கைக்கேற்ப,␢ அவர்களின் தீச்செயலுக்கேற்ப,␢ அவர்களுக்குத் தண்டனை அளியும்;␢ அவர்கள் கைகள் செய்த␢ தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத்␢ தண்டனை வழங்கியருளும்,␢ அவர்களுக்குத் தகுந்த␢ கைம்மாறு அளித்தருளும்.⁾5 ⁽ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ␢ அவர் கைகள் உருவாக்கியவற்றையோ␢ அவர்கள் மதிக்கவில்லை;␢ ஆகையால் அவர் அவர்களைத் § தகர்த்தெறிவார்;␢ ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார்.⁾6 ⁽ஆண்டவர் போற்றி! போற்றி!␢ ஏனெனில், அவர் என்␢ கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார்.⁾7 ⁽ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்;␢ அவரை என் உள்ளம் நம்புகின்றது;␢ நான் உதவி பெற்றேன்; ஆகையால்␢ என் உள்ளம் களிகூர்கின்றது;␢ நான் இன்னிசைபாடி␢ அவருக்கு நன்றி கூறுவேன்.⁾8 ⁽ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை;␢ தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு␢ அவரே பாதுகாப்பான அரண்.⁾9 ⁽ஆண்டவரே, உம் மக்களுக்கு␢ விடுதலை அளித்தருளும்;␢ உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு␢ ஆசி வழங்கும்;␢ அவர்களுக்கு ஆயராக இருந்து␢ என்றென்றும் அவர்களைத்␢ தாங்கிக்கொள்ளும்.⁾சங்கீதம் 28 ERV IRV TRV