சங்கீதம் 69 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽கடவுளே! என்னைக் காப்பாற்றும்;␢ வெள்ளம் கழுத்தளவு␢ வந்துவிட்டது.⁾2 ⁽ஆழமிகு நீர்த்திரளுள்␢ அமிழ்ந்திருக்கின்றேன்;␢ நிற்க இடமில்லை;␢ நிலைக்கொள்ளாத நீருக்குள்␢ ஆழ்ந்திருக்கின்றேன்;␢ வெள்ளம் என்மீது␢ புரண்டோடுகின்றது.⁾3 ⁽கத்திக் கத்திக் களைத்துப்போனேன்;␢ தொண்டையும் வறண்டுபோயிற்று;␢ என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து␢ என் கண்கள் பூத்துப்போயின;⁾4 ⁽காரணமில்லாமல் என்னை வெறுப்போர்␢ என் தலைமுடியைவிட␢ மிகுதியாய் இருக்கின்றனர்;␢ பொய்க்குற்றம் சாட்டி␢ என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர்.␢ நான் திருடாததை␢ எப்படித் திருப்பித் தரமுடியும்?⁾5 ⁽கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்;␢ என் குற்றங்கள் உமக்கு␢ மறைவானவை அல்ல.⁾6 ⁽ஆண்டவரே! படைகளின் தலைவரே!␢ உமக்காகக் காத்திருப்போர்␢ என்னால் வெட்கமுறாதபடி செய்யும்;␢ இஸ்ரயேலின் கடவுளே!␢ உம்மை நாடித் தேடுகிறவர்கள்␢ என்பொருட்டு § மானக்கேடு அடையாதபடி செய்யும்.⁾7 ⁽ஏனெனில், உம் பொருட்டே␢ நான் இழிவை ஏற்றேன்;␢ வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.⁾8 ⁽என் சகோதரருக்கு␢ வேற்று மனிதனானேன்;␢ என் தாயின் பிள்ளைகளுக்கு␢ அயலான் ஆனேன்.⁾9 ⁽உமது இல்லத்தின்மீது␢ எனக்குண்டான ஆர்வம்␢ என்னை எரித்துவிட்டது;␢ உம்மைப் பழித்துப் பேசினவர்களின்␢ பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.⁾10 ⁽நோன்பிருந்து நான்␢ நெக்குருகி அழுதேன்;␢ அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று.⁾11 ⁽சாக்குத் துணியை␢ என் உடையாகக் கொண்டேன்;␢ ஆயினும், அவர்களது␢ பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.⁾12 ⁽நகர வாயிலில் அமர்வோர்␢ என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்;␢ குடிகாரர் என்னைப்பற்றிப்␢ பாட்டுக் கட்டுகின்றனர்.⁾13 ⁽ஆண்டவரே! நான் தக்க காலத்தில்␢ உம்மை நோக்கி␢ விண்ணப்பம் செய்கின்றேன்;␢ கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால்␢ எனக்குப் பதில்மொழி தாரும்;␢ துணை செய்வதில் நீர் மாறாதவர்.⁾14 ⁽சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து␢ என்னைக் காத்தருளும்;␢ என்னை வெறுப்போரிடமிருந்தும்␢ ஆழ்கடலிலிருந்தும்␢ என்னை விடுவித்தருளும்.⁾15 ⁽பெருவெள்ளம் என்னை␢ அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக!␢ ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக!␢ படுகுழி தன்வாய் திறந்து␢ என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!⁾16 ⁽ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;␢ உம் பேரன்பு நன்மை மிக்கது;␢ உமது பேரிரக்கத்தை முன்னிட்டு␢ என்னை நோக்கித் திரும்பும்.⁾17 ⁽உமது முகத்தை␢ அடியேனுக்கு மறைக்காதேயும்;␢ நான் நெருக்கடியான␢ நிலையிலிருக்கிறேன்;␢ என் மன்றாட்டுக்கு␢ விரைவில் பதில்மொழி தாரும்.⁾18 ⁽என்னை நெருங்கி,␢ என்னை விடுவித்தருளும்;␢ என் எதிரிகளிடமிருந்து␢ என்னை மீட்டருளும்.⁾19 ⁽என் இழிவும், வெட்கக்கேடும்,␢ மானக்கேடும் உமக்குத் தெரியும்;␢ என் பகைவர் அனைவரும்␢ உம் முன்னிலையில் இருக்கின்றனர்.⁾20 ⁽பழிச்சொல் என் இதயத்தைப்␢ பிளந்து விட்டது;␢ நான் மிகவும் வருந்துகிறேன்;␢ ஆறுதல் அளிப்பாருக்காகக்␢ காத்திருந்தேன்;␢ யாரும் வரவில்லை;␢ தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்;␢ யாரையும் காணவில்லை.⁾21 ⁽அவர்கள் என் உணவில்␢ நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்;␢ என் தாகத்துக்குக் காடியைக்␢ குடிக்கக் கொடுத்தார்கள்.⁾22 ⁽அவர்களுடைய விருந்துகளே␢ அவர்களுக்குக் கண்ணியாகட்டும்!␢ அவர்களுடைய படையல் விருந்துகளே␢ அவர்களுக்குப் பொறியாகட்டும்!⁾23 ⁽அவர்களின் கண்கள் காணாதவாறு␢ ஒளியிழக்கட்டும்!␢ அவர்களின் இடைகள்␢ இடையறாது தள்ளாடட்டும்!⁾24 ⁽உமது கடுஞ்சினத்தை␢ அவர்கள்மேல் கொட்டியருளும்;␢ உமது சினத்தீ␢ அவர்களை மடக்கிப் பிடிப்பதாக!⁾25 ⁽அவர்களின் பாசறை பாழாவதாக!␢ அவர்களின் கூடாரங்களில்␢ ஒருவனும் குடிபுகாதிருப்பானாக!⁾26 ⁽நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும்␢ கொடுமைப்படுத்துகின்றார்கள்;␢ நீர் காயப்படுத்தினவர்களின்␢ நோவைப் பற்றித்␢ தூற்றித் திரிகின்றார்கள்.⁾27 ⁽அவர்கள்மீது␢ குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்!␢ உமது நீதித் தீர்ப்பினின்று␢ அவர்களைத் தப்ப விடாதேயும்!⁾28 ⁽மெய்வாழ்வுக்குரியோரின்␢ அட்டவணையிலிருந்து␢ அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்!␢ அவற்றை நேர்மையாளரின்␢ பெயர்களோடு சேர்க்காதேயும்!⁾29 ⁽எளியேன் சிறுமைப்பட்டவன்;␢ காயமுற்றவன்;␢ கடவுளே! நீர் அருளும் மீட்பு␢ எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!⁾30 ⁽கடவுளின் பெயரை␢ நான் பாடிப் புகழ்வேன்;␢ அவருக்கு நன்றி செலுத்தி,␢ அவரை மாட்சிமைப்படுத்துவேன்;⁾31 ⁽காளையை விட␢ இதுவே ஆண்டவருக்கு உகந்தது;␢ கொம்பும் விரிகுளம்பும்␢ உள்ள எருதைவிட␢ இதுவே அவருக்கு உகந்தது.⁾32 ⁽எளியோர் இதைக் கண்டு␢ மகிழ்ச்சி அடைவார்கள்;␢ கடவுளை நாடித் தேடுகிறவர்களே,␢ உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.⁾33 ⁽ஆண்டவர்␢ ஏழைகளின் விண்ணப்பத்திற்குச்␢ செவிசாய்க்கின்றார்;␢ சிறைப்பட்ட தம் மக்களை␢ அவர் புறக்கணிப்பதில்லை.⁾34 ⁽வானமும் வையமும் கடல்களும்␢ அவற்றில் வாழும் யாவும்␢ அவரைப் புகழட்டும்.⁾35 ⁽கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்;␢ யூதாவின் நகரங்களைக்␢ கட்டி எழுப்புவார்;␢ அப்பொழுது அவர்களுடைய மக்கள்␢ அங்கே குடியிருப்பார்கள்;␢ நாட்டைத் தங்களுக்குச்␢ சொந்தமாக்கிக் கொள்வார்கள்.⁾36 ⁽ஆண்டவருடைய அடியாரின் மரபினர்␢ அதைத் தம்␢ உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;␢ அவரது பெயர்மீது அன்பு கூர்வோர்␢ அதில் குடியிருப்பர்.⁾